Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸ் ஆதரவாளர் சையது கானை திடீரென சந்தித்தது ஏன்? - டிடிவி தினகரன் சொன்ன விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான தேனி மாவட்டச் செயலாளர் சையது கான் தன்னைச் சந்தித்தது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

    TTV Dinakaran | ’’2024-ல் யாருடன் கூட்டணி என்பதை சொல்வோம்’’

    சமீபத்தில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேனியில் நடைபெற்ற கட்சி செயல்வீரர்கள் கூட்டத்திற்குச் சென்றபோது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் திரண்டு தினகரனை வரவேற்றனர்.

    இது அரசியல் அரங்கில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர் சையது கான், அமமுகவில் இணையப் போகிறாரா அல்லது ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு வேண்டிச் சந்தித்தாரா என்றும் கேள்வி எழுந்தது.

    ஆனால், கடைசி வரை அதிமுக தொண்டன், ஓபிஎஸ் விசுவாசி எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார் சையது கான். இந்நிலையில், இந்தச் சந்திப்பு குறித்து டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

    எடப்பாடி ஆதிக்கம்

    எடப்பாடி ஆதிக்கம்

    அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு, தலைமை அலுவலகமும் அவர் கைக்குச் சென்றது. தொடர்ந்து, ஓபிஎஸ் தரப்பினரை கட்சியை விட்டு நீக்கி வ்ருகிறார் எடப்பாடி பழனிசாமி. அனைத்து பதவிகளுக்கும் தங்கள் ஆதரவாளர்களை நியமித்து வருகிறார். தொடர்ச்சியாக பலத்த பின்னடைவுகளை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து வந்த நிலையில், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் கைகோர்த்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அணி திரள்வார் என்று கூறப்பட்டு வருகிறது.

     பரபரப்பை ஏற்படுத்திய சந்திப்பு

    பரபரப்பை ஏற்படுத்திய சந்திப்பு

    இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தேனி மாவட்ட அமமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தேனி சென்ற அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனை அதிமுக தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளருமான சையது கான் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி மாவட்ட செயலாளர் சையது கான், அதிமுகவின் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகளுடன் சென்று டிடிவி.தினகரனை உற்சாகமாக வரவேற்றார்.

    டிடிவி தினகரன்

    டிடிவி தினகரன்

    இந்தச் சந்திப்பு அரசியல் அரங்கில் புயலைக் கிளப்பியது. ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு கேட்டு, டிடிவி தினகரனை சையது கான் சந்தித்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. இதுகுறித்து டிடிவி தினகரன் இன்று விளக்கம் அளித்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு, சென்னை கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு டிடிவி.தினகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

    2024ல் சட்டமன்றத் தேர்தல்

    2024ல் சட்டமன்றத் தேர்தல்

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி.தினகரன், "திமுக ஆட்சியில் ஊழல் பெருகி வருகிறது. என்ஐஏ சோதனை, போதைப் பொருட்கள் போன்றவை கடந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியை போன்று நீடித்து வருகிறது. இதை எல்லாம் பார்த்தால் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து 2024ல் சட்டமன்ற தேர்தல் வரும் என்றே தோன்றுகிறது. நாடாளுமன்றத் தேர்தலின்போது சட்டமன்றத் தேர்தலும் வரலாம் என யூகத்தின் அடிப்படையிலேயே தெரிவித்தேன்.

     யாருடன் கூட்டணி?

    யாருடன் கூட்டணி?

    சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டு அமமுக தலைமையில் ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மத்தியில் உள்ளது இரண்டு கட்சிகள் தான். பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டு கட்சிகளில் ஏதாவது ஒன்றுடன் கூட்டணி அமைத்துத்தான் ஆக வேண்டும். தேர்தல் நேரத்தில் அதைத் தெரிவிப்பேன்" எனத் தெரிவித்தார்.

    சந்திப்பு ஏன்?

    சந்திப்பு ஏன்?

    மேலும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கானை சந்தித்தது குறித்த கேள்விக்குப் பதிலளித்த டிடிவி.தினகரன், "தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர் உடனான சந்திப்பு நட்பு ரீதியான சந்திப்பு தான். அதில் அரசியல் இல்லை:" எனத் தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+