ஃபிட்டாக இருப்பாரே.. திடீர்ன்னு தாடி வச்சு.. உடல் எடை போட்டு.. சீமான் மாறியது ஏன்? இதுதான் காரணமாம்
சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் லுக் திடீரென மாறியது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான காரணங்கள் வெளியாகி உள்ளன.
நேற்று தூத்துக்குடியில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை மூடுவோம்… தோற்றாலும், ஜெயிச்சாலும் தனித்து தான் போட்டி போடுவோம்.நாம் தமிழர் என்பது கட்சியின் பெயரல்ல; நாம் பிறந்த பெருமைமிக்க இனத்தின் அடையாளம்

ஒரு கட்சியை ஆரம்பித்து நாம் இணையவில்லை; நாமெல்லாம் இணைந்து நம் இனத்தின் விடுதலைக்காக ஒரு கட்சியை உருவாக்கியிருக்கிறோம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழர்கள் இல்லை என்ற வருத்தம் வேண்டாம். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் 11 பேரும் தமிழர்கள்தான். அந்த மாற்றத்தை நாங்கள் கொண்டு வருவோம்.
சங்கி என்பது இழி சொல் அல்ல ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருத்தப்பட வேண்டியதில்லை. அது தவறான வார்த்தை கிடையாது. காவேரி நதிநீர், கச்சத்தீவு, மீத்தேன் உட்பட எதை பற்றியும் பாஜகவிற்கு கவலை இல்லை. தமிழகத்திற்கு 10 ஆண்டுகளில் ஏதாவது ஒரு நன்மை நடந்துள்ளது என்பதை சொல்லட்டுமே? இந்திய பொருளாதாரம் சீரழிந்துள்ளது. திமுக பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறது, என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது உரையில் குறிப்பிட்டார்.
சீமான் லுக் மாற்றம்: இந்த பேச்சுக்கு இடையே பலரும் சீமானின் லுக் மாற்றத்தை கவனித்தனர். அதன்படி அவரின் லுக்கில் பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது. பொதுவாக சீமான் பிட்டாக இருப்பார். மொத்தமாக ஷேவ் செய்து இருப்பார்.
அதேபோல் முடி குறைவாக வைத்து இருப்பார். ஆனால் இப்போது திடீரென தாடி வச்சு.. உடல் எடை போட்டு சீமான் தோற்றமே மாறி உள்ளது. அவரின் லுக் மாறி உள்ளது.
அவரின் இந்த உருவ மாற்றத்திற்கு என்ன காரணம் என்று நெட்டிசன்கள் பலரும் கேட்டு வருகின்றனர். அவருக்கு உடல் எடை பிரச்சனை எதுவும் உள்ளதா? அவர் ஏன் எடை அதிகமாகி உள்ளார் என்று பலரும் இணையத்தில் கேட்டு வருகின்றனர்.
சீமான் லுக் காரணம்: சீமான் தற்போது விக்னேஷ் சிவன் படம் ஒன்றில் நடித்துக்கொண்டு இருக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் அந்த படத்தில் பல பிரபலங்கள் நடித்துக்கொண்டு இருக்கின்றனர். உதாரணமாக சமூக வலைதள பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் நடிக்கின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதே படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படத்திற்காக சீமான் தனது லுக்கை மாற்றி உள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்காக அவர் உடல் எடையை ஏற்றி உள்ளார். அதேபோல் தாடி வளர்த்து உள்ளார் என்று கூறப்படுகிறது.
அதோடு சீமான் தாடி வைத்தும் உள்ளார் என்று கூறப்படுகிறது. பொதுவாக சீமான் சினிமாவில் நடித்து பல நாட்கள் ஆகிவிட்டது, அவர் சினிமாவில் படம் இயக்கியும் பல வருடங்கள் ஆகிவிட்டது. இந்த நிலையில்தான் நீண்ட காலங்களுக்கு பின் கோலிவுட்டிற்கு சீமான் ரிட்டர்ன் ஆகி உள்ளார். இதற்காக அவர் தனது லுக்கை மாற்றி உள்ளார் என்று கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications