10 - 12% வாக்கு இருக்கு! விஜயை உள்ளே இருக்க தீவிரமாக காய் நகர்த்தும் எடப்பாடி.. இப்படி ஒரு காரணமா!
சென்னை: அதிமுக கூட்டணிக்குள் விஜயை கொண்டு வருவதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி தொடங்கிவிட்டதாக செய்திகள் உலவ தொடங்கி உள்ளன. விஜயை தன் பக்கம் இழுக்க எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயல்வதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணிக்கு புதிய கட்சி ஒன்று வருவதாக எடப்பாடி பழனிசாமி கூறி இருப்பது பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. காட்டுமன்னார் கோவில் பகுதியில் எடப்பாடி பழனிசாமி நேற்று பேசுகையில், விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு.. அனுமதி அளிக்கப்படுவதில்லை.. திருச்சியில் விசிக மாநாட்டிற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்.. விசிகவின் கொடிக்கம்பம் நடுவதைத் தடுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்த கூட்டணியில் இருக்க வேண்டும்?

இந்த அவமானப்பட்டுமா திமுக உடனான கூட்டணியில் தொடர வேண்டும்? சிந்தித்து பாருங்கள்.. அதிமுகவைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்போம். கூட்டணி என்பது சூழ்நிலைக்கு தக்கவாறு அமைப்பது சரியாக இருக்கும்.
அடுத்து பாருங்க.. ஒரு பெரிய கட்சி எங்க கூட்டணிக்கு வரப்போகிறது.. பிரம்மாண்டமான கட்சி.. எதிர்பார்த்துக்கொண்டு இருங்கள்.. வருவதை பாருங்கள்.. ஸ்டாலின் அவர்களே.. பிரமாதமான கட்சி எங்கள் கூட்டணிக்கு வரப்போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்.. நாங்கள் 234 தொகுதிகளில் 230 தொகுதிகளில் வெல்வோம். அதோடு தனித்து ஆட்சி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
எடப்பாடி பழனிசாமி விஜய் கூட்டணி
அதிமுக கூட்டணிக்கு புதிய கட்சி ஒன்று வருவதாக எடப்பாடி பழனிசாமி கூறி இருப்பது பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. விஜயைத்தான் எடப்பாடி பழனிசாமி இப்படி குறிப்பிடுவதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணிக்குள் விஜயை கொண்டு வருவதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி தொடங்கிவிட்டதாக செய்திகள் உலவ தொடங்கி உள்ளன. விஜயை தன் பக்கம் இழுக்க எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயல்வதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
காரணம் 1 - அதிமுகவில் இளைஞர்கள் இல்லை. அதிமுக தலைவர்கள் பெரும்பாலும் சீனியர்கள். இதனால் இளைஞர்களும் பெரும்பாலும் அதிமுகவை கண்டுகொள்வது இல்லை. இதன் காரணமாக இளைஞர்கள் ஆதரவு கொண்ட கட்சி கூட்டணி தேவை.
காரணம் 2 - தமிழக வெற்றிக் கழகத்திடம் பெரிய இளைஞர் பட்டாளம் உள்ளது. முக்கியமாக முதல் தலைமுறை வாக்காளர்கள் நிறைய பேர் விஜய் பக்கம் செல்ல வாய்ப்புள்ளது. இவர்களை பிடித்தால் திமுகவிற்கு செக் வைக்க முடியும். இதனால் தமிழக வெற்றிக் கழகத்தை இழுக்க எடப்பாடி திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
காரணம் 3 - தமிழக வெற்றிக் கழகத்திடம் உத்தேசமாக 10-12 சதவிகிதம் வரை வாக்குகள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் எளிதாக அதிமுக ஆட்சி அமைக்க முடியும் . இதன் காரணமாகவே விஜயை இழுக்க எடப்பாடி நினைப்பதாக கூறப்படுகிறது.
முதல்வர் வேட்பாளர்
இதனால் அதிமுக பாஜக கூட்டணியை உடைத்து தமிழக வெற்றிக் கழகம் உடன் கூட்டணி வைத்தாலும் வியப்பில்லை. ஆனால் இங்குதான் வேறு ஒரு சிக்கல் எழுந்துள்ளது. அதே சமயம் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகம் எடுத்துள்ள முடிவு அதிமுகவிற்கு சிக்கலாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. முன்னதாக தவெக செயற்குழு கூட்டத்தில் 2026 சட்டசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் அதிமுக - பாஜகவின் கூட்டணி அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மெகா கூட்டணி அமைக்க பாஜக திட்டமிட்டு வந்த நிலையில், அந்தக் கூட்டணியில் தவெக இணையாது எனத் தெரிகிறது. ஒருவேளை முதல்வர் வேட்பாளர் ஆசையை விட்டுக்கொடுத்தால் அதிமுக - தவெக கூட்டணி உருவாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.












Click it and Unblock the Notifications