தலித் பெண் பலாத்காரம்.. அவசர உடல் தகனம்.. ஊரெல்லாம் பரபரப்பு.. ரஜினி மட்டும் வழக்கம் போல கப்சிப்!

உபி தலித் பெண் மரணத்துக்கு ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிக்காமல் உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "மோடிக்கு வாழ்த்து சொல்ல தெரியுது.. மகாத்மா காந்திக்கு வாழ்த்து சொல்ல தோணலையா? தலித் பெண்ணை எரித்ததுக்கு நாடே பற்றி கொண்டு எரிகிறது, அதற்கும் ரஜினி வாயே திறக்கவில்லை என்றால் எப்படி" என்ற கேள்விகள் இணையத்தை நிரப்பி வருகின்றன.

பொதுவாக, இயல்பாகவே இந்திய மக்கள் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள்.. ஒரு உயிர் இறந்துவிட்டால் துடித்து போகக்கூடியவர்கள்... அதிலும் ஹத்ராஸ் சம்பவத்தை யாராலுமே ஜீரணிக்க முடியவில்லை.

பலாத்காரமும், அதையொட்டி நடந்த இறுதிசடங்கின் கொந்தளிப்பும் இன்னும் அடங்கவில்லை.. இதற்கு நடுவில், அப்படி ஒரு பலாத்காரமே நடக்கவில்லை என்று உ.பி அரசு பூசி மெழுகி வருவது இன்னும் எரிகிற தீயில் எண்ணை ஊற்றுவது போல இருந்து வருகிறது.

 ஹத்ராஸ்

ஹத்ராஸ்

இந்த சம்பவத்துக்கு மொத்த மக்களும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன.. அரசியல்தரப்பு முதல் சினிமா ஸ்டார்கள் வரை ட்வீட்களை பதிவிட்டு, தலித் பெண்ணுக்கு நியாயம் கேட்டு வருகிறார்கள்.. ஆனால், இந்த நிமிஷம்வரை ரஜினி இதை பற்றி வாயே திறக்கவில்லை... ஒரு வருத்தமும் சொல்லவில்லை.

 தலித் பெண்

தலித் பெண்

ராத்திரியோடு ராத்திரியாக ஒரு பெண்ணின் சடலத்தை அத்துமீறி எரித்ததற்கும் எந்த கேள்வியும் கேட்கவில்லையே ஏன் என்ற கேள்வி எழுந்து வருகிறது.. இப்படித்தான் பென்னிக்ஸ் மரணத்தின்போதும் மவுனம் காத்தார்.. கோர்ட்டே இந்த இரட்டை கொலையை தானாக முன்வந்து எடுத்தது தெரிந்தும்கூட அமைதி காத்தவர், இறுதியாகத்தான் வந்து தன் கண்டனத்தை பதிவு செய்தார்.. அதுகூட அந்த வீடியோவில் எந்த அப்பா, எந்த மகனுக்கு இரங்கல் என்று தெரியாமல் பொத்தாம் பொதுவாக வருத்தம் சொல்லி இருந்தார்.

 ராமர் கோவில்

ராமர் கோவில்

அப்படி கூட இந்த தலித் பெண் மரணத்துக்கு வாய் திறக்கவில்லை.. இப்படித்தான் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா பற்றியும் வாய் திறக்காமலே இருந்தார். இதுவே பிரதமர் மோடியின் பிறந்த நாளுக்கு உடனே வந்து ட்வீட் போட்டு வாழ்த்து சொன்னவர், அன்றைய தினம் அதே பெரியார் பிறந்த நாளுக்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை? இன்றுகூட மகாத்மா காந்தி பிறந்த நாளுக்கும் வாழ்த்து சொல்லவில்லையே ஏன்?

பிரதமர்

பிரதமர்

குறைந்தபட்சம், தலித் பெண் மரணத்துக்காவது குரல் கொடுத்திருக்கலாம்.. நாட்டை ஆளும் எண்ணம் மட்டும் இருந்தால் போதுமா? தரப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நேரத்தில்தானே ஆறுதல் சொல்ல வேண்டும்.. அவர்களின் கொந்தளிப்பை ஆசுவாசப்படுத்த வேண்டும்? என்ற கேள்வி சோஷியல் மீடியாவில் எழுந்து வருகின்றன.

 காக்கி சட்டை

காக்கி சட்டை

சென்னையில் அன்று ஐபிஎல் போட்டிகளை நடத்த எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில், விசிக பிரமுகர் ஒருவர் போலீஸ்காரரின் சட்டையை பிடித்து இழுத்ததற்கே கொந்தளித்து பேசியவர் ரஜினிகாந்த். போலீஸ்காரருக்காக பரிந்து பேசி கொண்டு வந்தவர், இன்று தலித் பெண்ணை நடுராத்திரி கொண்டு போய் சுடுகாட்டில் போலீசாரே எரித்த சம்பவத்துக்கும், இந்த கொடூர மரணத்துக்கும் மட்டுமல்ல.. தேச பிதாவின் பிறந்த நாளுக்கு கூட வாழ்த்து சொல்லாமல் மவுனம் காத்து வருவது ஏற்க முடியாததே..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+