கவனிச்சீங்களா? டிவி முழுக்க முழுக்க மோடிதான்.. திடீரென அதிகரித்த பேட்டிகள்.. என்ன காரணம்?
சென்னை: லோக்சபா தேர்தல் தீவிரம் அடைந்து வரும் நிலையில் பிரதமர் மோடியின் தொலைக்காட்சி பேட்டிகள் அதிகரித்து வருகின்றன.
லோக்சபா தேர்தல் இறுதிக்கட்டம் நெருங்க நெருங்க பாஜக மிக தீவிரமாக பிரச்சாரம் செய்ய தொடங்கி உள்ளது. கிடைக்கிற கேப்பில் எல்லாம் எவ்வளவு கடுமையாக பிரச்சாரம் செய்ய முடியுமோ அதை செய்ய தொடங்கி உள்ளது.

2024 லோக்சபா தேர்தல் தொடக்கத்தில் 400 இடங்களை பெறுவோம் என்று பாஜக முழக்கம் வைக்க தொடங்கியது. ஆப் கி பார்.. சார்சோ பார் என்று கோஷம் போட்டது. அதாவது இந்த முறை 400 இடங்களில் வெல்வோம் என்று கோஷம் போட்டது.
பாஜக கோஷம்: ஆனால் பாஜக இப்படி கோஷமிட்டது கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி உள்ளது. 400 இடங்களை வெல்வோம் என்று அந்த கட்சியின் முழக்கம் முதல் கட்ட தேர்தலில் மிக பலமாக ஒலித்தது. ஆனால் இரண்டமாக கட்ட பிரச்சாரம் எதிலும்.. மூன்றாம் கட்ட பிரச்சாரத்திலும் அந்த சத்தம் கேட்கவே இல்லை.
உதாரணமாக மோடி கடைசியாக ராஜஸ்தானில் செய்த மூன்று பிரச்சாரத்திலும் 400 என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லை. மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்பதை மட்டுமே கூறினார். மாறாக இலக்கு 400 என்பதை அவர் எங்குமே குறிப்பிட்டு கருத்து தெரிவிக்கவில்லை.
கோஷம் இல்லை: லோக்சபா தேர்தலில் கடந்த கட்ட தேர்தல் மற்றும் நடக்க உள்ள 4ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக 400 இலக்கு என்பது தொடர்பான சார்சோ பார் கோஷத்தை எழுப்புவதை நிறுத்தி உள்ளது.
பாஜகவின் 400 இலக்கு அந்த கட்சிக்கே எதிராக திரும்பியது. இடஒதுக்கீட்டை பாஜக நீக்கும், இறையாண்மைக்கு எதிராக அரசியல் சாசனத்தை பாஜக மாற்றும் என்றெல்லாம் மக்கள் இடையே எதிர்ப்பு வந்தது. அதோடு இல்லாமல் எதிர்கட்சிகளுக்கு பலம் இல்லை என்றால் பாஜக நினைத்ததை எல்லாம் செய்யும். அது மக்களுக்கே எதிராக செல்லும் என்று மக்கள் இடையே அச்சம் எழுந்தது. இந்த நிலையில்தான் அந்த கோஷத்தை பாஜக நிறுத்தி உள்ளது.
பாஜக புது ரூட்: பாஜக கேம்பில் பதற்றம் தொற்றி உள்ள இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜக திடீரென மோடியின் பேட்டிகளை அதிகரிக்க தொடங்கி உள்ளன. லோக்சபா தேர்தல் தீவிரம் அடைந்து வரும் நிலையில் பிரதமர் மோடியின் தொலைக்காட்சி பேட்டிகள் அதிகரித்து வருகின்றன.
கடந்த 10 நாட்களில் மட்டும் பிரதமர் மோடி 4 சேனல்களில் பேட்டி அளித்துள்ளார். அதோடு இன்னொரு சேனலில் கூட்டு பேட்டியாக அளித்துள்ளார். பிரதமர் மோடி இதுவரை ஒரு முறை கூட பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது இல்லை. இந்த தேர்தல் நேரத்திலும் பத்திரிகையாளர் சந்திப்பை மோடி நடத்தவில்லை.
மாறாக தேர்தல் பேட்டிகளை மட்டும் கொடுத்துள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பு என்பது எல்லா ஊடகங்களின் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது. இதை மோடி தற்போதும் தவிர்த்து வருகிறார்.
ஆனால் தனிப்பட்ட பேட்டிகளை மோடி தொடர்ந்து கொடுத்து வந்துள்ளார். இந்த லோக்சபா தேர்தல் சீசனில் ஒரு தமிழ் செய்தி சேனல் பேட்டி தொடங்கி சமீபத்தில் வடஇந்திய சேனல் வரை மொத்தம் 6 சேனல்களுக்கு மோடி பேட்டி கொடுத்துள்ளார். 3ம் கட்ட தேர்தலுக்கு பின்பு மட்டும் 4 சேனல்களுக்கு மோடி தீவிரமாக பேட்டி கொடுத்துள்ளார்.
தேர்தலுக்கு இடையே திடீரென மோடி முழுக்க முழுக்க டிவி சேனல்களில் அதிகம் தோன்றுவது ஏன்.. பாஜக பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications