திமுகவின் பார்முலாவை எடுத்து.. அவங்களையே வீழ்த்திய யுக்தி! ஸ்மார்ட்டாக நகரும் விஜய்.. கவனிச்சீங்களா?
சென்னை: நடிகர் விஜய் திடீரென நீட் எதிர்ப்பு, ஒன்றிய அரசு என்றெல்லாம் பேச தொடங்கி இருப்பது திமுக ஆதரவு நிலைப்பாடு என்று வெளிப்படையாக தோன்றினாலும்.. உள்ளுக்குள் திமுகவின் வாக்கு வங்கியை குறி வைப்பதே அவரின் நோக்கம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
நேற்று மாணவர்களுக்கு விருது வழங்கும் இரண்டாம் கட்ட விழாவில் பேசிய விஜய் தற்போது நேரடியாக பாஜகவின் அடிப்படை கொள்கையையே எதிர்த்து உள்ளார். பாஜக உறுதியாக இருக்கும் நீட் விவகாரத்தில் கடுமையான கருத்துக்களை விஜய் வைத்துள்ளார்.

விஜய் பேச்சு: அதில், தொடர்ந்து நடந்துவரும் குளறுபடிகளால் நீட் தேர்வு மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். இனி நாடு முழுவதும் நீட் தேர்வு தேவை இல்லை என்பதுதான் இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம். நீட் விலக்குதான் இதற்கு உடனடி தீர்வு.
சிறப்பு பொதுப்பட்டியலை உருவாக்கி கல்வி, சுகாதாரத்தைத் மாநில பட்டியலில் கொண்டுவர வேண்டும் கல்வி, சுகாதாரத்தில் மாநில அரசுகளுக்கு முழு உரிமை வழங்கப்பட வேண்டும். மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு NCERT முறையில் தேர்வு வைத்தால் எப்படிச் சரியாக இருக்கும்?
தொடர்ந்து நடந்துவரும் குளறுபடிகளில் நீட் தேர்வு மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். நாடு முழுவதும் நீட் தேர்வு தேவை இல்லை என்பதுதான் இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது.
நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது. 'ஒரே நாடு ஒரே பாடம் ஒரே கல்வி' என்பது கல்வி கற்கும் நோக்கத்துக்கு எதிரானது, என்று விஜய் பாஜக அரசியலுக்கு எதிராக பேசி உள்ளார்.
இதன் மூலம் தான் திமுகவை மட்டும் எதிர்க்க போவது இல்லை.. இனி பாஜகவையும் எதிர்க்க போகிறேன் என்பதை வெளிப்படையாக விஜய் அடித்து சொல்லி உள்ளார். இதில் ஒன்றிய அரசு என்றெல்லாம் கூறி விஜய் நேரடியாக பாஜகவை எதிர்த்து உள்ளார்.
திமுக ஆதரவு; நடிகர் விஜய் திடீரென நீட் எதிர்ப்பு, ஒன்றிய அரசு என்றெல்லாம் பேச தொடங்கி இருப்பது திமுக ஆதரவு நிலைப்பாடு என்று வெளிப்படையாக தோன்றினாலும்.. உள்ளுக்குள் திமுகவின் வாக்கு வங்கியை குறி வைப்பதே அவரின் நோக்கம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
அதன்படி நீட்டை எதிர்த்து.. எங்களின் கொள்கையும் மாநில நலன்தான். அதனால் திமுகவை விட நாங்கள் சிறந்த மாற்றாக இருப்போம் என்று விஜய் கருத்தை முன்வைக்கிறார்.
தமிழ்நாட்டில் வலதுசாரி அரசியல், ஆன்மீக அரசியல் எடுபடாது என்பதால், திராவிட அரசியல் கொள்கைகளை, திராவிட கட்சி அல்லாத கட்சியாக விஜயின் கட்சி முன் வைக்க தொடங்கி உள்ளது. நாங்களும் இதே மாநில உரிமை, சுயமரியாதை கொள்கை கொண்ட கட்சியாக இருப்போம். அதனால் எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று விஜய் முன் வைக்கலாம்.
நீட் எதிர்ப்பு தொடங்கி டெல்லி எதிர்ப்பு வரை பல காரணங்களுக்காக திமுகவிற்கு வாக்களித்த சிலர் இனி விஜய் பக்கம் திரும்பலாம். திமுகவின் வாக்கு வங்கியில் விஜய் இதன் மூலம் பெரிய ஓட்டை போடலாம்.
தன்னுடைய அரசியல் ஸ்டாலின் அல்லது திமுகவிற்கு எதிரானது என்பதை விஜய் சொல்லாமல் சொல்லி இருக்கிறார் என்கிறார்கள். அதாவது திமுகதான் விஜய்க்கு வாழ்த்து சொல்லவில்லை. அதேபோல் திமுகவினர் பெயரை விஜய் தனது அறிக்கையில் கூறவில்லை.
இதன் மூலம் சைலண்ட்டாக தன்னுடைய மெசேஜை விஜய் இதன் மூலம் சொல்லிவிட்டார். யாரை எதிர்த்து தன்னுடைய அரசியல் என்று விஜய் சொல்லாமல் சொல்லிவிட்டார், என்று அக்கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
-
குர்பானி கட்டுப்பாடு.. "நீதிமன்றத்தில் ஒரு பேச்சு, அமைச்சர் ஒரு பேச்சு ஏன்!" எஸ்டிபிஐ கடும் தாக்கு -
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
முதல்வர் விஜய் குறித்து அம்மா ஷோபா சொன்ன ஒரு வரி... நடிகர் விவேக் குறித்தும் உருக்கம்.. விஷயம் இதுதானாம்! -
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
தமிழ்நாடு விஷம் குடித்து இருக்கிறது.. மக்கள் புரிந்து கொள்வார்கள்! தேர்தல் முடிவு பற்றி சுகி சிவம் பரபர பேச்சு -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு












Click it and Unblock the Notifications