நீங்க கனவிலும் யோசிக்காத காரணங்கள்! பிரபலங்கள் விவாகரத்து பின்னணி தெரிந்தால் மிரண்டு போவீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோக்களில் ஒருவராக இருந்த ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விட்டுப் பிரிந்து வாழ்வதாக அறிவித்துள்ளார். கடந்த சில காலமாகவே பிரபலங்களிடையே விவாகரத்து என்பது அதிகரித்துள்ளது. இதற்கு என்ன காரணம்.. பிரபலங்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்க என்ன காரணம் என்பதை நாம் பார்க்கலாம்.

நடிகர் ஜெயம் ரவி- ஆர்த்தி ஜோடி பிரிந்து வாழ்ந்து வருவதாக சில காலமாகவே இணையத்தில் தகவல் பரவின. இருப்பினும், அதை இரு தரப்பும் ஒப்புக் கொள்ளவில்லை. ஜெயம் ரவி இன்று இதை அறிவித்தார்.

jayam ravi aarthi divorce

பிரபலங்களிடையே விவாகரத்து என்பது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. ஏ எல் விஜய்- அமலா பால், ஜி வி பிரகாஷ்- சைந்தவி, நாக சைதன்யா- சமந்தா, தனுஷ்- ஐஸ்வர்யா என்று பெரிய லிஸ்ட் இருக்கிறது.

ஆய்வு: சினிமா பிரபலங்கள் இடையே மட்டும் விவாகரத்து அதிகளவில் நடப்பது ஏன் என்ற கேள்வி பலருக்கும் எழும். இது தொடர்பாகவே டென்வர் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறை விரிவான ஆய்வை நடத்தியது. அதில் அவர்கள் சராசரி மக்களைக் காட்டிலும் பிரபலங்கள் இடையே விவாகரத்து அதிகளவில் நடப்பது ஏன் என்ற காரணத்தைப் பட்டியலிட்டுள்ளனர். பிரபலங்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் என்ன என்பதை அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

காரணங்கள்: முதல் காரணம் தங்களுக்கென குறைவான நேரத்தை ஒதுக்குவது. என்னப்பா பிரபலங்களுக்கு இது ஒரு பிரச்சினையா எனக் கேட்கலாம்.. உண்மையில் இதுதான் முக்கிய பிரச்சினை.. சராசரி தம்பதியைப் போல எல்லா நாளும் இவர்களால் ஒன்றாக இருக்க முடிவதில்லையாம். இதனால் இருவரும் அதிக நேரம் செலவிட முடிவதில்லை. பிஸியான வேலை, எப்போதும் பயணித்துக் கொண்டே இருப்பது இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. பிரபலங்கள் பெரும்பாலும் 25%க்கும் குறைவான நேரத்தையே தங்கள் பாட்னருடன் செலவிடுகிறார்களாம். இதுவே பிரிவுக்கான முதல் காரணம்.

நிதி மேலாண்மையும் மற்றொரு முக்கிய காரணமாகும். சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருவரது வருமானமும் முக்கியமானதாக இருக்கும். ஒருவரது வருமானம் இல்லை என்றாலும் குடும்பத்தை நடத்துவது சிரமம் என்ற சூழலே இருக்கும். இதுவே கருத்து வேறுபாடுகளைக் கடந்து இருக்க முக்கிய காரணமாக இருக்கிறது. ஆனால், பிரபலங்கள் அப்படி இல்லை. அவர்கள் நிதிக்காக தங்கள் பாட்னரை சார்ந்து இருப்பது இல்லை. இதனால் சின்ன சின்ன சண்டைகளும் பிரிவில் சென்று முடிகிறது.

நீங்க யோசிக்காத காரணம்: அடுத்தது எதார்த்தத்தை ஏற்க மறுப்பது. பிரபலத்தின் வாழ்க்கை என்றாலே நமக்கு அவர்களின் செல்வச் செழிப்பான வாழ்க்கை கண் முன்பு வரும். ஆனால், திருமண வாழ்க்கை என்பது அதைத் தாண்டி பல விஷயங்களைக் கொண்டதாக இருக்கும். திருமணத்திற்குப் பிறகு சில மாதங்கள் எந்தவொரு பிரச்சினையும் தெரியாது. ஆனால், அதன் பின்னர் நாட்கள் செல்ல செல்லவே தம் பிரச்சினைகளை உணர தொடங்குவார்கள்.

பிரபலங்கள் தங்கள் வயது வித்தியாசத்தை ஒதுக்கி வைத்துவிட்டு எப்படியும் காதல் மற்றும் திருமணத்தைத் தொடர்வதில் பெயர் பெற்றவர்கள். பலர் வயதை வெறும் எண்ணாகப் பார்க்கும்போது, ​​பெரிய வயது இடைவெளிகளைக் கொண்ட திருமணங்கள் விவாகரத்துக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியவை என்பதே உண்மை.

இதுவும் பிரச்சினை தான்:
அதேபோல வயது வேறுபாடு.. தங்களை விட அதிக வயது மூத்தவர்கள் அல்லது இளையவர்களைத் திருமணம் செய்வது என்பது பிரபலங்கள் இடையே சர்வ சாதாரணமாக நடக்கும். இது தொடர்பாக யாராவது கேள்வி கேட்டால் வயது என்பது வெறும் நம்பர் தான் என்ற பதில் வரும். ஆனால், உண்மையில் அதிக வயது இடைவெளிகளைக் கொண்ட தம்பதிகளுக்கு இடையே அதிகம் விவாகரத்து ஏற்படுகிறதாம். ஆய்வுகள் இதை உறுதி செய்கிறது.

இவை தவிரப் புகழால் வரும் அழுத்தம், வாழ்க்கை முறை வேறுபாடுகள், ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இல்லாமல் இருப்பது, புரிதல் இல்லாமல் இருப்பது ஆகியவையும் பிரபலங்களிடையே விவாகரத்து அதிகரிக்க முக்கிய காரணங்களாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+