‛ஸ்டார்ட்’ ஆயிட்டு! செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு ஏன்? முதல்வர் ஸ்டாலின் கணிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது பற்றி வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர் அளித்த பதில் அதிக கவனம் பெற்ற நிலையில் ஒற்றை வார்த்தை முக்கியத்துவம் பெற்றது.
புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாகவும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 9 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் சென்றார். இந்த சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு இன்று அவர் சென்னை திரும்பினார்.

அவருக்கு திமுக அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இரவு 10.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.
இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் முதலீடு ஈர்க்க சென்றாரா? இல்லாவிட்டால் முதலீடு செய்ய சென்றாரா? என பார்க்க வேண்டும்'' என விமர்சனம் செய்துள்ளாரே? என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு ஸ்டாலின், ‛‛பழனிச்சாமியின் புத்தி அது. தன்னை போலவே எல்லோரும் இருப்பார்கள் என அவர் கருதி இருக்கிறார். இதற்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசும் விளக்கமாக பதிலளித்துள்ளார். இதற்கு விளக்கமாக பதிலளிக்க விரும்பவில்லை'' என்றார்.

அதன்பிறகு இன்னொருவர், ‛‛மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறியுள்ளார். அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஸ்டாலின், ‛‛எங்களின் நீர்வளத்துறை அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார். அதனை நான் படித்து பார்த்தேன். அதில் நாங்கள் உறுதியாக இருப்போம்'' என்றார்.
இதைத்தொடர்ந்து மற்றொரு பத்திரிகையாளர், ‛‛நீங்கள் தமிழ்நாட்டில் இல்லாத சமயத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு உள்ளதே'' என்ற கேள்வியை முன்வைத்தார். இதற்கு முதல்வர் ஸ்டாலின், ‛‛அதாவது இப்போது இருக்கும் பாஜக ஆட்சியை பொறுத்தமட்டில் வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறையை பயன்படுத்தி பழிவாங்குவது, அச்சுறுத்துவது போன்ற செயல்கள் பல மாநிலங்களில் நடந்து வருகிறது. அது இங்கு தொடங்கி உள்ளது'' என்றார்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications