உள்ளே வந்த ஜான் லூயிஸ்.. டிஎன்பிஎஸ்சி எழுதுறவங்களுக்கு ஜாக்பாட்..ஸ்டாலின் களமிறக்கிய கேம் சேஞ்சர்
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக அ. ஜான் லூயிஸ் IAS நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவரின் நியமனம் 6 முக்கியமான விஷயங்களுக்காக கவனம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) என்பது தமிழ்நாடு அரசின் ஒரு துறையாகும், இது மாநிலத்தின் பொதுப் பணிகளில் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதை நிர்வகிக்கும் பொறுப்பாகும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15000 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது, அது தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். அடுத்த மூன்று வருடங்களில் 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. டிஎன்பிஎஸ்சியில் குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு பணிகளுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த 08.03.2024 முதல் 30.04.2024 வரையிலான காலத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி 1இல் அடங்கிய பதவிகளுக்கு 94 நபர்களும், தொகுதி II இல் அடங்கிய பதவிகளுக்கு 47 நபர்களும், ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு 851 நபர்களும். தொகுதி VA தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு 165 நபர்களும் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப மொத்தம் 1163 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு; இதையடுத்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை நடத்தியது. தமிழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 6624 க்ரூப் 4 காலியிடங்களை நிரப்பவே இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் நடந்த 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதியுள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இரண்டு நாட்களுக்கு முன் துணை கலெக்டர் 16 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி)-23, வணிகவரித்துறை உதவி ஆணையர்-14, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 21, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்- 14, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 1, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 1 பணியிடம் என 90 இடங்களை நிரப்புவதற்கான முதல் நிலை தேர்வு நடைபெற்றது.
நியமனம்: இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக அ. ஜான் லூயிஸ் IAS நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவரின் நியமனம் 6 முக்கியமான விஷயங்களுக்காக கவனம் பெற்றுள்ளது.
ஜான் லூயிஸ் IAS மிகவும் அனுபவம் வாய்ந்தவர். இவரின் வருகையால் டிஎன்பிஎஸ்சியில் அதிரடியான மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜான் லூயிஸ் IAS நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்றவர். இதனால் இனி இதன் பணி நியமனங்களில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்.
இவர் ஏற்கனவே கடல்சார் துறை, அரசு கேபிள் நிர்வாகம் உள்ளிட்ட பல துறைகளில் பணியாற்றி உள்ளார். இந்த அனுபவங்கள் காரணமாக டிஎன்பிஎஸ்சி துறையிலும் சிறப்பாக செயலாற்றுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முக்கியமாக டிஎன்பிஎஸ்சியில் தேர்வு தாள்களை திருத்துவது அதிக காலம் எடுக்கிறது. இதுவும் இவரின் வருகைக்கு பின் மாற்றம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications