இந்தியாவின் முதல் ட்ரோன் சோதனை மையம் தமிழகத்தில் அமைவது ஏன்? பின்னணியில் உள்ள சூப்பர் காரணங்கள்
சென்னை : இந்தியாவின் முதல் ட்ரோன் சோதனை மையம் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பூங்காவில் அமைய உள்ளது. இந்த சோதனை மையம் ஏன் தமிழகத்தில் அமைகிறது தெரியுமா? அதற்கான காரணங்களையும், தமிழக அரசின் அறிவிப்பினையும் விரிவாக பார்ப்போம்.
தமிழ்நாட்டில் ட்ரோன் சோதனை மையம் அமைய என்ன காரணம்: பொதுவாக கனரக வாகனங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதி என்றால், அது தமிழ்நாடு தான். குறிப்பாக சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் தான் பல தொழிற்சாலைகள் உள்ள பகுதிகள் ஆகும். கார்கள் இந்தியாவில் அதிகம் வந்த போது தமிழகம் தான் பெரும்பாலான தொழிற்சாலைகளை கைப்பற்றியது. அந்த வகையில் இப்போது ட்ரோன்கள் தான் இனி அதிகம் வரப்போகின்றன. அந்த தொழிற்சாலைகளையும் தமிழகம் முன்னோடியாக கைப்பற்றி உள்ளது.

ட்ரோன் தொழில் 22% அளவிற்கு ஒவ்வொரு வருடமும் வளரும் என்றும் 2025 ஆம் ஆண்டுக்குள் ரூ.28,000 கோடி சந்தை மதிப்பு இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பறக்கும் ட்ரோன்கள் இனி அதிக அளவில் பயன்பாட்டில் இருக்க போகிறது. சாப்பாடு எடுத்து செல்வது முதல், கொரியர் டெலிவரி பல விஷயங்களுக்கு வரும் காலத்தில் ட்ரோன்கள் பயன்பாட்டிற்கு வர வாய்ப்பு உள்ளது. செல்போன் எப்படி ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறதோ, அதுபோல் ட்ரோன் எல்லோருடைய வீட்டிலும் இருக்க போகிறது.
தமிழ்நாட்டில் பல எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு சார்ந்த தொழில் நிறுவனங்கள் இருப்பதால், இஎம்ஐ/இஎம்சி மற்றும் தகவல் தொடர்பு சோதனை தொடர்பான ஆய்வகங்களுக்கு தமிழ்நாட்டிற்கு பெரிய வாய்ப்புகள் இருக்கின்றன.அதன் காரணமாகவே ட்ரோன் சோதனை மையம் தமிழகத்தில் இந்தியாவிலேயே முதல்முறையாக அமைகிறது.
எனவே UAV எனப்படும் ட்ரோன்கள் தேவைக்கு இனி இந்தியா வெளிநாடுகளை சார்ந்திருக்க தேவை இருக்காது. தற்போது ராணுவத்தில் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகிறது. ட்ரோன்கள் எதிரிகளின் இலக்குகளைக் கண்டறிந்து கண்காணிக்க பயன்படுத்தப்படுகிறது. ராணுவத்திற்கு ட்ரோன்கள் மிகப்பெரிய அளவில் உதவி வருகிறது. எதிரிகளின் இடங்களை கண்டறிய மிகத்தெளிவாக படம் பிடிக்கும் அதிநவீன கேமராக்கள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்ட ட்ரோன்கள் மூலம் பாதுகாப்பை பலப்படுத்த உதவுகிறது ட்ரோன்கள் மூலம் துல்லியமாக இடத்திற்கு சென்று எதிரிகளின் இடத்தில் குண்டுகளை வீச முடியும். ட்ரோன்கள் ராணுவத்திற்கு அளவற்ற நன்மைகளை வழங்க போகிறது. அந்த ட்ரோன்களின் சோதனை மையம் தான் தமிழ்நாட்டில் அமையப்போகிறது.
இது தொடர்பாக டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: "மத்திய அரசின் பாதுகாப்பு உள்கட்டமைப்பு சோதனை திட்டத்தின்கீழ் (டிடிஐஎஸ்), இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த ஆளில்லா விமான (ட்ரோன்) சோதனை மையத்தை அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) திட்டமிட்டிருக்கிறது. மத்திய அரசின் மானியத்துடன் இத்திட்டத்தை செயல்படுத்த டிட்கோ ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப் புள்ளியை கோரி உள்ளது.
அதன் அடிப்படையில், கெல்டிரான், சென்ஸ் இமேஜ், ஸ்டாண்டர்டு டெஸ்டிங் அண்ட் காம்ப்ளையன்ஸ் மற்றும் அவிக்ஷா ரீடெய்லர்ஸ் ஆகிய 4 நிறுவனங்கள் டிட்கோ வுடன் இணைந்து ரூ.45 கோடி மதிப்பீட்டில் ட்ரோன் சோதனை மையத்தை அமைக்க போகின்றன.
இந்த சோதனை மையம், ஆளில்லா விமானத்தின் ஆராய்ச்சி, வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் சோதனைகளுக்குத் தேவையான பல்வேறு வசதிகளை ஒரே இடத்தில் சர்வதேச தரத்தில் வழங்க போகிறது.

இந்த சோதனை மையம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் வடகாலில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் சுமார் 2.3 ஏக்கர் பரப்பளவில் அமையப் போகிறது. ஆளில்லா விமான உற்பத்தியில் தமிழகம் சர்வதேச மையமாக திகழவும், பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தற்சார்புத் தேவையைப் பூர்த்தி செய்யவும் இச்சோதனை மையம் வழிவகுக்க போகிறது.
இந்தியாவின் முதல் பொது ஆளில்லா விமான சோதனை மையம் தமிழகத்தில் அமைய இருப்பது, வான்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்திச் சூழலில் உயரிய இடத்தை தமிழகம் அடையவேண்டும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் அர்ப்பணிப்புக்கு எடுத்துக்காட்டாகும்..
வான்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை தொடங்குவதற்கு விருப்பமான இடமாக தமிழகத்தை மாற்ற இந்த சோதனை மையம் உதவும்.இத்துறை மேலும் வளர தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இம்முயற்சிகளுக்கான பலன்கள் விரைவில் கிடைக்கும்" இவ்வாறு டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications