எல்லாம் நடிப்புங்க! டெல்லி மாஸ்டர் பிளான் இது! அதிமுக - பாஜக முறிவு.. சீக்ரெட்டை கண்டுபிடித்த திமுக?
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி முறிவு என்பது பெரிய நடிப்பாக இருக்கலாம், இதற்கு பின் சதித்திட்டம் ஒன்று இருக்கலாம் என்றும் திமுகவின் டாப் லீடர்கள் கருதுகிறார்களாம்.
அதிமுக பாஜக இடையிலான கூட்டணி நேற்று முறிந்தது. பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை தவறாக பேசி வருகிறார். தொடர்ந்து எங்கள் தலைவர்களை அவமதித்து வருகிறார். அதனால் அவருடன் கூட்டணியை தொடர முடியாது.

எனவே பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொள்கிறோம் என்று அதிமுக அறிவித்துள்ளது. அதோடு 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம். தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்று அதிமுக கூறியுள்ளது.
இந்த நிலையில்தான் அதிமுக - பாஜக கூட்டணி முறிவு என்பது பெரிய நடிப்பாக இருக்கலாம், இதற்கு பின் சதித்திட்டம் ஒன்று இருக்கலாம் என்றும் திமுகவின் டாப் லீடர்கள் கருதுகிறார்களாம். அதன்படி அதிமுக பாஜக கூட்டணி முறிவு என்பதே பெரிய நாடகமாக இருக்கலாம் என்று திமுக தலைவர்கள் வட்டாரம் தெரிவிக்கின்றன.
பின்வரும் விஷயங்களை அவர்களின் சந்தேகத்திற்கு காரணங்களாக தெரிவிக்கின்றனர்.
1. அதிமுக - பாஜக கூட்டணி முறியும் வகையில் இப்போது பெரிதாக எதுவும் நடக்கவில்லை. ஏனென்றால் இதற்கு முன்பே ஜெயலலிதா உள்ளிட்ட அதிமுக தலைவர்களை பாஜக அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். அப்போதெல்லாம் உடையாத கூட்டணி இப்போது உடைய என்ன காரணம்? கண்டிப்பாக இதற்கு பின் வேறு ஒரு ரகசிய திட்டம் இருக்கலாம்.
2. பாஜகவுடன் இப்போது கூட்டணியை முறிக்கலாம். அதன்பின் இரண்டு- மூன்று எம்பிகளை பாஜக இல்லாமல் அதிமுக லோக்சபா தேர்தலில் பெறும். அதன்பின் லோக்சபாவில் பாஜகவிற்கு ஆதரவு தேவைப்பட்டால் அதிமுக கொடுக்கும். தமிழ்நாட்டில் பாஜகவுடன் இருந்தால் வெல்ல முடியாது என்பதால் தேர்தலை தனியாக சந்தித்துவிட்டு தேர்தலுக்கு பின் இவர்கள் கூட்டு சேரலாம்.
3. எடப்பாடி தொடங்கி அதிமுகவின் டாப் தலைகளுக்கு எதிராக பல வழக்குகள் உள்ளன. இதை மீறி அவர்கள் கூட்டணியை உடைக்க வாய்ப்பு இல்லை.
4. இப்போது கூட்டணி இல்லாததால் ஆளுநர் ரவி எடப்பாடி மீதான வழக்குகளில் ஆக்சன் எடுக்க அனுமதி கொடுப்பாரா? கூட்டணி காரணமாக காப்பாற்றி வந்தார். இனி அப்படி செய்வாரா என்றும் திமுகவினர் கேட்கின்றனர்.
5. இஸ்லாமிய வாக்குகளையோ கவர அதிமுக இப்படி செய்யும் வாய்ப்புகள் உள்ளன.தேர்தலுக்கு பின் இவர்கள் கூட்டு சேருவார்கள்.
6. பாஜக தலைவர்களை விமர்சனம் செய்ய கூடாது என்று எடப்பாடி கூறி உள்ளார். இதற்கு அர்த்தம் என்ன? லோக்சபா தேர்தலுக்கு பின் இவர்கள் மீண்டும் கூட்டு சேருவார்கள் என்பது தானே?

7.திமுக கூட்டணியை உடைக்க இந்த திட்டம் போடலாம். நாங்கள் பாஜக கூட்டணியில் இல்லை என்று கூறி விசிக உள்ளிட்ட கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக முயலும் வாய்ப்புகள் உள்ளன. திமுகவின் வலுவான கூட்டணியை உடைக்க பாஜகவை எதிர்ப்பது போல பாஜக எதிர்க்கலாம்.,
8. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கூட அமித் ஷாவை எடப்பாடி பார்த்தார். கடந்த மாதம் கூட என்டிஏ கூட்டத்தில் மோடிக்கு அருகில் எடப்பாடி அமர்ந்து இருந்தார். அவர்களா கூட்டணியை உடைப்பார்கள்.. கதை விட வேண்டாம்.. என்று திமுகவினர் கிண்டல் செய்கின்றனர்.
இதன் காரணமாகவே அதிமுக - பாஜக கூட்டணி முறிவு என்பது பெரிய நடிப்பாக இருக்கலாம், இதற்கு பின் சதித்திட்டம் ஒன்று இருக்கலாம் என்றும் திமுகவின் டாப் லீடர்கள் கருதுகிறார்களாம்.












Click it and Unblock the Notifications