காலை காட்டி சொன்ன "அந்த" வார்த்தை.. சீமான் அரசியலுக்கு என்னாச்சு? கொதித்து போன இஸ்லாமியர்கள்! திடுக்
சென்னை: நாம் தலைவர் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் குறித்து பேசி வருவது தமிழ்நாடு அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக சீமானின் பேச்சு இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் இடையே கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து உள்ளது.
நாம் தமிழர் சீமான் அரசியல் தொடக்கத்தில் ஈழ போராட்டம், தமிழர் விடுதலை, தனித்தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளை தீவிரமாக பேசி வந்தார். முக்கியமாக திராவிட கொள்கைக்கு எதிராக தீவிரமாக தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி வருகிறார்.

தமிழராக பிறந்தவர்களுக்கு மட்டுமே தமிழ்நாட்டில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில் அவர் தீவிரமாக இருக்கிறார். ஏற்கனவே வீட்டில் உருது பேசும் இஸ்லாமியர்களை தமிழர்களாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று சில பேட்டிகளில் நாம் தமிழர் சீமான் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக சீமான் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் குறித்து மிக கடுமையான விமர்சனங்களை வைக்க தொடங்கி உள்ளார்.
விமர்சனம்: சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய சீமான், மணிப்பூரில் இருந்து வந்து நமக்கு யாரும் ஓட்டு போடப்போவதும் இல்லை. அதை பற்றி நாம் ஏன் பேச வேண்டும். இங்கு இருக்கக்கூடிய கிறிஸ்துவர்களும் நமக்காக வாக்களிக்கப்போவது கிடையாது. நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம், இஸ்லாத்தையும் கிறிஸ்துவத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகளாகிவிட்டது, என்று கூறி இருந்தார்.
அதோடு நிற்காமல், சும்மா போய் தேவாலயத்தில் தேவரே வாரீர் வாரீர் என்று பாடிவிட்டு, கடைசியில் யார் யாருக்கோ நாட்டை கொடுத்து இருக்கிறார்கள். இந்த நாட்டில் நடந்திருக்கும் அநீதி அக்கிரமங்களுக்கு பெரிய பொறுப்பு, என்றும் கூறி சர்ச்சையை கிளப்பி இருந்தார். அவரின் இந்த பேச்சு பெரிய சர்ச்சையான நிலையில் சீமானின் பேச்சுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் விமர்சனங்களை வைத்தன. அதேபோல் சில இஸ்லாமிய அமைப்புகள் சீமானுக்கு எதிராக காவல் நிலையத்திலும் புகார் வைத்தன.
பதிலடி: இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்த சீமான், அநீதிக்கு எதிராக இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் என்றைக்காவது போராடியது உண்டா இஸ்லாமியர்களை அவமதித்ததாக கூறி நான் மன்னிப்பு கேட்டால் அவர்கள் எனக்கு ஓட்டு போடுவார்களா?; இஸ்லாமியர்களுக்காக எத்தனை போராட்டங்களில் நடிகர் ராஜ்கிரண் ஈடுபட்டுள்ளார்?"
கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் குறித்து நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டால், அவர்கள் எனக்கு ஓட்டு போட்டுவிடுவார்களா? என்று சீமான் கேட்டு மீண்டும் விமர்சனம் வைத்துள்ளார். இதோடு நிற்காமல் சீமான் இன்று மீண்டும் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார் சீமான்.
என்ன சொன்னார்? : நான் சொன்ன கருத்து எதற்கும் என்னால் மன்னிப்பு கேட்க முடியாது. வருத்தம் தெரிவிக்க முடியாது. மதத்தை விட, ஜாதியை விட, இனத்தைவிட மொழிதான் முக்கியம். மொழி அடையாளம்தான் முக்கியம் . இதில் சிறுபான்மையினர் என்று எங்கு வந்தது.
இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் தமிழர்கள். அதனால் அவர்கள் பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் கிடையாது. அவர்கள் பெரும்பான்மை தேசிய இனத்தை சேர்ந்தவர்கள். யார் சிறுபான்மையினர்.. என்று கூறிய சீமான் தனது காலை காட்டி "செருப்பை கழட்டி அடிப்பேன்" என்று கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் வைத்தார்.
கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களை சிறுபான்மையினர் என்று சொன்னால் செருப்பால் அடிப்பேன். வீறுகொண்டு இருக்கிறேன் நான். இஸ்லாமியர் இந்துவாக மதம் மாற முடியும். ஆனால் மொழி மாற முடியுமா? அதனால் மதத்தை விட மொழிதான் முக்கியம் என்று சீமான் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.
விவாதம்: சீமான் திடீரென இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் குறித்து பேசி வருவது தமிழ்நாடு அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக சீமானின் பேச்சு இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் இடையே கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து உள்ளது. இதற்கு முன் இஸ்லாமியர்கள் தமிழர்களே இல்லை என்று கூறிய சீமான், தற்போது அவர்கள் தமிழர்கள்தான், அவர்கள் பெரும்பான்மை.. சிறுபான்மை கிடையாது என்று விமர்சித்துள்ளார்.
பொதுவாக சீமான் அடிக்கடி செருப்பை தூக்கி காட்டி விமர்சனம் வைப்பது உண்டு. இதற்கு முன் சீமான் திமுகவை விமர்சனம் செய்யும் போது ஒரு முறை செருப்பை தூக்கி காட்டி கடுமையான விமர்சனங்களை வைத்தார். அதேபோல்தான் தற்போது இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் பற்றி பேசுகையில் அவர் செருப்பை உதாரணம் காட்டி பேசியது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. சீமான் அரசியல் ரீதியாக எடுத்திருக்கும் இந்த நிலைப்பாடு கடுமையான விவாதங்களை இணையத்தில் ஏற்படுத்தி உள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications