ஒடிசாவை "இம்ப்ரஸ்" செய்ய.. தமிழ்நாட்டை விட்டுக் கொடுத்த பாஜக.. 2026க்கு ஆப்பு வைத்த "தாமரை"?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒடிசாவில் நடக்கும் சட்டசபை தேர்தலில் ஒடிசா மக்களை "இம்ப்ரஸ்" செய்ய ஆசைப்பட்டு தமிழ்நாட்டு மக்களை புகைக்கும் ரிஸ்க்கை பாஜக கையில் எடுத்துள்ளது. இது பாஜகவிற்கே எதிராக திரும்பும் வாய்ப்புகள் உள்ளன.

ஒடிசாவில் பிரதமர் மோடி பிஜு ஜனதா தளத்தின் மூத்த தலைவர் தமிழ்நாட்டை சேர்ந்த விகே பாண்டியனை பாஜகவின் டாப் தலைவர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். ஒடிசாவில் நடந்த லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி திடீரென தமிழ்நாட்டை தாக்கி பேசிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Lok Sabha election 2024 Narendra Modi

முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரும், தமிழ்நாட்டை சேர்ந்த பிஜேடியின் முக்கிய தேர்தல் வியூகவாதியுமான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியனை மறைமுகமாக விமர்சித்த மோடி, பூரி ஜெகநாதர் கோவிலின் ரத்தின பண்டரின் (புதையல்) சாவியை அவர் தமிழ்நாட்டிற்கு எடுத்துக்கொண்டு போய்விட்டார். இங்கே இருக்க வேண்டிய சாவி தமிழ்நாட்டில் இருக்கிறது.

நமது சொந்த வீட்டின் சாவி கிடைக்காதபோது, ​​ஜெகநாதரை வேண்டிக்கொள்கிறோம், சாவியைக் கண்டுபிடிக்க அவரது வேண்டுதலை பெறுகிறோம்... ஆனால் அப்படிப்பட்ட கோவிலின் ரத்ன பண்டரின் சாவிகள் ஆறு ஆண்டுகளாக காணவில்லை. நாம் எங்கே போய் முறையிடுவது. ஸ்ரீ ரத்ன பண்டரின் சாவி தமிழகத்திற்குப் போய்விட்டதாக மக்கள் சொல்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு அனுப்பியது யார்?

விகே பாண்டியன் விமர்சனம்: இங்குள்ள விவசாயிகள் பிரச்சனையில் உள்ளனர். இளைஞர்கள் வேலைக்காக பிற மாநிலங்களுக்குச் செல்கின்றனர். பழங்குடியினர் வாழும் பகுதிகளில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. கனிம வளங்கள் அதிகம் இருந்தும், இடம்பெயர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வளவு வளங்கள் இருந்தும் இங்குள்ள மக்கள் ஏன் வறுமையில் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்? ஒடிசாவின் நிலையைப் பார்த்து நான் வேதனையடைந்தேன்.

ஒடிசாவின் வருந்தத்தக்க நிலைமைக்கு யார் பொறுப்பு? சில ஊழல்வாதிகளின் கட்டுப்பாட்டில் பிஜேடி அரசு உள்ளது. ஒரு சில ஊழல்வாதிகள் முதல்வர் அலுவலகம் மற்றும் இல்லத்தை ஆக்கிரமித்துள்ளனர். பிஜேடியின் சிறு தொழிலாளர்கள் இப்போது கோடீஸ்வரர்களாகிவிட்டனர், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்

ஸ்மிரிதி இராணி: அதேபோல் ஒடிசாவில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி பேசுகையில், "பிஜு ஜனதா தளம் ஆட்சி, ரிமோட் கண்ட்ரோல் மூலம் தமிழ் காண்ட்ராக்டர் மூலமாக இயக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஜல்ஜீவன் மிஷன் மூலமாக குடிநீர் விநியோகம் செய்ய நிதிகளை ஒதுக்கினார். ஆனால் தமிழ்நாட்டின் காண்டிராக்டர்கள் அந்த பணத்தை கொள்ளை அடித்துள்ளனர்.

இலவச வீட்டு மனைக்காக வழங்கப்பட்ட நிதியும் ரிமோட் கண்ட்ரோல் மூலமாக தமிழ்நாடு காண்ட்ராக்டர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநில வளங்களை கொள்ளையடிக்க எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் மற்றும் தமிழக காண்ட்ராக்டர்கள் இடைவிடாது வேலை செய்து வருகின்றனர்" என்றார்.

நேற்று கூட பேச்சு: நேற்று கூட, ஜூன் 10-ம் தேதி ஒடிசாவில் நாங்கள் பதவி ஏற்போம். 11ம் தேதி பாண்டியனை தமிழ்நாட்டுக்கு அனுப்பி விடுவோம் என்று பாஜகவின் ஹிமாந்தா பிஸ்வா சர்மா துவேஷப் பேச்சு பேசினார்.

எதிராக திரும்பும்: ஒடிசாவில் பிரதமர் மோடி பிஜு ஜனதா தளத்தின் மூத்த தலைவர் தமிழ்நாட்டை சேர்ந்த விகே பாண்டியனை விமர்சனம் செய்தது அந்த கட்சிக்கே எதிராக திரும்பும் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

லோக்சபா தேர்தலுக்கு இடையில் ஒடிசாவில் நடக்கும் சட்டசபை தேர்தலில் ஒடிசா மக்களை "இம்ப்ரஸ்" செய்ய ஆசைப்பட்டு தமிழ்நாட்டு மக்களை புகைக்கும் ரிஸ்க்கை பாஜக கையில் எடுத்துள்ளது. இது பாஜகவிற்கே எதிராக திரும்பும் வாய்ப்புகள் உள்ளன.

2026 சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் இது பாஜகவிற்கு எதிராக திரும்பும் வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால் தமிழருக்கு எதிராக பேசிய பாஜக, தமிழரை வளர விடாமல் தடுத்த பாஜக என்றெல்லாம் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

ஒரே நாடு ஒரே தேசம் என்றெல்லாம் பேசும் பாஜக.. தமிழர் ஒருவர் வேற்று மாநிலத்தில் வளர்வதை ஏன் எதிர்க்கிறது. பாஜகவில் பல மாநில முதல்வர்கள் அவர்கள் ஆளும் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கிடையாது. யோகி சொந்த மாநிலம் உத்தர பிரதேசம் அல்ல, வசுந்தரா ராஜே ஆண்ட ராஜஸ்தான் அவரின் சொந்த மாநிலம் கிடையாது. இப்படி பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

அதோடு நவீன் பட்நாயக்தான் பாண்டியனை சொந்தமாக தனது வாரிசு போல நடத்துகிறார். பட்நாயக் கொண்டு வந்த மெஜாரிட்டி திட்டங்கள் பாண்டியன் ஆலோசனையின் மூலம் வந்தது. அப்படி இருக்க பட்நாயக் எடுத்த முடிவு அவரின் கட்சி முடிவு. ஆனால் அவர் தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக விமர்சனம் செய்வது பாஜக 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தனக்கு தானே சூடு வைத்துக்கொண்டதற்கு சமமாக மாறிவிட்டது.

முக்கியமாக தமிழ்நாட்டு கட்சிகளுக்கு பாஜக தீனி போட்டுவிட்டதோ என்று எண்ண தோன்றுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+