பால் உற்பத்தி அதிகரித்தும் நெய் விலை உச்சம் தொடுவது ஏன்? யாருமே எதிர்பார்க்காத 3 காரணங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் பால் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நெய் விலை மட்டும் ஏன் உயர்ந்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. நாட்டில் பால் உற்பத்தி அதிகரிப்பதால் நெய் விலையும் குறைய தான் வேண்டும். ஆனால், அதற்கு நேர் மாறாக உயர்ந்து வருகிறது. இதற்கு என்ன காரணம்.. பின்னணி தொடர்பாக நாம் பார்க்கலாம்!

இப்போது உண்மையில் ஏற்பட்டிருப்பது ஒட்டுமொத்த பால் தட்டுப்பாடு அல்ல.. மாறாக பாலில் இருந்து கிடைக்கும் கொழுப்புச்சத்து தட்டுப்பாடுதான். இதுவே நெய், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகியுள்ளது.

Ghee milk

பால் உற்பத்தி

இந்தியாவின் பால் உற்பத்தி 2016ஆம் ஆண்டில் 165.1 மில்லியன் டன்னாக இருந்தது. 2025ஆம் ஆண்டில் இது 216.5 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. 2026ஆம் ஆண்டில் 222 மில்லியன் டன்னாகவும், 2027ஆம் ஆண்டில் 226.5 மில்லியன் டன்னாகவும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது பால் உற்பத்தி ஆண்டுதோறும் வளர்ந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும், நெய் தயாரிக்க தேவையான கொழுப்புச்சத்து போதுமான அளவில் கிடைப்பதில்லை.

பாலில் கொழுப்புச்சத்து, கொழுப்பு நீக்கிய திடப்பொருட்கள் என இரண்டு முக்கிய பிரிவுகள் உள்ளன. SNFல் புரதம், லாக்டோஸ், தாதுக்கள் போன்றவை அடங்கும். பால் உற்பத்தி அதிகரிப்பது மட்டுமே நெய் தயாரிக்க தேவையான கொழுப்பின் அளவு அதிகரித்துவிட்டது என்று அர்த்தமல்ல. குறிப்பாக, பால் கொழுப்புச்சத்து குறைவாக இருந்தால்.. அதிலிருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய், நெய் ஆகியவற்றின் உற்பத்தியும் பாதிக்கப்படும்.

நெய், வெண்ணெய்

கடந்த மூன்று ஆண்டுகளில் நெய், வெண்ணெய் விலை ஏறியுள்ளது தெளிவாக தெரிகிறது.. 2023 அக்டோபர் முதல் 2026 அக்டோபர் வரை பால் பண்ணைகளில் விற்கப்படும் வெண்ணெய்யின் விலை 54.3 சதவீதம் உயர்ந்து, கிலோ ரூ.348ல் இருந்து ரூ.537 ஆக அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில் கொழுப்பு நீக்கிய பால் பவுடரின் விலை 18 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. அதாவது பாலை விட கொழுப்புச்சத்துக்கான தேவை அதிகமாக இருப்பதையே இது காட்டுகிறது.

என்ன நடக்கிறது

ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு பிறகு ஐஸ்கிரீம், நெய், வெண்ணெய், சீஸ் போன்ற அதிக கொழுப்புள்ள பால் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் ஏற்கெனவே குறைவாக இருக்கும் கொழுப்புச்சத்துக்கான போட்டி மேலும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், கலப்பட நெய்க்கு எதிராக உணவு பாதுகாப்பு துறை மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. இதனால் தரமான கொழுப்புச்சத்து கொண்ட பால் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு நடுவே இந்தியாவில் இருந்து நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால் கொழுப்பு பொருட்களின் ஏற்றுமதியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவும் உள்நாட்டு சந்தையில் நெய், வெண்ணெய் சப்ளையை பாதித்துள்ளது.

விலையேற்றம்

இதன் தாக்கம் ஏற்கெனவே விலைகளில் தெரிகிறது. அமுல் நிறுவனம் ஒரு லிட்டர் பசு நெய் பாக்கெட் விலையை ரூ.695ல் இருந்து ரூ.735 ஆக அதிகரித்துள்ளது. 500 கிராம் டேபிள் வெண்ணெய் விலையை ரூ.310ல் இருந்து ரூ.325ஆக உயர்த்தியுள்ளது. கர்நாடக பால் கூட்டமைப்பும் பால் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளதுடன், நந்தினி பால் விலையை லிட்டருக்கு ரூ.46ல் இருந்து ரூ.54 ஆகவும், ஒரு லிட்டர் நெய் விலையை ரூ.715ல் இருந்து ரூ.850 ஆகவும் உயர்த்தியுள்ளது.

3 காரணங்கள்

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் நெய் விலை உயர்வுக்கு 3 காரணங்கள் சொல்லலாம்.. முதலில் அதிக கொழுப்புச்சத்து கொண்ட பால் பொருட்களுக்கான நுகர்வோர் தேவை அதிகரித்துள்ளது. அடுத்து கலப்படத்துக்கு எதிரான நடவடிக்கைகள். மூன்றாவது காரணம், பால் கொழுப்புப் பொருட்களின் ஏற்றுமதி. இவை எல்லாம் சேர்த்து தான் நெய் விலையை உச்சத்திற்கு எடுத்து சென்றுள்ளது.

அடுத்து என்ன

எனவே, பால் உற்பத்தி அதிகரிக்கிறது என்பதற்காக நெய் விலை குறைய வேண்டும் என்ற அவசியமில்லை. பால் கொழுப்புச்சத்து கிடைக்கும் அளவு, கொள்முதல் செலவு, ஏற்றுமதி உள்ளிட்ட காரணங்கள் தான் நெய் விலையை தீர்மானிக்கின்றன. குளிர்காலத்தில் பால் உற்பத்தி அதிகரிக்கும் காலம் வருவதால், அடுத்த சில மாதங்களில் நிலைமை ஓரளவு மாறலாம். ஆனால், எல் நினோ காரணமாக வறட்சி ஏற்பட்டு தீவனத் தட்டுப்பாடு உருவானால், எதிர்காலத்தில் பால் உற்பத்தியே பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+