ரீல்ஸ் வீடியோ போடுவாங்களே.. இலக்கியா.. நியாபகம் இருக்கா? அவங்களுக்கு இப்போ இப்படி ஒரு நிலைமையா?
சென்னை: ரீல்ஸ் வீடியோ உள்ளிட்ட ஷார்ட் வீடியோக்களில் ஆபாசமாக நடனம் ஆடும் டிக்டாக் இலக்கியா தற்போது பரபரப்பு வீடியோ வெளியிட்டு உள்ளார்.
டிக்டாக் செயலி இந்தியாவில் செயல்பட்டுக்கொண்டு இருந்த போது அதன் மூலம் பிரபலம் ஆனவர் இலக்கியா. ஆபாசமான நடனம், ஆபாசமான பேச்சுக்கள், போட்டோக்கள் மூலம் இவர் வைரல் ஆனார். அதன்பின் இவர் இன்ஸ்டாகிராமில், பேஸ்புக்கிலும் ரீல்ஸ் போன்ற ஷார்ட் வீடியோக்கள் போட்டு பிரபலம் அடைந்தார்.

இந்த நிலையில்தான் இவரின் பெயரை வைத்து சிலர் பணம் பறிக்க தொடங்கி உள்ளனர். அதாவது பாலியல் தேவைக்காக இவர் பணம் வாங்குவது போல.. பொய்யாக இவரின் பெயரில் கணக்கு தொடங்கி பல ஆண்களிடம் பணம் வாங்கி ஏமாற்றி உள்ளனர். இந்த பெண் மெசேஜ் செய்வது போல பொய்யாக மெசேஜ் செய்து.. என்னுடன் இருக்க பணம் தாங்கள் என்று கூறி பல ஆயிரம், லட்சங்களை ஏமாற்றி வாங்கி உள்ளனர்.
இந்த மோசடி குறித்து இலக்கியா வீடியோ வெளியிட்டு புகார் செய்துள்ளார். அவர் வெளியிட்டு உள்ள வீடியோவில், எல்லோருக்கும் வணக்கம். என்னுடைய பெயரில் ட்விட்டரில் கணக்கு உள்ளது. 2-3 வருடங்களாக அந்த கணக்கு இயங்கி வருகிறது. அது பொய்யான கணக்கு. அது என்னுடைய கணக்கு கிடையாது.
பலர் அதற்கு பணம் அனுப்பி வருகிறார்கள். நான் பணம் கேட்டதாக நினைத்து பலர் அதற்கு பணம் அனுப்பி வருகிறார்கள். ஆனால் அது என் கணக்கு கிடையாது. என்னுடைய பெயரை சொல்லி ஏமாற்றி வருகின்றனர். நான் என்று நினைத்து சிலர் பர்சனலாக பேசி வருகின்றனர்.
அதை வைத்து சிலர் பணம் கொடுக்கின்றனர். அந்த ட்விட்டர் கணக்கிற்கு ப்ளூ டிக் உள்ளது. அதனால் நம்பி பலரும் பணம் அனுப்புகின்றனர். அவர்கள் வெறுமனே ட்விட்டரில் பணம் கொடுத்து ப்ளூ டிக் வாங்கி வைத்துள்ளனர். அது என்னுடைய கணக்கு இல்லை.
ப்ளூ டிக் இருப்பதாலேயே அது என்னுடைய கணக்கு என்று சொல்ல முடியாது. இதே பிரச்சனை 5 வருடங்களுக்கு முன்பு நடந்தது. அப்போதும் என்னுடைய பெயரில் பண மோசடி நடந்தது. இதை யார் செய்கிறார்கள், ஏன் செய்கிறார்கள், விளையாட்டிற்கு செய்கிறார்களா என்று தெரியவில்லை. இப்படி செய்ய வேண்டாம்.

நீங்கள் எதற்கு செய்தாலும் அதனால் மனவேதனை அடைவது நான்தான். அதனால் கஷ்டப்படுவது நான்தான். புகார் கொடுக்க அலைவது நான்தான். இனி இப்படி செய்ய வேண்டாம். என் பெயரில் ட்விட்டரில், இன்ஸ்டாகிராமில், பேஸ்புக்கில் பொய்யான கணக்குகள் உள்ளன. அதை கண்டுகொள்ள வேண்டும். அதை பார்த்து ஏமாற்றம் அடைய வேண்டும்.
இந்த கணக்குகளுக்கு எதிராக புகார் கொடுக்க போகிறேன். எல்லா பொய்யான கணக்கையும் லிஸ்ட் எடுத்து சைபர் கிரைம் மூலம் ஆன்லைன் வழியாக புகார் கொடுக்க உள்ளேன். இந்த பொய்யான கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டும்.
அப்படி அனுப்பி அதன்பின் என் மீது புகார் கொடுக்க வேண்டும், இந்த கணக்குகளுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என் இன்ஸ்டாகிராமில் இதை பற்றி என்னிடம் புகார் கொடுக்க வேண்டாம் என்று டிக்டாக் இலக்கியா தெரிவித்துள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications