Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவிற்கு சிம்ம சொப்பனம் ஆகும் தெற்கு? கணிப்புகளை கவனிச்சீங்களா? அப்போ டார்கெட் 370?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதிய ஜனதா கட்சி (BJP) 2024 லோக்சபா தேர்தலில் 370 இடங்களை வெல்வதை லட்சிய இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆனால் தென் மாநிலங்களில் பாஜக அதிக இடங்களை வென்றால் மட்டுமே இந்த இலக்கை அடைய முடியும்.

2019 ஐ விட 67 இடங்கள் அதிகம் வெல்வோம் என்று பாஜக தலைவர்கள் மேடைக்கு மேடை அறிவித்து வருகின்றனர். ஆனால் பாஜகவால் இந்த இலக்கை அடைய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Why it is difficult to get 370 seats in 2024 polls for Ruling BJP party

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. தமிழ்நாட்டில் கட்சியின் நிலை குறித்தும் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் லோக்பால் என்ற பிரபல கருத்து கணிப்பு நிறுவனம் தமிழ்நாடு அரசியல் நிலவரத்தை கணித்துள்ளது. அதில்,

மொத்த இடங்கள் 39
▪️திமுக கூட்டணி 34 - 37 இடங்களை வெல்லும்
▪️அதிமுக கூட்டணி 1 - 3 இடங்களை வெல்லும்
▪️பாஜக கூட்டணி 0 - 1 இடங்களை வெல்லும்
▪️மற்றவை 0 - 1 இடங்களை வெல்லும்

தமிழ்நாட்டில் திமுகதான் பெரும்பான்மை இடங்களை வெல்லும் என்று இந்த கணிப்புகள் உறுதி செய்கின்றன.

புதுச்சேரியில் நிலவரம்: புதுச்சேரி, அந்தமான், லட்சத்தீவு ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில்
▪️இந்தியா கூட்டணி 1 - 2 இடங்களை வெல்லும்
▪️பாஜக கூட்டணி 0 - 1 இடங்களை வெல்லும்

தென்னிந்தியா நிலவரம்: மொத்தமாக தென்னிந்தியாவில்,

Total Seat 132
▪️இந்தியா கூட்டணி 78 - 82 இடங்களை வெல்லும்
▪️பாஜக கூட்டணி 28 - 34 இடங்களை வெல்லும்
▪️YSRCP 10 - 11 இடங்களை வெல்லும்
▪️அதிமுக 1 - 3 இடங்களை வெல்லும்
▪️️மற்றவை 1 - 3 இடங்களை வெல்லும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது தென்னிந்தியாவில் 28 - 34 இடங்களை மட்டுமே பாஜக வெல்லும் என்று கணிப்பு கூறுகிறது. பாரதிய ஜனதா கட்சி (BJP) 2024 லோக்சபா தேர்தலில் 370 இடங்களை வெல்வதை லட்சிய இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆனால் தென் மாநிலங்களில் பாஜக அதிக இடங்களை வென்றால் மட்டுமே இந்த இலக்கை அடைய முடியும்.

பாஜக இலக்கு: பாஜக தனியாக 370 இடங்களை வெல்வதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) 400 ரன்களை கடக்க வாய்ப்பாக அமையும் என்பதால் பாஜக இந்த மாபெரும் இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. மக்களவையில் 543 இடங்கள் உள்ளன, பாஜக 2014 மற்றும் 2019 இல் முறையே 282 மற்றும் 303 இடங்களை வென்றது.

370 என்ற இலக்கை.. ஜம்மு காஷ்மீரின் 370 நீக்கத்துடன் பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவினர் இணைத்து பேசி வருகின்றனர்.ஆனால் கடந்த முறை வென்றதில் இருந்து கூடுதலாக 67 இடங்களை சேர்ப்பது என்பது பாஜகவிற்கு மிகவும் கடினமான பணியாக இருக்கலாம்.

பாஜகவிற்கு இலக்கு கஷ்டம்: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பெரும்பாலான அரசியல் ஆய்வாளர்கள் ஒப்புக்கொண்டாலும், 370 இடங்கள் என்பது அக்கட்சிக்கு மிகவும் கடினமான ஒன்றாகும். 2019ல் பாஜக வெற்றி பெற்ற மாநிலங்களில் எல்லாம் அதே மாதிரி வெற்றியை மீண்டும் பாஜக பதிவு செய்ய வேண்டும்.

கடந்த முறை குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்ற இடங்களிலும் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். அதோடு இல்லாமல் புதிதாக 67 இடங்களை வெல்ல வேண்டும். கடந்த முறை வென்ற இடங்களில் சில தொகுதிகளை இழக்கும் பட்சத்தில் கூடுதலாக புதிய இடங்களில் வெல்ல வேண்டும்.

தற்போது லோக்சபா தேர்தலில் பாஜக 443 மக்களவைத் தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 100 இடங்களிலும் போட்டியிடுகிறது. இதில் தென்னிந்தியாவில் மட்டும் பாஜக சின்னங்கள் பின்வரும் தொகுதிகளில் போட்டியிடுகின்றன,

தமிழ்நாடு - 19
கேரளா - 18
தெலுங்கானா - 13
ஆந்திரா - 06
பஞ்சாப் - 13
உத்தரகாண்ட்- 02
வடகிழக்கு- 02
மேற்கு வங்கம்- 16

பாஜகவின் இந்த 90 தொகுதிகளில்தான் பாஜகவிற்கு கடுமையான போட்டியே நிலவும். இதில் கர்நாடகா தவிர மற்ற இடங்களில் பாஜகவிற்கு அவ்வளவு சாதகமான சூழ்நிலை இல்லை. இந்த 90ல் பாஜக 20- 25 இடங்களில் வென்றால் கூட மீதமுள்ள 373 இடங்களில் அப்படியே பாஜக தனியாக வெல்வது என்பதற்கு நம்பர்ஸ் ரீதியாக வாய்ப்பு குறைவு.

373ல் 370ல் எப்படி பாஜகவினரால் வெற்றி பெற முடியும்?

குஜராத், உத்தரகாண்ட், பீகார், ஹரியானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக க்ளீன் ஸ்வீப் அல்லது கிட்டத்தட்ட க்ளீன் ஸ்வீப் செய்தது. இந்த முறை ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவில் பாஜக கடுமையான சவால்களை எதிர்கொள்ளக்கூடும். ராஜஸ்தானில் 25 இடங்களிலும் கடந்த முறை பாஜக வெற்றி பெற்றது. லோக்சபா தேர்தல் இந்த முறை பாஜகவிற்கு பெரும் சோதனையாக இருக்கும், போட்டியாக இதில் சில மாநிலங்களில் இருக்கும்.

கடந்த முறை மகாராஷ்டிராவில், 48 இடங்களில் 41 இடங்களை பாஜக கைப்பற்றியது, சிவசேனாவையும் என்சிபியையும் பிளவுபடுத்தியும் கூட அங்கே எதிர்க்கட்சி கூட்டணி வலுவாக இருக்கிறது. அப்படி இருக்க கடந்த முறை வென்றதன் விட பாஜக கூடுதலாக 67 இடங்களை வெல்வது சந்தேகம்தான். பாஜகவின் வெற்றி உறுதியாக இருப்பதாக கணிப்புகள் சொன்னாலும் 370 இடங்களை பெற்று வெல்லுமா என்பது விவாதமாக இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+