சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரகாஷ்ராஜுக்கு இருக்கும் தைரியம் ஏன் கமலுக்கு இல்லை.. "அவரை" பற்றி மட்டும் பேச்சே காணோமே..?

கமல் பிரச்சாரங்களில் பாஜக எதிர்ப்பு அவ்வளவாக இல்லை என கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: இதுவரை தன்னுடைய பிரச்சாரங்களில் மநீம தலைவர் கமல்ஹாசன், பாஜகவை நேரடியாகவே விமர்சிக்கவில்லையே, அது ஏன்? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சமீப காலமாக கமல்ஹாசனின் அரசியல் பெரிதும் கவனத்தை ஈர்த்து வருகிறது.. முன்பெல்லாம் மறைந்த ஜெயலலிதாதான், மற்ற கட்சிகளைவிட பிரச்சாரத்தை முன்கூட்டியே ஆரம்பிப்பார்.. அறிவிப்புகளை அதிரடியாக தெறிக்க விடுவார்.

இந்த முறை அதிமுக, திமுக இரு கட்சிகளுமே, ஜாக்கிரதையான காய் நகர்த்தலில், திட்டமிட்டு வரும்போது, கமல்தான் முதல் பிரச்சாரத்தை கையில் எடுத்தார்.. இது பாராட்டுக்குரியது.. துணிச்சல் மிகுந்தது.

கமல்

கமல்

அதேபோல, இவரது பிரச்சாரங்களில் மக்கள் திரண்டு வருவதை பார்க்க முடிகிறது.. ஒரு நடிகரை பார்ப்பதற்காக இத்தனை பேர் திரண்டு வருகிறார்கள் என்று இதனை எடுத்து கொள்ளக்கூடாது.. கமல் குழந்தையாக இருந்ததிலிருந்தே, அவரை பூரிப்புடன் பார்த்த தமிழகம் இது. அதேசமயம், சென்ற முறை மநீம பிரச்சாரத்தைவிட, இந்த முறை கமலின் பிரச்சாரத்துக்கு கூட்ட நெருக்கி தள்ளுகிறது என்றால், அதற்கு காரணம் கமலின் நூதன அறிவிப்புகளும், தவிர்க்க முடியாத பல திட்டங்களும்தான் என்பதை மறுக்க முடியாது.

பாஜக

பாஜக

ஆனால், ஒரே ஒரு சந்தேகம்தான் எழுகிறது.. திமுகவைவிட, அதிமுகவை மட்டுமே குறி வைத்து இவரது பிரச்சாரம் இருப்பது ஏனோ? அதேபோல பாஜகவை நேரடியாக அட்டாக் செய்யாமல் கமல் இந்த தேர்தலை சந்திப்பது ஏனோ? என்ற சந்தேகம் எழுகிறது.. இப்படித்தான் லாக்டவுன் சமயத்தில், பிரதமர் மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் திட்டங்களில் ஏழைகளுக்கு என்ன கிடைக்கப் போகிறது என்பதை எதிர்பார்ப்பேன் என்று கமல் ஒருமுறை கூறியிருந்தார்.

 ஷா - கண்டனம்

ஷா - கண்டனம்

ஆனால் அதை பற்றி இப்போதுவரை வாயே திறக்கவில்லை.. தமிழக அரசுக்கு எதிரான பல்வேறு அறிவிப்புகளால் பாஜக மீது மக்களுக்கு அதிருப்தி உள்ள நிலையில், அக்கட்சியை கமல் விமர்சித்து பேசாதது மேலும் சந்தேகத்தை உண்டு பண்ணுகிறது.. எனினும், தமிழகத்திலேயே பிரதமரை நேரடியாக அன்று விமர்சித்ததும், கேள்விகேட்டதும் கமல்தான் என்பதை மறுக்க முடியாது.. "எந்த ஷாவும் மாற்றிவிட முடியாது" என்று காட்டமாக பேசியதையும் மறந்துவிட முடியாது.. தற்போதைய பிரச்சாரங்களில் மட்டும் அது குறைந்துவிட்டது அவ்வளவுதான்.

 பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ்

நாங்கள் பாஜகவின் பி டீம் இல்லை என்று பலமுறை விளக்கம் சொல்லும் கமல், சூரப்பா விஷயத்தில் மட்டும் ஏன் அப்படி ஆதரவு தருகிறார் என்ற கேள்விக்கும் இப்போதுவரை பதில் இல்லை... இன்னும் ஓபனாக சொல்லப்போனால், பிரகாஷ்ஜுக்கு இருக்கும் தைரியம்கூட கமலுக்கு ஏன் இல்லை என்ற கேள்வியைதான் கேட்க தோன்றுகிறது.. பிரகாஷ்ராஜூம் சினிமாவை சார்ந்தவர்தான்.. இத்தனைக்கும் கமலைவிட அனுபவமும், வயதும் குறைவுதான்.

 சந்தேகம்

சந்தேகம்

ஆனாலும் லங்கேஷ்வர் விவகாரத்தில், நேரடியாகவே பிரதமரை சுட்டிகாட்டி ட்வீட் போட்டவர்... கர்நாடக மாநிலத்தில் பாஜகவின் பெரும் அதிருப்திக்கும், எதிர்ப்புக்கும் ஆளானார் பிரகாஷ்ராஜ்.. இப்படி ஒரு தைரியம் ஏன் கமலுக்கு இல்லை? ஒருவேளை இனிவரும் பிரச்சாரங்களில் பாஜகவுக்கு எதிரான குரலை எழுப்புவாரா? தன்னுடைய பழைய ஆதங்கங்களை மறுபடியும் பதிவு செய்வாரா? என்று பொறுத்திருந்து பார்க்காம்.

English summary
Why Kamalhasan is not criticizing the BJP too much in his campaign
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X