சிலிர்த்த வன்னியர்! விசிக திருமா எம்பியாவது ஏன் முக்கியம்? அடித்து பேசிய சிவசங்கர்! இதான் தமிழ்நாடு
சென்னை: சிதம்பரம் அரியலூர் தொகுதியில் அமைச்சர் சிவசங்கர் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக போட்டியிடும் எம்பி திருமாவளவனுக்கு ஆதரவாக நேற்று செய்த பிரச்சாரம் கவனம் பெற்றுள்ளது.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி அரியலூர் மாவட்டத்தில் இந்தியா கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது . அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் குன்னம் ராஜேந்திரன் முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

திமுக, விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பல்லாயிரக்கணக்கான பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் செயல்வீரர்கள் கூட்டத்தில் ஆற்றிய உரையில், இந்த தேர்தல் முடிவை மாற்ற பல விஷயங்களை செய்வார்கள். நாம் ஒரு போதும் தளர கூடாது. வாட்ஸ் ஆப் மூலம் வதந்தி பரப்புவார்கள். நேரடியாக வதந்தி பரப்புவார்கள். என்னவேண்டுமென்றாலும் செய்வார்கள். அதை நாம் முறியடிக்க வேண்டும். திருமா இங்கிருந்து வெற்றிபெற்று செல்வது அவசியம்.
பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டிற்காக குரல் கொடுத்தவர் அண்ணன் திருமா. எந்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக திருமாவை சித்தரிக்க பார்க்கிறார்களோ அந்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர் திருமா. யார் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உழைக்கிறேன் என்று சொல்கிறார்களோ அவர்கள் உண்மையில் பாஜக பக்கம் இருக்க மாட்டார்கள்.
இவரை சிலர் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரானவர் என்றெல்லாம் வதந்தி பரப்புகிறார்கள். ஆனால் அதே பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனை பாதுகாத்தது திருமாதான். அதை நாம் மறக்க கூடாது.
பாஜக இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கும் கட்சி. சமூக நீதியை ஒழிக்கும் கட்சி. விசிக இதற்காக குரல் கொடுத்த கட்சி. தமிழ்நாட்டு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு என்று இல்லை. மற்ற மாநில பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் குரல் கொடுத்தவர் திருமா. அவர் மக்களுக்காக காவல் அரணாக இருக்கிறார். ஏழை எளிய மக்களோடு ஒன்றி போய் அவர்களுடன் எப்போதும் இருக்கும் நபர் திருமா மட்டும்தான்.
ஒவ்வொரு நிமிடத்தையும் அவர் மக்களுக்காக அர்பணித்துக்கொண்டு இருக்கிறார். காலை 3 மணிக்கு கூட போன் போட்டால் எடுப்பார். அவருக்கு ஓய்வே கொடுப்பது இல்லை. அவருக்கு நிர்வாகிகள் கொஞ்சம் ரெஸ்ட் கொடுப்பது நன்றாக இருக்கும். பல பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர் திருமா. அவரை வெற்றிபெற செய்து மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அனுப்புவது சிதம்பரம் மக்களின் முடிவாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் சிவசங்கர் பாராட்டி உள்ளார்.
இதுதான் தமிழ்நாடு: இந்த கூட்டத்தில் வன்னியர்கள் பலரும் கலந்து கொண்டனர். அந்த பகுதி வன்னியர் - தலித் ஆதிக்கம் நிறைந்த பகுதி என்பதால் அதே பின்புலத்தை சேர்ந்த நிர்வாகிகள், பூத் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இவர்கள் அமைச்சர் சிவசங்கர் திருமாவை புகழ்ந்து பேசியதை பாராட்டி கைதட்டினர். அதிலும் அமைச்சர் சிவசங்கரும் வன்னியர் பின்புலத்தை சேர்ந்தவர். அவர் பட்டியலின பின்புலத்தை சேர்ந்த எம்பிக்கு பிரச்சாரம் செய்வது தமிழ்நாட்டில் ஜாதிய ஒற்றுமையை காட்டுகிறது என்றும் நெட்டிசன்கள் பாராட்டி உள்ளனர்.
முக்கியமாக ஒரு காலத்தில் வன்னியர் - தலித் மோதல் இருந்த அரியலூர் போன்ற மண்ணில்.. இப்படி ஒற்றுமைக்காக அமைச்சர் சிவசங்கர் பேசியது மக்களிடையே சிலிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications