"கன்பர்ம்டு".. இளையராஜாவுக்கு டெல்லி ஃபுல் சப்போர்ட்.. நட்டாவே சொல்லிட்டாரே.. அப்பறமென்ன.. அதேதான்
இளையராஜாவுக்கு எம்பி பதவி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது
சென்னை: இளையராஜாவுக்கு, பாஜக தலைவரே ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருப்பது பல்வேறு சந்தேகங்களையும், பரபரப்பையும் தேசிய அளவில் ஏற்படுத்தி வருகிறது.
Recommended Video
மோடியை இளையராஜா பாராட்டியதாக செய்திகள் வெளியானதில் இருந்தே சோஷியல் மீடியா களம் சூடாகி வருகிறது.. எனவே, இளையராஜாவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.. ட்விட்டரில் இளையராஜாவுக்கு எதிராக ஹேஷ்டேக்குகளும் டிரெண்டாகிறது.
இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜனநாயகமா?
அதில், "இந்தியாவின் மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் இசையமைப்பாளர் இளையராஜாவின் கருத்துக்கள் ஒரு கட்சிக்கும் அதன் கூட்டணிகளுக்கும் விருப்பமில்லாத வகையில் இருந்ததால் தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு நெருக்கமாக இருப்பவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் தொடர்ந்து வார்த்தைகளால் அவரை கும்பலாக இழிவுபடுத்தி வருகின்றனர். இதுதான் ஜனநாயகமா? ஒருவர் வெவ்வேறு கருத்துக்களை கொண்டிருந்தாலும் மகிழ்ச்சியாக வாழலாம். ஏன் அவர்களை அவமானப்படுத்த வேண்டும்?" எனக்கேட்டுள்ளார்.

ஹாட் டாப்பிக்
இதுதான் தற்போது அரசியல் களத்தில் ஹாட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.. காரணம், தனிப்பட்ட முறையில் பிரதமரை புகழ்வது என்பது அவரவர் தனிமனித உரிமை.. கருத்து சுதந்திரமும்கூட.. அந்த வகையில், தங்களுக்கு பிடித்த தலைவரை யார் வேண்டுமானாலும் பாராட்டலாம்.. ஆனால், மோடி மற்றும் அம்பேத்கர் இருவருக்குமே ஒரு ஒற்றுமை உள்ளது, அவர்கள் இருவருமே ஏழ்மையின் ஒடுக்குமுறையை அனுபவித்தவர்கள் என்பதால் அந்த ஏழ்மையை ஒழிக்க அவர்கள் பாடுபட்டுள்ளார்கள்.

திருமாவளவன்
அம்பேத்கர் இருந்திருந்தால், மோடியின் செயல்பாட்டை பாராட்டி இருப்பார்" என்ற இளையராஜாவின் ஒப்பீடுகளைதான் பலரால் ஜீரணிக்க முடியவில்லை. திமுக உட்பட பல கட்சிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தன.. விசிக திருமாவளவன் மட்டும் தன்னுடைய ஆதங்கத்தை வேறுவிதமாக வெளிப்படுத்தினார்.. 40 வருட மக்களின் ஆதரவை வெறும் நாலே நாளில் இழந்து கொண்டிருக்கிறார் இளையராஜா.,. இத்தனை எதிர்ப்புகள் தனக்கு உள்ளது என்று தெரிந்தும், தன் முடிவில் பின்வாங்க போவதில்லை என்ற திட்டவட்ட அறிவிப்பையும் வெளியிட்டு விடவும், அது மேலும் பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.

இளையராஜா
இதனிடையேதான், இளையராஜாவுக்கு எம்பி பதவி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது... தமிழகத்தின் சுப்பிரமணிய சுவாமியின் பதவிக்காலம் முடிவடைவதால் அந்த பதவியில் இளையராஜா நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது... பொருளாதாரம், இலக்கியம், கலை, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிந்த 12 பேரை மாநிலங்களவை உறுப்பினராக ஜனாதிபதியால் நியமிப்படுவது வழக்கம்... அந்த வரிசையில் இளையராஜா இடம் பெறுவார் என்கிறார்கள்..

இளையராஜா பதவி
இப்படி ஒரு விஷயம், சோஷியல் மீடியாவில் கசியவும், இது உண்மைதானா? அல்லது புரளியா? என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.. மேலும் சிலரோ, இந்த பதவிக்காகத்தான், பிரதமரை இளையராஜா புகழ நேரிட்டதா என்று தங்களின் சந்தேகங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில்தான், இளையராஜாவுக்கு எம்பி பதவி உறுதிதான் என்பதுபோல, ஜேபி நட்டாவின் அறிக்கை வெளியாகி உள்ளது.. காரணம், இதுவரை தமிழகத்தின் ஒரு இசையமைப்பாளருக்கு ஜேபி நட்டா ஆதரவு தந்துள்ளது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது..

ஜேபி நட்டா
மேலும், இப்படி ஒரு வெளிப்படையான ஆதரவை நட்டா, வேறு யாருக்கும் அறிக்கை வெளியிட்டு தெரியப்படுத்தியதும் இல்லை.. பாஜக தலைவரே ஒரு ஆதரவு அறிக்கையை வெளியிடுகிறார் என்றால், எம்பி பதவி உறுதிதான் போல என்ற சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்துகிறது.. எப்படி இருந்தாலும், தேசிய அளவில் இளையராஜாவின் பெயர் அடிபட்டு வந்தாலும், தமிழக மக்களின் மனங்களில் இருந்து அவர் மெல்ல மெல்ல வெளியேறி கொண்டிருக்கிறார் என்பதையும் நாம் சொல்ல வேண்டி உள்ளது..!
-
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications