மூணு தோல்வி அண்ணாமலை பெயரை தவிர்க்கவே போட்டியில்லை.. வாசகர் அங்கமுத்து ஆதங்கம்
சென்னை: அண்ணாமலையின் தீர்க்க தரிசனம் தான் தோற்றுவிடுவோம் என்பது. அப்படி தோற்றுவிட்டால், பத்து தோல்வி பழனிச்சாமியுடன் மூணு தோல்வி அண்ணாமலை என்று கோர்த்து விடுவார்கள்.
தமிழக பிஜேபியில் சில தலைவர்கள் அண்ணாமலை தேர்தலில் நிற்க கூடாது என்றும் நின்றால் தோற்றுவிட வேண்டும் என்று இப்போதே யாகம் வளர்க்க தொடங்கி விட்டார்கள். இதை தெரிந்துதான் அவர் நழுவிகொண்டிருக்கிறார்.

இப்போதாவது செல்வாக்கு இருப்பதாக அலப்பறை கொடுத்துக் கொண்டிருக்கலாம். தோற்றுவிட்டால் அரசியல் எதிர்காலமே போய் விடும் என அஞ்சுகிறார்.
தலைவராக இருந்த போது கசிந்த வருமானங்களை வைத்து தனி ஆவர்த்தனம் செய்ய விரும்புகிறார். ஒரு ராஜ்ய சபா சீட்டு அவர் எதிர்பார்ப்பு. அத்துடன் மத்தியில் அமைச்சர் பதவி.பி எல் சந்தோஷ் என்ன வாக்குறுதி கொடுத்திருக்கிறார் என்பது அவருக்கும் அண்ணாமலைக்கும்தான் வெளிச்சம். இவ்வாறு நமது வாசகர், அங்கமுத்து.
அண்ணாமலை ஏற்கனவே கடந்த சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சியிலும், லோக்சபா தேர்தலில் கோவை தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். எனவே, இம்முறை பாஜக உள்ளேயும், அதிமுக உள்ளேயும் அணுசரணை இல்லாத காலகட்டத்தில் போட்டியிட்டால் தோல்வி உறுதிதான் என்பதை அறிந்துள்ளார் என்பதை அங்கமுத்து ஆணித்தரமாக நம்புகிறார் போலும்.
அண்ணாமலை கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு சுமார் 68,000க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றிருந்தாலும், வெற்றி பெற முடியவில்லை. அதேபோல், 2024 லோக்சபா தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு சுமார் 4.5 லட்சம் வாக்குகள் பெற்றும் தோல்வியை சந்தித்தார். இந்த இரண்டு முக்கிய தேர்தல் தோல்விகளும் அவரது எதிர்கால அரசியல் பயணத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா?










Click it and Unblock the Notifications