உற்சாகத்தில் திளைக்கும் கமல்.. முதல்வருடன் திடீர் சந்திப்பு.. அந்த விஷயத்துக்கு நன்றி சொன்னாரா?
சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்தார்.
Recommended Video
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலினை கமல்ஹாசன் சந்தித்துள்ளார்.
சென்னை முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது விக்ரம் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் ஆர்.மகேந்திரன் உடனிருந்தார்.

விக்ரம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பஹத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, காயத்ரி, செம்பன் வினோத் என பலர் நடித்துள்ள இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

உற்சாகத்தில் கமல்
‘விக்ரம்' படம் வெளியாகி 10 நாட்களைக் கடந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூலை நெருங்கி வருகிறது. 'விக்ரம்' படம் பெருவெற்றி பெற்றதையடுத்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், உதவி இயக்குநர்கள் உள்ளிட்டோருக்கு பரிசுகளை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார் கமல்ஹாசன்.

ரசிகர்களுக்கு நன்றி
படத்தின் வெற்றிக்கு ரசிகர்களிடம் நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் கமல்ஹாசன் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார். படம் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், அண்மையில் நடிகர் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தார் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி.

முதல்வருடன் சந்திப்பு
இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் 'விக்ரம்' வெற்றியையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்தார். இந்தச் சந்திப்பின்போது ‘விக்ரம்' திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன் உடனிருந்தார்.

சிறப்புக் காட்சிக்கு நன்றி?
‘விக்ரம்' வெளியான முதல் 3 நாட்களுக்கு சிறப்பு காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன், சிறப்புக் காட்சிகளை வெளியிட அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications