அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் நாம் தமிழர் சீமான்.. திமுக கூட்டணியை வீழ்த்துமா? நம்பர்ஸ் சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவுடன் கூட்டணி வைக்க சீமான் நேரடியாகவே அழைப்பு விடுக்க தொடங்கி உள்ளார். நாம் தமிழர் கட்சிக்கு அதிமுக வர வேண்டும் என நேரடியாக சீமான் அழைத்துள்ளார். அவரின் அழைப்பிற்கு பின் வேறு ஒரு "நம்பர் கேம்" இருப்பதாக கூறப்படுகிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், அதிமுக ஆதரவை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுள்ளார். அதன்படி, கட்சி ஆரம்பிக்கும் முன்பு ஜெயலலிதாவை ஆதரித்து.. அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தேன். இலங்கை போர் நடந்தது. என் சொந்தங்களை கொன்ற கூட்டத்திற்கு ஆதரவாக இருந்த காங்கிரஸ், திமுகவை எதிர்த்து அதிமுகவிற்கு ஆதரவு அளித்தேன். அதன்பின் 2011 தேர்தலில் மீண்டும் அதிமுகவிற்காக பிரச்சாரம் செய்தேன். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பிரச்சாரம் செய்தேன்.

2014ல் மீண்டும் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தேன். எந்த பிரதி பலனும் எதிர்பார்க்கவில்லை. பணம் வாங்கவில்லை. உண்டியல் குலுக்கித்தான் பிரச்சாரம் செய்தேன். இப்போது நாங்கள் விக்கிரவாண்டியில் நாங்கள் நிற்கிறோம். அதிமுக ஆதரவை கேட்கிறோம்.

அதிமுக - சீமான் கூட்டணி; நம்முடைய பொது எதிரி திமுக. அப்படிப்பட்ட பொது எதிரியை வீழ்த்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறோம். திமுக என்ற நச்சுமரத்தை வீழ்த்த வேண்டும் . அதற்கு எளிய பிள்ளைகள் எங்களை ஆதரித்து எங்களுடன் நில்லுங்கள். நான் உங்களுக்கு நின்று உள்ளேன். இந்த ஒரு தேர்தல் நீங்கள் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள். அதிமுக இந்த தேர்தலில் நிற்கவில்லை.

அப்படி இருக்க அதிமுக எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அதிமுகவின் ஆதரவு எங்களுக்கு கொடுக்கலாம். எங்களின் வேட்பாளர் அபிநயாவிற்கு ஆதரவு கொடுக்க வேண்டும். 2026ல் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். அப்போது அரசியல் எப்படி மாறும் என்று பார்க்கலாம். இது சாதாரண இடைத்தேர்தல்தான். இந்த தேர்தலில் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள், என்று சீமான் வெளிப்படையாக கேட்டுள்ளார்

நம்பர் சொல்வது இதுதான்?: தமிழ்நாட்டில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணி வைத்தால் அவர்களால் திமுக கூட்டணியை வீழ்த்த முடியுமா என்ற கேள்வி உள்ளது. இதற்கு தர்க்க அடிப்படையில் பார்க்காமல் சதவிகித அடிப்படையில் என்ன நிலவரம் என்று பார்க்கலாம்.

கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி வென்ற வாக்குகள் 46.97 சதவிகிதம் .

தனியாக திமுக வென்ற வாக்குகள் 26.93 சதவிகிதம் .

அதிமுக கூட்டணி வென்ற வாக்குகள் 23.05 சதவிகிதம் .

தனியாக அதிமுக வென்ற வாக்குகள் 20.46 சதவிகிதம் .

நாம் தமிழர் தனியாக வென்ற வாக்குகள் 8.20 சதவிகிதம்.

கூட்டணி: இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் + அதிமுக + நாம் தமிழர் கூட்டணி உருவாகலாம் என்று அதிமுக ஆதரவு ஆலோசகர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக நாம் தமிழரை கூட்டணிக்கு அழைக்கலாம். இதன் மூலம் திமுக கூட்டணிக்கு பதிலடி கொடுக்கலாம் என்று அதிமுக ஆதரவு ஆலோசகர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர்.

கணக்குப்படி பார்த்தால் கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி வென்ற வாக்குகள் 46.97 சதவிகிதம். இது சட்டசபை தேர்தலில் குறைந்தால் கூட 43 வரை செல்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

எதிர் பக்கம் அதிமுக கூட்டணிக்கு 25 சதவிகிதம் வரை வரலாம். நாம் தமிழர் அவர்களோடு சேரும் பட்சத்தில் அது 33 ஆக உயரும் வாய்ப்புகள் உள்ளன.

இதில் இனி விஜயின் வாக்கு சதவிகிதம்தான் சந்தேகம். பொதுவாக தமிழ்நாட்டில் புதிதாக நடிகர்கள் கட்சி தொடங்கினால் வாக்கு சதவிகிதம் முதல் தேர்தலில் 5 வரை இருக்கும். முறையான கட்டமைப்பு இருந்த தேமுதிகவிற்கே 5 சதவிகிதம்தான் இருந்தது.

இப்படிப்பட்ட நிலையில் விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு அதிகபட்சம் 7 கொடுத்தால் கூட.. அவர்கள் அதிமுக உடன் கூட்டணி வைக்கும் பட்சத்தில் அது 40 ஆகவே இருக்கும்.

பாமக உள்ளிட்ட பாஜக கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைந்தால் ஒழிய திமுக கூட்டணியின் நம்பரை.. நாம் தமிழர்- அதிமுக - விஜய் கூட்டணி எடுக்க வாய்ப்பு இல்லை. மிகப்பெரிய அரசியல் மாற்றம் வந்தால் ஒழிய இந்த நம்பரில் மாற்றங்கள் நடக்க வாய்ப்புகள் குறைவு என்றுதான் கூற வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+