விருப்பம் இல்லைன்னா.. டீமை விட்டு போங்க பாஸ்.. சிஎஸ்கே அணிக்கு பிரஷர் தந்த வீரர்.. அப்போ தோனி?
சென்னை: சிஎஸ்கே அணியில் முக்கியமான வீரர் ஒருவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ரசிகர்கள் வைக்க தொடங்கி உள்ளனர்.
நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி கடைசி ஓவர் வரை போராடி தோல்வி அடைந்தது. நேற்று முதலில் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே அணி 200/4 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் கான்வே அதிரடியாக ஆடி 52 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார். இதில் 1 சிக்ஸர், 16 பவுண்டரிகள் அடக்கம்.
இன்னொரு பக்கம் ருத்துராஜ் 31 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். 17 பந்துகள் மட்டுமே பிடித்த சிவம் துபே 28 ரன்கள் எடுத்தார்.

கடைசியில் வந்த தோனி 4 பந்துகள் பிடித்து 2 சிக்ஸர் உட்பட 13 ரன்கள் எடுத்தார்.
சிஎஸ்கே அணி அதிக ரன்களை வெற்றி இலக்காக கொடுத்து இருந்தாலும் இன்னொரு பக்கம் பஞ்சாப் அணி மிடில் ஓவர்களில் சிறப்பாக ஆடி 201-6 ரன்களை எடுத்து வென்றது.
பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் சிங் 42 ரன்களை 24 பந்தில் அடித்தார். அதில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடக்கம்.
இன்னொரு பக்கம் தவான் 15 பந்தில் 28 ரன்கள் எடுத்தார். லியாம் லிவிங்ஸ்டன் இன்னொரு பக்கம் அதிரடியாக மிடில் ஓவர்களில் 40 ரன்களை 24 பந்துகளில் எடுத்தார். அதேபோல் சாம் குரன் 20 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார்.
சிஎஸ்கே அணியில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகள், ஜடேஜா 2 விக்கெட்டுகள், பத்திரனா 1 விக்கெட்டுகளை எடுத்தனர்.

தோல்வி: சிஎஸ்கே அணியின் தோல்விக்கு மிடில் ஓவர்களில் சிஎஸ்கே சரியாக பேட்டிங் செய்யாததும், அதேபோல் மிடில் ஓவர்களில் சிஎஸ்கே சரியாக பவுலிங் செய்யாததுமே காரணம்.
முக்கியமாக நேற்று சிஎஸ்கே அணி 210 ரன்களுக்கு மேலே எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிடில் ஓவர்களில் பேட்டிங் செய்த ஜடேஜா சிக்ஸ், பவுண்டரி எதுவும் எடுக்காமல் மெதுவாக ஆடினார்.
10 பந்துகள் பிடித்த அவர்.. சிங்கிள்ஸ், 2 ரன்கள் என்று எடுத்துவிட்டு வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அவர் இந்த போட்டியில் மட்டுமின்றி மற்ற போட்டிகளிலும் இதேபோல்தான் செல்ப் எடுக்காமல் மெதுவாக ஆடி வருகிறார். பவுலிங்கில் நன்றாக போட்டு 2-3 விக்கெட்டுகள் எடுத்தாலும் பேட்டிங்கில் கடுமையாக சொதப்பி வருகிறார்.
விருப்பம் இல்லை: முக்கியமாக பேட்டிங்கில் விருப்பமே இல்லை என்பது போல அவர் ஆடி வருகிறார். ஏற்கனவே சிஎஸ்கே அணியில் கடந்த சீசனில் அவரின் கேப்டன்சி பறிக்கப்பட்ட காரணத்தால் அவர் அணி நிர்வாகம் மீது அதிருப்தியில் இருந்தார்.
இந்த சீசனில் அவர் சிஎஸ்கேவில் ஆடும் விருப்பதிலேயே இல்லை. தோனி அவரிடம் பேசி சமாதானம் செய்த காரணத்தினாலேயே அவர் மீண்டும் அணிக்குள் வந்தார்.
இந்த நிலையில்தான் அவரின் ஆட்டத்தை பார்த்துவிட்டு, விருப்பம் இல்லைன்னா.. டீமை விட்டு போங்க பாஸ் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர்.
இதனால்தான் ஜடேஜாவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ரசிகர்கள் வைக்க தொடங்கி உள்ளனர்.

தொடர் தோல்வி: 2023 ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றியை பதிவு செய்து வந்த சிஎஸ்கே அணி தற்போது தொடர்ச்சியாக தோல்வியை சந்திக்க தொடங்கி உள்ளது.
2023 ஐபிஎல் சீசன் எதிர்பார்ப்பை விஞ்சி விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. சிஎஸ்கே கேப்டன் தோனியின் கடைசி சீசனாக இது பார்க்கப்படுகிறது தற்போது புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே அணி 4ம் இடத்தில் உள்ளது.
இதுவரை 9 போட்டிகளில் ஆடிய சிஎஸ்கே அணி 4 போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்து உள்ளது. குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்து உள்ளது.
அதை தவிர மும்பை, பெங்களூர், கொல்கத்தா, ஹைதராபாத், புனே என்று டாப் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் எல்லாம் சிஎஸ்கே எளிதாக வென்றுவிட்டது.
இந்த நிலையில் நேற்று பஞ்சாப் அணியிடம் தோல்வி அடைந்தது சிஎஸ்கே அணி.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications