"காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர்".. கோவை ஷர்மிளாவுக்கு கார் ஏன்? கமலின் பிளானை உடைத்த வானதி
சென்னை: காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளரை போன்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனின் செயல்பாடுகள் உள்ளன என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் ஷர்மிளா. பெண் பேருந்து ஓட்டுநர். இவர் கோவை காந்திபுரம் முதல் சோமனூர் செல்லும் தனியார் பேருந்தில் பணிபுரிந்து வந்தார்.
இதையடுத்து கோவை தெற்கு சட்டசபை உறுப்பினர் வானதி சீனிவாசன் ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் பயணம் செய்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதையடுத்து தூத்துக்குடி எம்பி கனிமொழி, ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் கடந்த வெள்ளிக்கிழமை காந்திரபுரத்தில் இருந்து ஹோப்ஸ் வரை பயணம் செய்தார்.

கனிமொழி பயணத்தின் போது அந்த பேருந்தில் பணியாற்றி வரும் பெண் பயிற்சி நடத்துநர், கனிமொழி எம்பியிடம் பேருந்து பயணத்திற்கு கட்டணம் கேட்டுள்ளார். கனிமொழி தனது பிஏ மூலம் டிக்கெட்டை பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து கனிமொழி ஹோப்ஸ் சாலை அருகே இறங்கிவிட்டார். பின்னர் ஷர்மிளா, கனிமொழி எம்பியிடம் ஏன் டிக்கெட் கேட்டீர்கள் என பெண் பயிற்சி நடத்துநரிடம் கேட்டுள்ளார்.
இதையடுத்து நான் வேலையை விட்டு நிற்க போகிறேன் என ஷர்மிளா கூறியதாக தெரிகிறது. இதனிடையே உரிமையாளர் துரைகண்ணுவிடம் பெண் நடத்துநர், கனிமொழி எம்பியிடம் நடந்து கொண்ட விதம் குறித்து ஷர்மிளா புகார் கூறியுள்ளார். ஆனால் உரிமையாளரோ இதையெல்லாம் விளம்பரத்திற்காக செய்கிறாயா என கேட்டதால் அதிர்ச்சி அடைந்த ஷர்மிளா சிறிது நேரத்தில் அந்த பேருந்து நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கமல்ஹாசன், ஷர்மிளாவை வரழைத்து அவருக்கு வாடகைக் கார் ஓட்டுவதற்காக புதிய காரை பரிசளித்துள்ளார். இதுகுறித்து வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளரை போன்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனின் செயல்பாடுகள் உள்ளன.
விளம்பர அரசியலுக்காக பெண் பேருந்து ஓட்டுநர ஷர்மிளாவுக்கு கார் வழங்கியுள்ளார். கோவை மக்களின் கவனத்தை பெறவே ஷர்மிளாவுக்கு கார் வழங்கியுள்ளார். கமல்ஹாசனின் அரசியல் நிலைப்பாடு பெருமளவு மாறிவிட்டது என கடுமையாக விமர்சித்துள்ளார். கமல்ஹாசன் கடந்த சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் வானதியை எதிர்த்து போட்டியிட்டு மிகவும் சொற்ப வாக்குகளில் தோல்வி அடைந்தார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசன் தனக்கு செல்வாக்கு உள்ளதாக கருதப்படும் கோவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கோவை ஷர்மிளாவுக்கு கமல் உதவி செய்திருப்பது அரசியல் ரீதியாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications