"குப்பூஸ்".. இதென்ன சிவப்பு சிவப்பா? சென்னை ஷவர்மா கடை சிக்கனில் இருந்தது என்ன? ஓபன் பண்ணா அதிர்ச்சி
சென்னை: சென்னையில் ஷவர்மா கடைகளில் செய்யப்பட்ட சோதனையில் பழைய சிக்கன்கள் பல பறிமுதல் செய்யப்பட்டன.
கேரளாவில் சமீபத்தில் ஷவர்மா சாப்பிட்டு மாணவி ஒருவர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. 16 வயதே நிரம்பிய தேவானந்தா என்ற மாணவி கசர்கோர்ட்டில் Ideal Food Point என்ற அந்த கடையில் ஷவர்மா சாப்பிட்ட நிலையில் மறுநாளே பலியானார்.
இது இப்படி இருக்க ஒரத்தநாடு பகுதியில் ஷவர்மா சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் பிரவீன், பரிமலேஸ்வரன், மணிகண்டன் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு வயிறு பாதிப்பு, வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

ரெய்டு
இந்த நிலையில் தமிழ்நாடு முழுக்க ஷவர்மா கடைகளில் தீவிர சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. மதுரையில் ஷவர்மா கடைகளில் 10 கிலோவிற்கும் அதிகமான வீணாய் போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இருந்தும் ஷவர்மா கடைகளில் இருந்து வீணான சிக்கல் பறிமுதல் செய்யப்பட்டது. இது போன்ற ஷவர்மா கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

பறிமுதல்
இதன் ஒரு பகுதியாக இன்று சென்னையிலும், திருவள்ளூரிலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கு இருக்கும் ஷவர்மா கடைகள், பிரியாணி கடைகளில் சோதனை செய்தனர். முதலில் ஷவர்மாவை பொது இடங்களில் சாலைகளுக்கு அருகே வைக்க கூடாது என்று உத்தரவிட்டனர். வளசரவாக்கம் , OMR புட் ஸ்ட்ரீட், பட்டாபிராம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஆவடி, அம்பத்தூர், திருமுல்லைவாயல், அகத்திய பகுதிகளில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது.

சென்னை ஷவர்மா
அப்போது ஷவர்மா கடைகளில் இருந்த சிக்கன் சோதனை செய்யப்பட்டது. இதில் ஒரு கடையில் சிக்கன் முழுக்க முழுக்க சிவப்பு நிறத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அங்கு இருந்த பாக்ஸ்களை திறந்து பார்த்ததில் உள்ளே முழுக்க முழுக்க சிவப்பு நிறத்தில் சிக்கன் இருந்தது. இவை எல்லாம் வேதி பொருட்கள் மூலம் கவர்ச்சிக்காக சிறப்பு நிறத்தில் நிறமூட்டப்பட்ட சிக்கன் ஆகும். இவற்றை பொரித்தால் அல்லது ஷவர்மா செய்தால் சிவப்பு நிறத்தில் வசீகரமாக இருக்கும்.

கெமிக்கல்
இதற்காக அதில் கூடுதல் கெமிக்கல்கள் பயன்படுத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது போன்ற சிக்கன் சுமார் 40 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இது போக குப்பூஸ் பறிமுதல் செய்யப்பட்டது. இது அரபி பண் ஆகும். இப்போது குப்பூஸ் மக்கள் இடையே பிரபலம் ஆகி வருகிறது. இதிலும் கூட ஷவர்மா செய்ய முடியும். பழைய குப்பூஸ் நிறைய கடைகளில் இருந்ததை பார்த்த அதிகாரிகள் அதை பறிமுதல் செய்தனர்.
Recommended Video

ஷவர்மா கடைகள்
பொதுவாக ஷவர்மா கடைகளில் குறைந்த பட்சம் 180 டிகிரி வெப்பநிலையிலாவது சிக்கனை வேக வைக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் பல கடைகளில் அப்படியே நெருப்பை குறைத்து வைத்து இருந்தனர். இதையடுத்து சிக்கன்கள் கம்பியிலேயே கெட்டு போகும் நிலை ஏற்படுகிறது. இந்த சிக்கன்களையும் அதிகாரிகள் கைப்பற்றி, அந்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications