ஆதரவின்றி போராடும் ஜெ தீபா.. திடீரென "பதுங்கும்" மாதவன்.. பரபரப்பு அறிக்கைக்கு சசிகலாதான் காரணமா?
சென்னை: தன்னை விவாகரத்து செய்ய வற்புறுத்துகிறார் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா புகாரளித்த நிலையில் அதை அவரது கணவர் மாதவன் மறுத்து திடீரென பம்முவதற்கு சசிகலாதான் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெயலலிதாவின் அண்ணன மகள் தீபா- மாதவன் தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படும். ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வர். திடீரென இருவரும் சேர்ந்து ஜெயலலிதா சமாதிக்கு மாலை அணிவிக்க செல்வர்.
இப்படியாக இருந்த ஜெ தீபாவின் வாழ்வில் புயல் ஏற்பட்டதாக அவரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெ தீபா கூறுகையில் என்னை பிடிக்கவில்லை என கூறி விவாகரத்து செய்ய மாதவ் வற்புறுத்துகிறார். இதற்கு காரணம் எனக்கு ஏதாவது ஒன்று என்றால் தட்டிக் கேட்ட யாருமல்லை, எனக்கு உதவி செய்யவும் யாருமில்லை.

விவாகரத்து
இதனால்தான் என்னிடம் தினமும் விவாகரத்து கேட்டு டார்ச்சர் செய்து வருகிறார். இரவு 12 மணிக்கு ஆரம்பிககும் சண்டை விடிய விடிய நடக்கிறது. எனது தூக்கம் கெடுகிறது, இதனால் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதனால் யாராவது ஒருத்தர் மாதவனை தட்டி கேட்க வேண்டும் என்பதால்தான் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்தேன் என கூறியிருந்தார்.

மாதவன் அறிக்கை
இந்த விவகாரம் வைரலான நிலையில் இது குறித்து கேட்பதற்காக ஒன் இந்தியா சார்பில் ஜெ தீபாவையும் மாதவனையும் தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால் அவர்கள் போனை எடுக்கவில்லை. தற்போது ஜெ தீபாவின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து மாதவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தீபா செய்திக்கு மறுப்பு
அந்த அறிக்கையில் எனது மனைவி தீபா என்னைப் பற்றி அளித்த செய்தியினை மறுக்கிறேன். தீபாவின் உடல்நிலை குறித்து எனக்கு முழு அக்கறை உள்ளது. நான் தான் அவரை இன்றுவரை மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று முழுமையாக பார்த்துக் கொள்கிறேன். அவர் தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளார்.

மருந்தின் தாக்கம்
மருந்தின் தாக்கம் அவரிடத்தில் உள்ளது. அவரை விவாகரத்து செய்யும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. சராசரியாக எல்லா வீடுகளிலும் நடக்கும் குடும்ப தகராறு தான். அவர் ஏதோ கோபத்தில் வாட்ஸ் ஆப்பில் ஸடே்டஸ் போட்டுள்ளார்.

நேசிக்கிறேன்
அவரை அன்று போல் இன்றும் நேசிக்கிறேன். அவர்மீது எள்ளளவும் மாறாத அன்பும் பிரியமும் கொண்டிருக்கிறேன். அவரை விவாகரத்து செய்யும் எண்ணம் துளியும் இல்லை. இதுவும் கடந்துப் போகும் என அறிக்கை வெளியிட்டுள்ளார். இத்தனை நாட்களாக ஜெ தீபா குற்றம்சாட்டினாலும் அதுகுறித்து எந்த விளக்கத்தையும் மாதவன் அளிக்க மாட்டார். இருவரும் பேட்டி கொடுத்தாலோ இல்லை ஜெயலலிதா சமாதிக்கு சென்றாலோ மட்டுமே இவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து கொண்டது தெரியவரும்.

மறுப்பு அறிக்கை
ஆனால் தற்போது மறுப்பு தெரிவித்து அறிக்கையே கொடுக்கிறார் என்றால் திடீரென பம்முவதற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது. தீபாவின் முக்கிய கவலையே தனக்கு யாருமில்லை என்பதுதான். ஒரு வேளை சசிகலா, தீபாவுக்கு ஆதரவாக இருப்பாரோ என கருதியே மாதவன் அவரது குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கலாம் என விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

சசிகலா காரணமா
இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் கேட்ட போது ஜெ தீபா - மாதவன் வீட்டில் என்ன நடக்கிறது யார் மீது தவறு என்பதெல்லாம் நமக்கு தெரியாது. ஆனால் மாதவன் தற்போது பதுங்குகிறார் என்றால் சசிகலா தீபாவுக்கு ஆதரவு கொடுக்க வாய்ப்பிருக்கிறது. என்னதான் தீபா, சசிகலா மீது தன் அத்தையை பார்க்கவிடவில்லை என குற்றம்சாட்டினாலும் தற்போது தீபாவுக்கு ஆதரவு தேவை, அதனால் நிச்சயம் சசிகலாவின் ஆதரவை ஏற்பார் என அதிமுக வட்டாரத்தினர் தெரிவிக்கிறார்கள்.
-
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம்












Click it and Unblock the Notifications