லட்டு மாதிரி ஒரு வாய்ப்பு! சீமானுக்கு இதைவிட நல்ல சான்ஸ் கிடைக்காது! தமிழக அரசியலையே புரட்டி போடலாமே
சென்னை: தமிழ்நாடு அரசியலில் சீமானுக்கு லட்டு மாதிரி ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. திமுகவிற்கு எதிராக தன்னுடைய தனிப்பட்ட பலம் எப்படி இருக்கும் என்பதை நிரூபிக்கும் வாய்ப்பு சீமானுக்கு கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் நாம் தமிழர் வேகமாக வளர்ந்து வரும் கட்சிகளில் ஒன்றாகும். உதாரணமாக 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி 53.15% திமுக 33.52% காங்கிரஸ் 12.61%. அதிமுக கூட்டணி 30.57% அதிமுக 19.39% பாஜக 3.66% பாமக 5.36% தேமுதிக 2.16% நாம் தமிழர் கட்சி 3.90% வாக்குகளை எடுத்தது.

நாம் தமிழர் வாக்கு ரீதியாக 4 சதவிகிதம் வரை வைத்து இருந்தாலும் சில இடங்களில் தனியாக முடிவுகளை மாற்றும் சக்தியாக உருவெடுத்தது. இந்த லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் 7.9 சதவிகிதம் வாக்குகளை பெற்றது. நாம் தமிழர் கட்சியின் சின்னம் போன நிலையிலும் இந்த வாக்குகள் கிடைத்தது.
கரும்பு விவசாயி சின்னம் பறிபோனாலும் கூட அந்த கட்சி தனியாக நின்று மைக் சின்னத்தில் இத்தனை வாக்குகளை பெற்றது. ஆனால் அப்போது எதிர்க்கட்சி வாக்குகள் 3 ஆக பிரிந்தது. இதனால் நாம் தமிழர் கட்சிக்கு திமுக எதிர்ப்பு வாக்குகள் எவ்வளவு செல்லும் என்று தெரியவில்லை.
விக்கிரவாண்டி தேர்தல்; இப்படிப்பட்ட நிலையில்தான் விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் மும்முனை போட்டி மட்டும் உள்ளது. அதிமுக களத்தில் இல்லை. இப்படி இருக்க திமுக எதிர்ப்பு வாக்குகள் சீமானுக்கு வந்தால் அது அரசியல் ரீதியாக அவருக்கு எழுச்சியாக இருக்கும்.
கள்ளக்குறிச்சி நிலவரம்: இதில் ஏற்கனவே லோக்சபா தேர்தலில் கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதிக்கு உள்ளே நாம் தமிழர் 3ம் இடம் பிடித்தது.
2024 லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு, புதுச்சேரியில் எல்லா தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்து உள்ளது. தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனியாக போட்டியிட்டது. ஆனால் இந்த முறை நாம் தமிழர் சின்னம் மாறி புதிய சின்னத்தில் போட்டியிட்டது.
போட்டியிட்ட எல்லா இடங்களிலும் நாம் தமிழர் தோல்வி அடைந்து உள்ளது. ஆனால் 10 தொகுதிகளில் சராசரியாக 40 ஆயிரம் வாக்குகள், 6 தொகுதிகளில் 50 ஆயிரம் வாக்குகள், தஞ்சாவூரில் ஹுமாயூன் ஒன்றரை லட்சம் வாக்குகள், 20 தொகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள். 4 தொகுதிகளில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று அசத்தி உள்ளது.
நாம் தமிழர் கட்சி பின்வரும் தொகுதிகளில் 3வது இடம் பிடித்தது.
கன்னியாகுமரி (அதிமுகவை பின்னுக்கு தள்ளி)
ஈரோடு (பாஜக கூட்டணி (தமாகா) வேட்பாளரை பின்னுக்கு தள்ளி)
கள்ளக்குறிச்சி (பாமகவை பின்னுக்கு தள்ளி)
நாகை (பாஜகவை பின்னுக்கு தள்ளி)
திருச்சி (அமமுகவை பின்னுக்கு தள்ளி)
புதுச்சேரி (அதிமுகவை பின்னுக்கு தள்ளி)
சீமானுக்கு சான்ஸ்: இப்படி இருக்க அதிமுக இல்லாத நிலையில் கள்ளக்குறிச்சியில் சீமானுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழ்நாடு அரசியலில் சீமானுக்கு லட்டு மாதிரி இந்த இடைத்தேர்தல் வாய்ப்பு கிடைத்துள்ளது. திமுகவிற்கு எதிராக தன்னுடைய தனிப்பட்ட பலம் எப்படி இருக்கும் என்பதை நிரூபிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications