எல்லாம் பேசுவார்.. ஆனால் பாஜகவை எதிர்க்க மாட்டார்.. அதுதான் கமல்.. கரு.பழனியப்பன் விளாசல்!

கமல்ஹாசன் இப்படியே வீடியோ போடுவதுதான் திமுக கூட்டணிக்கு நன்மை பயக்கும் என்று கரு. பழனியப்பன் பேட்டி அளித்து இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல்ஹாசன் இப்படியே வீடியோ போடுவதுதான் திமுக கூட்டணிக்கு நன்மை பயக்கும் என்று கரு. பழனியப்பன் பேட்டி அளித்து இருக்கிறார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விருதுநகர் வேட்பாளர் முனுசாமியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அதில், நீட் தேர்வை ரத்து செய்தால் மட்டும் தமிழகம் முன்னேறி விடுமா? உங்களுக்கு வேண்டாம் என்று சொல்லி நீட்டை எடுத்துவிட்டால் தமிழகம் முன்னேறிவிடுமா?

அது மட்டுமா முக்கியம்.. படிக்கின்ற பிள்ளைக்கு நல்ல உணவு வேண்டாமா? நல்ல குடிநீர் வேண்டாமா?. அதை எல்லாம் இவர்கள் செய்ய மாட்டார்கள். அதை பற்றி பேச மாட்டார்கள் என்று கமல்ஹாசன் குறிப்பிட்டு இருந்தார்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இந்த நிலையில் இதுகுறித்து இயக்குனரும், நடிகருமான கரு. பழனியப்பன் பேட்டியளித்துள்ளார். அதில், கமல்ஹாசன் நிறைய பேசுகிறார். ஆனால் அவர் ஒன்றை பற்றி மட்டும் பேசுவதில்லை. இந்த மதசார்பற்ற நாடு இப்படியே நீடிக்க வேண்டும் என்றால் பாஜக ஒழிய வேண்டும். பாஜக ஒழிந்தால் மட்டுமே இந்த நாடு இப்படி நன்றாக நீடிக்கும். இதுதான் அடிப்படை கேள்வி.

கமல்ஹாசன் இல்லை

கமல்ஹாசன் இல்லை

ஆனால் அதை கமல்ஹாசன் பேசுவதில்லை. ஒருதடவை கூட கமல்ஹாசன் பாஜகவிற்கு எதிராக பேசவில்லை. மதசார்பற்ற தன்மை குறித்து அவர் பேசுவதில்லை. அதை விட்டுவிட்டு ஏதோ லைட்டு போடுவேன் என்கிறார். தண்ணீர் கொடுப்பேன் என்கிறார். இதெல்லாம் ஏற்கனவே கொடுத்துவிட்டார்கள்.

கலர் கலர் தேர்தல் அறிக்கைகள்.. எது பெஸ்ட்.. எது வேஸ்ட்.. வாங்க பார்க்கலாம்!

குறும்படம் போடுகிறார்

குறும்படம் போடுகிறார்

கமல் குறும்படம் போடுகிறார். அதில் டீவியை உடைக்கிறார். அதில் நீட்டை பற்றி பேசும் கமல்ஹாசன், அனிதாவின் பெயரை கூட சொல்லவில்லை. இருக்கட்டும். அனிதாவின் குடும்பத்திடம் யாரிடம் வாக்களிக்க வேண்டும் என்று கேளுங்கள் என்கிறார். ஆனால் அவர்களே திருமாவளவனுக்காகத்தான் ஓட்டு போட வேண்டும் என்று கூறிவிட்டனர்.

அனிதா மரணம்

அனிதா மரணம்

அனிதாவின் மரணத்தின் போது நீங்கள் சொன்னது நியாபகம் இருக்கிறதா? நீட்டை குறித்து உங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறினீர்கள். திருமாவளவன் போன்றவர்கள் இதற்காக போராட வேண்டும் என்று கூறினீர்கள். நீட்டிற்கு எதிராக ஒடுக்கப்பட்டவர்கள் மட்டும் தான் குரல் கொடுக்க வேண்டுமா? நீங்களே சொல்லுங்கள்.

நல்ல பிரச்சாரம்

நல்ல பிரச்சாரம்

நீங்கள் இப்படி பிரச்சாரம் செய்வதுதான் எங்களுக்கு நன்மை பயக்கிறது. நீங்கள் இப்படியே வீடியோ போடுங்கள். அப்போதுதான் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று புரிந்து கொள்வார்கள். உங்கள் வீடியோவை பார்த்தால்தான் மக்களுக்கு நன்மை பயக்கும் என்று கரு. பழனியப்பன் கிண்டலாகவும், கோபமாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+