விஜய் vs உதயநிதி.. காயினை திருப்பி போடப்போகும் திமுக.. அப்படியே மாறும் காட்சிகள்.. இவ்வளவு நடக்குதா?
சென்னை: நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள ஆளும் திமுக முக்கியமான திட்டம் ஒன்றை வகுத்து உள்ளதாம்.
சமீபத்தில் மாணவர்களுக்கு விருது வழங்கும் இரண்டாம் கட்ட விழாவில் பேசிய விஜய் தற்போது நேரடியாக பாஜகவின் அடிப்படை கொள்கையையே எதிர்த்து உள்ளார். பாஜக உறுதியாக இருக்கும் நீட் விவகாரத்தில் கடுமையான கருத்துக்களை விஜய் வைத்துள்ளார்.

விஜய் பேச்சு: அதில், தொடர்ந்து நடந்துவரும் குளறுபடிகளால் நீட் தேர்வு மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். இனி நாடு முழுவதும் நீட் தேர்வு தேவை இல்லை என்பதுதான் இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம். நீட் விலக்குதான் இதற்கு உடனடி தீர்வு.
சிறப்பு பொதுப்பட்டியலை உருவாக்கி கல்வி, சுகாதாரத்தைத் மாநில பட்டியலில் கொண்டுவர வேண்டும் கல்வி, சுகாதாரத்தில் மாநில அரசுகளுக்கு முழு உரிமை வழங்கப்பட வேண்டும். மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு NCERT முறையில் தேர்வு வைத்தால் எப்படிச் சரியாக இருக்கும்?
தொடர்ந்து நடந்துவரும் குளறுபடிகளில் நீட் தேர்வு மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். நாடு முழுவதும் நீட் தேர்வு தேவை இல்லை என்பதுதான் இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது. நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது. 'ஒரே நாடு ஒரே பாடம் ஒரே கல்வி' என்பது கல்வி கற்கும் நோக்கத்துக்கு எதிரானது, என்று விஜய் பாஜக அரசியலுக்கு எதிராக பேசி உள்ளார்.
இதன் மூலம் தான் திமுகவை மட்டும் எதிர்க்க போவது இல்லை.. இனி பாஜகவையும் எதிர்க்க போகிறேன் என்பதை வெளிப்படையாக விஜய் அடித்து சொல்லி உள்ளார். இதில் ஒன்றிய அரசு என்றெல்லாம் கூறி விஜய் நேரடியாக பாஜகவை எதிர்த்து உள்ளார்.
உதயநிதி மாற்று?: இந்த நிலையில்தான் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள ஆளும் திமுக முக்கியமான திட்டம் ஒன்றை வகுத்து உள்ளதாம். நடிகர் விஜய் திடீரென நீட் எதிர்ப்பு, ஒன்றிய அரசு என்றெல்லாம் பேச தொடங்கி இருப்பது திமுக ஆதரவு நிலைப்பாடு என்று வெளிப்படையாக தோன்றினாலும்.. உள்ளுக்குள் திமுகவின் வாக்கு வங்கியை குறி வைப்பதே அவரின் நோக்கம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
அதன்படி நீட்டை எதிர்த்து.. எங்களின் கொள்கையும் மாநில நலன்தான். அதனால் திமுகவை விட நாங்கள் சிறந்த மாற்றாக இருப்போம் என்று விஜய் கருத்தை முன்வைக்கிறார்.
இந்த நிலையில்தான் விஜய்க்கு பதிலடியாக உதயநிதியை களத்தில் முன்னிறுத்த உள்ளனர். ஏற்கனவே உதயநிதிதான் அரசியல் ரீதியான முடிவுகளை திமுகவில் எடுக்கிறார். எம்பிக்கள் உதயநிதி வாழ்க என்று கோஷமிடும் அளவிற்கு உதயநிதி கட்சியை கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
கட்சி அவரின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் இன்னும் ஆட்சி முழுமையாக உதயநிதி கட்டுப்பாட்டில் வரவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய்யின் அரசியலுக்கு பதிலடியாக.. உதயநிதியை ஆட்சி அதிகாரத்திலும் முன்னிறுத்த உள்ளனராம்,
ஸ்டாலின் முடிவு: விஜய்க்கு எதிராக ஸ்டாலினை முன்னிறுத்த முடியாது. ஸ்டாலினின் அனுபவம் இதை எல்லாம் வைத்து விஜய்யை ஸ்டாலின் கண்டுகொள்ள மாட்டார் என்கிறார்கள். மாறாக விஜய்க்கு உதயநிதி மட்டுமே பதிலடி கொடுப்பார் என்று கூறப்படுகிறது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அவர்தான் இனி ஆட்சி அதிகாரத்தில் முழு கவனம் செலுத்த போகிறார். அதேபோல் அமைச்சரவையிலும் பெரிய மாற்றம் வரப்போவதாக செய்திகள் வருகின்றன. விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியிலும், கட்சிக்கு வெளியே அதிகாரத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ஸ் கூடிக்கொண்டே வருகிறது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: சமீபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், துணை முதல்வர் பொறுப்பு குறித்து அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ''நான் எப்படி அதைச் சொல்ல முடியும் ? முதல்வர்தான் முடிவு எடுப்பார் '' என்று கூறினார் உதயநிதி ஸ்டாலின். இதே போன்ற கேள்வி இதற்கு முன்பும் பல முறை அவரிடம் கேட்கப்பட்டிருக்கிறது.
அப்போதெல்லாம், எனக்கே தெரியாத விசயங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரிகிறது. இதையெல்லாம் உங்களுக்கு யார் சொல்கிறார்கள்.. எனக்கு அப்படி எதுவும் தகவல் வரவில்லையே.. உங்களுக்கு எங்கிருந்து இது போன்ற தகவல்கள் வருகின்றன.. எனக்கு அப்படி தெரியவில்லையே ? '' என்கிற ரீதியில் மறுத்தே வந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
துணை முதல்வர் : ஆனால், இந்த முறை அப்படி எதுவும் மறுக்காமல், அதை எல்லாம் முதல்வர் முடிவெடுப்பார் என்று சொல்லி உள்ளார். அதாவது துணை முதல்வர் பற்றி முதல்வர் முடிவு எடுக்கட்டும் என்று உதயநிதி சொல்லாமல் சொல்லி இருக்கிறார். இப்படி சொல்லியிருப்பதன் மூலம், துணை முதல்வராக்க ஸ்டாலின் முடிவு செய்து விட்டார். அதனை எப்போது அறிவிக்க வேண்டும் என்பது மட்டும் தான் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று இளைஞரணி மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.
முக்கியமாக பிறந்தநாள் விழாவில் உதயநிதி ஸ்டாலினுக்கு நிர்வாகிகள் கொடுத்த முக்கியத்துவம் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. கடந்த பிறந்த நாளை விட இந்த பிறந்த நாளில் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு பின்பும் உதயநிதி ஸ்டாலினின் துணை முதல்வர் பதவி திட்டங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் அடுத்த மாதம் முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளிநாடு பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் நிலையில், விரைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.












Click it and Unblock the Notifications