நாயுடு பேசியதும்.. நிமிர்ந்து அமர்ந்த ஸ்டாலின்.. புதிய தெம்பில் திமுக.. என்ன நடந்தது ஏர்போர்ட்டில்?
சென்னை: டெல்லி விமான நிலையத்தில் நடந்த மீட்டிங்கில் மு.க ஸ்டாலினிடம் சில விஷயங்களை சந்திரபாபு நாயுடு கூறி இருக்கிறார். அந்த விஷயங்கள்தான் ஸ்டாலினுக்கு தெம்பை வரவழைத்து உள்ளதாம்.
இந்திய அரசியல் பல எதிர்பார்க்காத திருப்பங்களை சந்தித்துக்கொண்டு இருக்கிறது. நொடிக்கு நொடி பல ஆச்சர்யமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. மாநில கட்சிகளே வேண்டாம். மாநில கட்சிகளை அழித்து ஒழிப்போம் என்று கூறி சுற்றிக்கொண்டு இருந்த பாஜக அதே மாநில கட்சிகளிடம் மண்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

தெலுங்கு தேசம் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
ரிசல்ட் என்று என்ன நடந்தது?; இந்த நிலையில்தான் ஜூன் 4ம் தேதி இரவு, வெகு நேரம் தனது குடும்பத்தினரிடமும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடமும் ரிசல்ட் குறித்தே குதூகலமாக விவாதித்தபடி இருந்தாராம் முதல்வர் ஸ்டாலின். நீண்ட மாதங்களுக்குப் பிறகு, ஸ்டாலின் உற்சாகமாக இருந்ததை அவரது குடும்பமே ரசித்திருக்கிறது. சந்திரபாபு நாயுடுவிடம் ஸ்டாலின் பேசியதை சீனியர்கள் சிலர் அவரிடம் கேட்டிருக்கிறார்கள்.
அப்போது மட்டும் அவரது முகம் சற்று மாறியிருக்கிறது. அதாவது, நாயுடுவுக்கு வாழ்த்துச் சொன்னோம். அவரும் நன்றி சொன்னார். இந்தியா கூட்டணிக்கு உங்கள் ஆதரவு தேவை என நாம் அவரிடம் கேட்க வில்லை. ஆனால், சரத்பவார், நமக்காகக் கேட்டிருக்கிறார். ஆனால், நாயுடுவோ, பாஜக கூட்டணியில் இணைந்துதான் தேர்தலை சந்தித்து வெற்றிப் பெற்றிருப்பதால் தன்னால் மாற இயலாது.
அரசியல் கணக்குகளைத் தாண்டி நம்பகத்தன்மை சார்ந்த விசயம் இது. அதனால், என்னை வலியுறுத்தாதீர்கள் எனச் சொல்லி மறுத்துள்ளார். இதை காங்கிரஸ் தலைமையிடம் சரத்பவார் சொல்லியிருக்கிறார். அதனால் நாயுடு நம் பக்கம் வருவார் என்பதில் நம்பிக்கை இல்லை'' என்று பகிர்ந்து கொண்டுள்ளார் ஸ்டாலின்.
திடீர் சந்திப்பு: இப்படிப்பட்ட நிலையில்தான் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவை முதல்வர் ஸ்டாலின் நேற்று முதல்நாள் டெல்லி விமான நிலையத்தில் சந்தித்தது மிகப்பெரிய அரசியல் ஸ்டேட்மெண்ட்டாக பார்க்கப்படுகிறது.
முதல் விஷயம் நாயுடு - ஸ்டாலின் இருவரும் நெருங்கிய நண்பர்கள். மிக மிக நெருக்கம். இது பாஜகவை கண்டிப்பாக உறுத்தும். இவர்கள் இருவரும் பரஸ்பரம் விசாரித்துக்கொண்டனர்.
இந்த சந்திப்பில் நாயுடு சொன்ன சில விஷயங்கள் ஸ்டாலினை உற்சாகத்திற்கு உள்ளாக்கி இருக்கிறதாம். பாஜகவை இனி நாயுடு வழியாக கண்ட்ரோல் செய்ய முடியும் என்று ஸ்டாலின் நினைக்கிறாராம். முக்கியமாக தமிழ்நாட்டிற்கு தேவையான விஷயங்களை செய்து கொள்ள முடியும் என்று நினைக்கிறாராம்.
நாயுடு மூலமாக இனி மாநில தேவைகளை ஸ்டாலின் காக்க முடியும். தமிழ்நாட்டின் தேவைகளை டெல்லியில் பிரஷர் போட இனி நாயுடு போதும். இவர்களுக்கு இடையிலான நட்பு கண்டிப்பாக பாஜகவிற்கு உறுத்தும், என்று அந்த சந்திப்பிற்கு பின் ஸ்டாலின் நம்புகிறாராம்.
என்ன சொன்னார்?: அந்த மீட்டிங்கில் ஸ்டாலினிடம் சில விஷயங்களை நாயுடு கூறி இருக்கிறார். அந்த விஷயங்கள்தான் ஸ்டாலினுக்கு தெம்பை வரவழைத்து உள்ளதாம். இந்திய அரசியல் பல எதிர்பார்க்காத திருப்பங்களை சந்தித்துக்கொண்டு இருக்கிறது. நொடிக்கு நொடி பல ஆச்சரியமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. விரைவில் இன்னும் சில ஆச்சரியங்கள் நடக்கும் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தினர்.












Click it and Unblock the Notifications