வந்தே பாரத்தை வம்புக்கிழுத்த ஸ்டாலின்.. யாருமே போகாத ஜப்பான் "ஒசாகா" சென்றது ஏன்? இப்படி ஒரு காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜப்பானில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு இருக்கும் ஒசாகா நகருக்கும் சென்றுள்ளார். பிரதமர் மோடி இந்த இடத்திற்கு சென்றதற்கு பின் முக்கியமான பல காரணங்கள் உள்ளன.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் பயணம் மேற்கொண்டுள்ளார்.ஜனவரி 2024-இல் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க பயணம் மேற்கொண்டுள்ளார்.

 Why is Tamil Nadu CM Stalin pulling the legs of Vande Bharat train Japan and Why did he go to Osaka?

தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் கொண்டு வரவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் இந்த பயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஜன. 10 மற்றும் 11ம் தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. இதற்கு அழைப்பு விடுப்பதற்காக அவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

முதலீடுகளை ஈர்க்கவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார். சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் அவர் முக்கிய சந்திப்புகளை நடத்துவார்.அங்கே அரசியல் தலைவர்கள், பல்வேறு நிறுவன சிஇஓக்கள், அங்கே வசிக்கும் தமிழர்களை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பேச உள்ளார்.

ஜப்பான் பயணம்

 Why is Tamil Nadu CM Stalin pulling the legs of Vande Bharat train Japan and Why did he go to Osaka?

சிங்கப்பூர் பயணம் முடிந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஜப்பான் சென்றுள்ளார். ஜப்பான் பயணம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில், தமிழ்நாடு நிதி நுட்பக் கொள்கை 2021. தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கை 2021. தமிழ்நாடு உயிர் அறிவியல் மேம்பாட்டுக் கொள்கை 2022, தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை 2022, தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022, தமிழ்நாடு விண்வெளி & பாதுகாப்புத் தொழில் கொள்கை 2022. தமிழ்நாடு எத்தனால் கலவைக் கொள்கை 2023

மற்றும் தொழில் நுட்ப ஜவுளிகள் மற்றும் ஆடைகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் சிறப்புதிட்டம் போன்ற பல்வேறு துறை சார்ந்த கொள்கைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் வரும் ஜனவரி 2024-இல் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பயணம் மேற்கொண்டுள்ளார்..

முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு, இந்திய அளவில் முன்னணி மாநிலங்களுள் ஒன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக, ஜப்பானிய முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. எண்ணற்ற ஜப்பான் நிறுவனங்கள், தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்து, தங்கள் திட்டங்களை இங்கு நிறுவியுள்ளனர்.

அண்மையில் உலக அளவில் முன்னணி குளிர்சாதன இயந்திரங்கள் தயாரிப்பு நிறுவனமான மிட்சுபிஷி நிறுவனம் 1891 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் தலைசிறந்த நிறுவனங்களில் முன்னணியில் இருக்கக்கூடிய நிசான் நிறுவனம், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனத்துடன் இணைந்து சமீபத்தில் 3300 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் முதலீடு செய்தது மட்டுமல்லாமல் தனது தொழில் நடவடிக்கைகளை நம்மாநிலத்தில் மேலும் விரிவாக்கம் செய்து வருகிறது.

இந்த உறவை மேலும் மேம்படுத்தும் வகையில்தான், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முதலீட்டுக் குழுவுக்கு தலைமை தாங்கி ஜப்பான் செல்கிறார்கள். அங்கு முன்னணி தொழில்துறைத் தலைவர்களையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, தமிழ்நாட்டில் முதலீடு மேற்கொள்ள வருமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அழைப்பு விடுக்க இருக்கிறார்கள். ஜப்பான் நாட்டில், ஒரு முதலீட்டு ஊக்குவிப்பு மாநாடும் நடைபெற உள்ளது. பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட உள்ளன.

 Why is Tamil Nadu CM Stalin pulling the legs of Vande Bharat train Japan and Why did he go to Osaka?

ஒசாகா போனது ஏன்?: இதுவரை ஜப்பான் சென்றுள்ள அரசுக் குழுக்கள் டோக்கியோ மட்டுமே சென்று வந்துள்ளனர். ஒசாகாவில் இந்திய வம்சாவளியினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர் இங்கு பல முன்னணி தொழில் நிறுவனங்களும் அமைந்துள்ளன. எனவே, ஒசாகா நகருக்கும் வருகை தரும்படி விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று முதல்முறையாக ஒசாகா நகருக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் தலைமையில் இந்தக் குழு செல்ல உள்ளது.

ஒசாகாவில், ஜப்பான் வெளியுறவு வர்த்தக நிறுவனமான, ஜெட்ரோ (JETRO) நிறுவனத்துடன் இணைந்து அங்கு நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் மாண்புமிகு உள்ள முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள். மேலும் முக்கிய நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்க உள்ளார்கள்.

அதனைத் தொடரந்து ஒசாகா வாழ் இந்திய சமூகத்தினர் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள உள்ளார்கள். டோக்கியோ நகரில் அந்நாட்டின் பொருளாதாரம் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு. நிஷூமுரா யசுதோஷி மற்றும் ஜப்பான் தொழில் நிறுவனமான, ஜெட்ரோ தலைவர் இஷிகுரோ நொரிஹிகோ அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சந்திக்க உள்ளார்கள்.

 Why is Tamil Nadu CM Stalin pulling the legs of Vande Bharat train Japan and Why did he go to Osaka?

மேலும், 200க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் கலந்துகொள்ளும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் கலந்துகொள்கிறார்கள். கியோகுடோ மற்றும் ஓம்ரான் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளபட உள்ளன. மேலும் அங்குள்ள மேம்பட்ட தொழில் மையத்தை பார்வையிட உள்ளார்கள்.
தமிழ்நாட்டிற்கும், ஜப்பானுக்கும் இடையே நீண்ட நெடிய வரலாற்று உறவு இருந்து வருகிறது. இந்த உறவு மேலும் வலுவடையும் வகையில், இந்த அரசு முறைப் பயணம் அமைந்திடும்., என்று தமிழ்நாடு அரசு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் போஸ்ட்: ஒசாகா சென்ற முதல்வர் ஸ்டாலின் செய்துள்ள போஸ்டில் வந்தே பாரத் ரயிலை வம்புக்கு இழுத்துள்ளார். அதில், இந்தியாவைப் போன்ற தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஜப்பான் நாட்டின் பண்பாட்டு அடையாளமாகத் திகழும் #OsakaCastle-ஐ நான் பார்க்க வேண்டும் என நேற்றை முதலீட்டாளர்கள் சந்திப்பின்போது பலரும் சொன்னார்கள். அந்தக் கோட்டையைக் காணக்கூடிய வாய்ப்பு இன்று அமைந்தது.

அழகிய புன்னகையோடு ஜப்பான் குழந்தைகள் பொழிந்த அளவற்ற அன்பில் நனைந்தவாறே அவர்களின் வரலாற்றை அறிந்தேன். ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு #BulletTrain-இல் பயணம் செய்கிறேன். ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணிநேரத்திற்குள் அடைந்துவிடுவோம்.

 Why is Tamil Nadu CM Stalin pulling the legs of Vande Bharat train Japan and Why did he go to Osaka?

உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் #BulletTrain-களுக்கு இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்; ஏழை - எளிய - நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும்!, என்று குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+