ஏமாற்றிய பாமக.. 2ம் இடம் கூட வர முடியாது.. அதிமுகவிற்கு இந்த தேர்தல் அமில சோதனை.. ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக - பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 10 தொகுதிகளில் பாமக போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தைலாபுரம் தோட்டத்தில் நடந்த சந்திப்புக்கு பின்னர் ராமதாஸ், அண்ணாமலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதிமுகவிற்கு இது ஒரு வகையில் பெரிய பின்னடைவாக மாற போகிறது.

அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகும் என்பது போல உருவான தோற்றம் சட்டென்று உடைந்து, பாஜகவுடன் கூட்டணியை இறுதி செய்துள்ளது பாமக. அதிமுக கூட்டணிக்குள் பாமகவை இழுக்க, முன்னாள் அமைச்சர் சண்முகத்தை தைலாபுரம் தோட்டத்துக்கு அனுப்பி வைத்தார் எடப்பாடி. முதல் சந்திப்பிலேயே, 15 லோக்சபா + 1 ராஜ்யசபா என சொன்னார் ராமதாஸ். இந்த டீலிங்கை எடப்பாடி ஏற்கவில்லை.

Why losing PMK from the alliance is a big failure for AIADMK

தொடர்ந்து நடந்த மறைமுகப் பேச்சுவார்த்தையில், 5+1 அல்லது 8 லோக்சபா என்பதை எடப்பாடி முன்னிறுத்தினார். மேலும் தேர்தல் செலவுகளுக்கு பாமக தரப்பிடம் நேரடியாக பணம் தரப்படாது. அதிமுகவே பார்த்துக் கொள்ளும் என சொல்லப்பட்டது. இதையும் பாமக ஏற்றுக்கொள்ளாத நிலையில் இந்த கூட்டணி கைகூடவில்லை.

பாமக - பாஜக கூட்டணி: இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜக - பாமக கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி இன்று கையெழுத்தாகி உள்ளது. நேற்று மதியம் அதிமுக கூட்டணி கைகூடாத நிலையில் மாலையில் பாஜக - பாமக கூட்டணி உறுதி ஆனது. இன்று காலை பாமக - பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

அன்புமணி 10 லோக்சபா சீட் + 1 ராஜ்ய சபா சீட் + ஒரு அமைச்சர் பதவி கேட்க.. 1 ராஜ்ய சபா சீட் + ஒரு அமைச்சர் பதவி கிடையாது. 10 லோக்சபா சீட் தருகிறோம் என்று பாஜக சொல்லி உள்ளதாம்

இதையடுத்து பாமக இறங்கி வந்து 10 லோக்சபா சீட் + அமைச்சர் பதவி என்றுள்ளதாம். இதையடுத்து 10 லோக்சபா சீட் ஓகே + மத்திய பிரிவுகளில் பெரிய பதவி ஒன்று + பாமகவில் ஒருவர் எம்பி ஆனால் அமைச்சர் பதவி தர முடியாது. ஆனால் பார்க்கலாம் என்று பாஜக கூறியுள்ளதாம். இதை பாமக ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வருகின்றன.

இதையடுத்து பாஜக - பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 10 தொகுதிகளில் பாமக போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது

அதிமுகவிற்கு பின்னடைவு; பாமகவின் இந்த முடிவு கண்டிப்பாக அதிமுகவிற்கு அதிர்ச்சி அளிக்கும். வாக்கு சதவிகித ரீதியாக இது அதிமுகவிற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக அதிமுக வடமாவட்டங்களில் சில தொகுதிகளில் இரண்டாம் இடம் கூட பிடிக்க முடியாத நிலை ஏற்படலாம்.

பாமக 2021 சட்டசபை தேர்தலில் வாங்கிய‌ வாக்கு சதவிகிதம் 3.80% தான். மொத்தமாக பார்த்தால் இது குறைவாக தோன்றினாலும் பாமக தொகுதி வாரியாக கணிசமான வாக்குகளை பெற்றது. 23 இடங்களில் பாமக போட்டியிட்ட நிலையில் அவர்களுக்கு 5 எம்.எல்.ஏக்கள் தான் கிடைத்தார்கள். அதே சமயம் 17 வேட்பாளர்கள் இரண்டாம் இடம் பிடித்தனர். ஒவ்வொரு தொகுதியிலும் வாக்கு சதவிகித அடிப்படையில் பார்த்தால் பாமக மிக அதிக அளவில் வாக்குகளை பெற்று உள்ளது.

இதில் கும்மிடிபூண்டி, பூந்தமல்லி (எஸ்சி), திருப்பூர், சோளிங்கர், காஞ்சிபுரம், ஆற்காடு, திருப்பத்தூர், பென்னாகரம், தருமபுரி , கீழ்பென்னாத்தூர், வந்தவாசி (எஸ்சி), செஞ்சி, மயிலம், சங்கராபுரம், மேட்டூர் , சேலம் மேற்கு, ஆத்தூர் , ஜெயங்கொண்டம் , விருத்தாச்சலம் , நெய்வேலி, மயிலாடுதுறை, கீழ்வேளூர் (எஸ்சி) உள்ளிட்ட 22 தொகுதிகளில் 20 சதவிகிதத்திற்கும் மேல் பாமக வாக்கு சதவிகிதம் பெற்றது. இதில் 15 தொகுதிகளில் 30 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பாமக பெற்று உள்ளது.

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், அரியலூர் போன்ற வட மாவட்டங்களில் 2021ல் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணியை விட அதிக எம்எல்ஏக்களை பெற்றது. அதிலும் சேலம் (9/10), தர்மபுரி (5/5) இடங்களை வென்றது.

இதற்கு காரணம் பாமகவின் வாக்குகள். சேலம், தருமபுரியை தூக்க அதிமுகவிற்கு உதவியாக இருந்ததே பாமகதான். பாமக இப்படி பல தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்தது , 30+ வாக்குகளை பெற்றதே அதிமுகவின் வெற்றிக்கு காரணம். முக்கியமாக வன்னியர்கள் அதிகம் உள்ள வடக்கு மண்டலத்தில் பாமக தீவிர ஆதிக்கம் செலுத்தியது.

பாமக இல்லையெனில் சென்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 35 எம்எல்ஏக்கள் தான் பெற்று இருக்கும். இப்போது பாமக, பாஜகவிற்கு போய்விட்டால் அதிமுகவிற்கு கொங்கு பெல்ட் மட்டும் தான் பலம் என்ற நிலை ஏற்படும். அதிலும் வடக்கு மாவட்டங்களில் இரண்டாம் இடம் கூட பிடிக்க முடியாத சூழல் பாமகவிற்கு ஏற்படலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+