டிரம்பை துணிச்சலாக எதிர்த்த கனடா, சீனா, உக்ரைன், ஐரோப்பா.. "சைலண்ட்டாக" போன இந்தியா.. என்ன காரணம்?
சென்னை: சர்வதேச அளவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவுகளை பல்வேறு தலைவர்கள் எதிர்த்து வருகின்றனர். ஆனால் இந்தியா டிரம்ப்பை சமாதானம்
செய்யும் வகையில் சைலண்ட் முடிவுகளை எடுத்து வருகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு எதிராக மற்ற நாட்டு தலைவர்கள் கொடுத்த பதிலடிகளை இங்கே பார்க்கலாம்.

கனடா பதிலடி
கனடாவின் அடுத்த லிபரல் கட்சித் தலைவராகவும், கனடாவின் 24வது பிரதமராகவும் மார்க் கார்னி அறிவிக்கப்பட்டார், ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பதிலாக
அந்நாட்டின் பிரதமராக மார்க் கார்னி பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு கார்னி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கனடாவின் அடுத்த பிரதமர் மார்க் கார்னி, கனடா ஒருபோதும், எந்த வகையிலும், வடிவத்திலும் அமெரிக்காவின் திமிருக்கு அடிபணியாது. நாங்கள் ஒரு போதும் அமெரிக்காவின் மாகாணமாக இணைய மாட்டோம். அமெரிக்கர்கள் எங்களுக்கு மரியாதை
காட்டும் வரை எனது அரசாங்கம் கட்டணங்களை குறைக்காது.
டிரம்ப்பை நாங்கள் வெல்ல விட மாட்டோம். இந்த மோதலில் நாங்கள் உறுதியாக இருப்போம். நாங்கள் உணர்ந்து கொண்ட பாடம் ஒன்றுதான். எங்களுக்கு ஒரு அண்டை நாடு உள்ளது. இத்தனை காலம் நாங்கள் நம்பிய அந்த அண்டை நாட்டை இனியும் நம்ப முடியாது, என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு கார்னி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனா பதிலடி
சீனா மீது அமெரிக்கா மேற்கொண்டு உள்ள வர்த்தக போருக்கு சீனா பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளது. மற்ற நாடுகள் போல அமெரிக்காவை சமாளிக்க வரியை குறைக்காமல்.. சீனா பதிலடி ஆக்சன்களை எடுக்க தொடங்கி உள்ளது.
அதன்படி அமெரிக்காவிற்கு எதிராக சர்வதேச வர்த்தக மையத்தில் சீனா வழக்கு தொடுத்து உள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கைகள் உலக வர்த்தக போரை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறி சீனா வழக்கு தொடுத்து உள்ளது.
சீனாவிற்கு எதிராக அமெரிக்கா இன்று வர்த்தக போரை அறிவித்த நிலையில் அமெரிக்காவின் முடிவிற்கு பதிலடியாக சீனா பதில் வரியை விதித்து உள்ளது. அதன்படி இன்று டிரம்புக்கு பதிலடி கொடுத்தது சீனா. அமெரிக்காவில் இருந்து
இறக்குமதி செய்யப்படும் கோழி, கோதுமை, சோளம் மற்றும் பருத்திக்கு கூடுதல் 15% வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வர்த்தக போரை
அதிகாரபூர்வமாக டிரம்ப் தொடங்கி உள்ளார்.
அதன்படி மெக்சிகோ மற்றும் கனடா மீது 25 சதவீத வரிகளையும், சீனா மீது 10 சதவீத வரிகளையும் விதித்து அவர் உத்தரவிட்டு உள்ளார்.
உக்ரைன் பதிலடி
வெள்ளை மாளிகையில் வைத்தே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி டிரம்ப்பை விமர்சனம் செய்தார். இந்த சந்திப்பு இருவருக்கும் இடையில் கடுமையான மோதலில் முடிந்தது.
அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்சை நோக்கி உக்ரைன் அதிபர் கேள்விகளை வைத்ததே இந்த சண்டைக்கு காரணம் ஆகும். நேற்று வான்ஸ் பேசுகையில், அமெரிக்க ராஜாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போரை நிறுத்துவதற்காக ரஷ்யா உடன் ராஜதந்திர முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. உங்களின்
செயல்பாடு.. உங்களின் நாட்டிற்கே அழிவை ஏற்படுத்தி விடும்.. உங்களின் நிலைப்பாடு உங்களின் நாட்டை அழித்துவிடும், என்றார்.
இதை கேட்டு கோபப்பட்ட ஜெலன்ஸ்கி, ரஷ்யாவை நீங்கள் தடுக்கவே இல்லையே.. ரஷ்யா 2019ல் இருந்தே போரை மேற்கொண்டு வருகிறது. அவரை நீங்கள் தடுக்கவே இல்லை. நீங்கள் எதை ராஜாங்க செயல்பாடு.. ராஜதந்திர செயல்பாடு என்று சொல்கிறீர்கள்? போர் என்றால் சிக்கல்தான்.. உங்களுக்கும் ரஷ்யாவிற்கு இடையே கடல்
இருக்கிறது என்பதால் உங்களுக்கு ஆபத்து இல்லை என்று நினைக்க வேண்டாம். எதிர்காலத்தில் ரஷ்யாவால் உங்களுக்கும் ஆபத்து வரும், என்றார்.
இந்தியா அமைதி
ஆனால் டிரம்ப்பின் வரி விதிப்பு எச்சரிக்கைக்கு இந்தியா பதிலடி தரவில்லை. இதுவரை இந்தியா எந்த விதமான எதிர் கருத்தும் சொல்லவில்லை. சில அமெரிக்கா பொருட்களுக்கு இந்த வரியை குறைத்தது. போர்பன் விஸ்கி மீதான வரியை இந்தியா 150%ல் இருந்து 100% ஆக குறைத்துள்ளது. இந்த வரி குறைப்பு Suntory's Jim Beam போன்ற பிரபல அமெரிக்க பிராண்டுகளின் இறக்குமதிக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கப் பொருட்களுக்கு, குறிப்பாக மதுபானத்
துறையில் இந்தியாவின் நியாயமற்ற வரிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
விமர்சித்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
போர்பன் விஸ்கியின் அடிப்படை சுங்க வரி இப்போது 50% ஆகவும், கூடுதலாக 50% வரியுடன் மொத்தம் 100% ஆகவும் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு முன்பு, இந்த இறக்குமதிகளுக்கு 150% வரி விதிக்கப்பட்டது. ஆனால், இந்த வரி குறைப்பு போர்பனுக்கு மட்டுமே பொருந்தும், மற்ற மதுபான பொருட்களுக்கான கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை. அவற்றிற்கு தொடர்ந்து 150% வரி விதிக்கப்படும்.ஆனால் டிரம்ப்பின் இந்த எச்சரிக்கைக்கு இந்தியா பதிலடி தரவில்லை.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications