திமுக இதுவரை தான் சந்திக்காத புதுமையான எதிரி தவெக.. மற்ற கட்சிகளை எதிர்க்கும் பாணி சரிபடாது.. ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் திமுக-வினருக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே நடந்து வரும் மோதல்கள் உண்மையிலேயே விசித்திரமாக இருக்கிறது தமிழக அரசியல் கட்சிகளுக்கு.. அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல, பத்திரிக்கையாளர்களுக்கும், அரசியல் நிபுணர்களுக்குமே புதிதாக இருக்கிறது. திமுக இதுவரை தான் சந்திக்காத புதுமையான எதிரியை சந்தித்துள்ளது. மற்ற கட்சிகளைப் போல் தவெகவை எளிதாக சமாளிக்க முடியாத அளவிற்கு இருப்பதாக கூறப்படுகிறது. அதன் காரணத்தை பார்ப்போம்.

கரூரில் விஜய் நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் தமிழ்நாட்டை மட்டுமல்ல.. மொத்த இந்தியாவையும் ஆடிப்போக வைத்துள்ளது. அதற்கு காரணம்.. ஒரு நடிகரை அல்லது ஒரு அரசியல் கட்சி தலைவரை பார்க்க வைத்து, கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் இறந்தது என்பது இது தான் முதல் முறை.. இந்த அளவிற்கு கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் அல்லது கட்சி தொண்டர்கள் ஒரு தலைவனை பார்க்க வந்து இறந்தது இதுவே முதல்முறை..

Why is Vijay s Tvk a new enemy that DMK has never faced before

நடிகர் விஜய் தமிழ்நாட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். 2000க்கு பிறகு பிறந்த பலரும் விஜய் ரசிகர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக பெண்கள், குழந்தைகள் பலரும் விஜய் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர் மீது கண்மூடித்தனமான அன்பு வைத்துள்ளவர்களாக இருக்கிறார்கள். அவரை பார்க்கவும், அவருடன் பேசவும், புகைப்படம் எடுக்கவும் மிகமிக ஆர்வம் காட்டுகிறார்கள் விஜய் ரசிகர்கள் பக்குவமே இல்லாமல் பல்வேறு இடங்களில் நடந்து கொண்டதை பல அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றன. இப்போது நடந்த கரூர் சம்பவத்தில் விஜய் ரசிகர்கள் திமுகவிற்கு எதிராக நடத்தும் மோதல் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது.

விஜய் ரசிகர்கள் சண்டை

திமுக பொதுவாக அரசியல் களத்தில் இதுவரை சந்திக்காத புதுமையான எதிரியை சந்தித்துள்ளது. ஏனெனில் திமுக இதுவரையில் கொள்கை சார்ந்த, திட்டம் சார்ந்து, சித்தாந்தம் சார்ந்து மற்ற கட்சிகளுடன் மோதிக்கொண்டிருந்தது. ஆனால் திமுக தற்போது தவெகவின் விஜய் ரசிகர்களுடன் அரசியலில் வித்தியாசமான சண்டையை எதிர்கொள்கிறது. விஜய் செய்தது தவறு என்று குற்றம் சாட்டிய திமுக, அதனை நிரூபிக்க போராடியது. ஆனால் திமுகவிற்கு எதிராக மொத்த விஜய் ரசிகர்களும் திரண்டுள்ளனர்.

கடுமையான எதிர்வினை

அதுவும் எப்படி, நடந்த சம்பவத்திற்கு திமுகவின் சதி என்று குற்றம்சாட்டி கடுமையான எதிர்வினையாற்றி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் திமுகவும் கடுமையான பதிலடி கொடுக்கிறது. ஆனாலும் புதிது புதிதாக வித்தியாசமான பதில்களுடன், இன்ஸ்டா இன்புளுயன்சர்கள் தொடங்கி, பல ரசிகர்கள் களம் இறங்கி திமுகவை கடுமையாக திரும்ப தாக்கி வருகிறார்கள். விஜய்க்காக அவரது ரசிகர்கள் ஆன்லைனில் நடந்து கொள்ளும் விதம் திமுகவை மட்டுமல்ல,, மொத்த அரசியல் கட்சிகளுக்குமே ஷாக் தந்துள்ளது.

புதுமையான எதிரி தவெக

நடப்பதை எல்லாம் பார்த்தால், மற்ற கட்சிகளை போல் எளிதில் சமாளிக்க முடியாத அளவிற்கு விஜய் ரசிகர்கள் நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. ஏனெனில் விஜய் ரசிகர்கள் ஒரு பாரம்பரிய அரசியல் கட்சியோ, சித்தாந்த அடிப்படையிலான இயக்கமோ அல்ல. அவர்கள் தங்கள் நடிகர் மீது கொண்ட அளவு கடந்த தனிப்பட்ட அபிமானம் மற்றும் உணர்ச்சிவசப்பட்ட அன்பின் காரணமாக ஒட்டுமொத்தமாக திரண்டுள்ளார்கள்.


பழிவாங்கும் மோதல்

விஜய் ரசிகர்களுடைய மோதல் என்பது கொள்கை மோதல் அல்ல; மாறாக, தங்கள் தலைவனின் பிம்பத்தைத் தாக்க வரும் ஒரு எதிரியை உணர்ச்சிப்பூர்வமாக பழிவாங்கும் ஒரு மோதலாக மாறி இருககிறது . இதுதான் திமுக-வின் வழக்கமான அரசியல் வியூகங்களுக்குப் புதிய சவாலாக மாறி உள்ளது.

விஜய் ரசிகர்கள் ஆதிக்கம் அதிகம்

சமூக வலைதளங்களில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இவர்களின் தாக்கம் இருக்கிறது. விஜய் ரசிகர் மன்றங்களில் பெரும்பாலும் இளைஞர்கள் அதிகம் உள்ளனர். இவர்கள் சமூக வலைதளங்களில், மீம்ஸ், ட்ரெண்டிங் ஹேஷ்டேக்குகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள்.ஏற்கனவே இவர்கள் அஜித் ரசிகர்களுடன் கடுமையான சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்கள். இப்போது அதைவிட மிக மிக அதிகமாக சண்டை போடுகிறார்கள்.

தலைமைக்கு கட்டுப்படுவார்கள்

பொதுவாக திமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் சில நேரங்களில் கட்சித் தலைமையின் கட்டுப்பாட்டில் செயல்படுவார்கள். ஆனால், ரசிகர்கள் தங்கள் விருப்பப்படி, எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல், மிகக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்துகிறார்கள். இதை அரசியல் கட்சிகளால் சட்ட ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ எளிதில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இருக்கிறது.

மீம்ஸ் மற்றும் ட்ரோல்கள்

திமுக-வின் பிரச்சாரங்களில் அல்லது அமைச்சர்களின் கருத்துக்களில் ஏற்படும் சிறு பிழைகளைக்கூட, விஜய் ரசிகர்கள் உடனடியாகப் பெரிய அளவிலான ட்ரோல் மற்றும் மீம்ஸ் ஆக மாற்றிப் பரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இப்படியான சூழலில் பல்வேறு விவகாரங்கள் தொடங்கி இப்போது கரூர் வரை இருக்கிறது. இது திமுகவிற்கு சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக கரூர் சம்பவத்தில் பக்குவமற்ற முறையில் விஜய் ரசிகர்கள் நடந்து கொள்ளவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. ஒட்டுமொத்தமாக பாரம்பரிய அரசியல் விதிகளைத் தாண்டிய சமூக வலைதளத்தில் திமுகவை தவெக எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. எனவேதான் திமுக புதுமையான எதிரியை சந்தித்திருப்பதாக சொல்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+