நோ.. நோ.. அப்படியெல்லாம் இல்லை.. "பார்டர்" பிரச்சனையை டக்குனு தீர்த்த நிர்மலா.. ஒரே பரபரப்புதான்..!
: நிர்மலா சீதாராமன் அணிந்திருந்த சேலை பார்டர் விவாதத்தை ஏற்படுத்தி விட்டது
சென்னை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்த ஒரு சுவாரஸ்யமான செய்தி இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது..!
மறைந்த இந்திரா காந்திக்கு பிறகு, முழுநேர பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்ற பெண் என்ற பெருமையை பெற்றவர் நிர்மலா சீதாராமன்... அப்போதிருந்தே இவருக்கு தேசிய அரசியலில் முக்கியத்துவம் கூடிவிட்டது.
எங்கே போய் பணியாற்றினாலும், நிர்மலா சீதாராமனை தமிழகத்து பெண்ணாகவே நம் மக்கள் பார்த்து வருகிறார்கள்... அதனால்தான் நிர்மலாவின் செயல்பாடுகள் ஒவ்வொருமுறையும் மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

நிர்மலா சீதாராமன்
குறிப்பாக, பட்ஜெட் தாக்கலின்போது, நிர்மலா அணியும் சேலையை தவறாமல் மக்கள் கவனிப்பார்கள்.. புடவை மட்டுமில்லை, அவர் கையில் உள்ள சூட்கேஸ் கலரையும் சேர்த்து உற்று நோக்குவார்கள்.. பட்ஜெட் தாக்கலுக்கு நிர்மலா உள்ளே என்ட்ரி தரும்போதே, அவர் இன்ன கலர் சேலையில் வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்திகளும் முன்னமேயே தாங்கி வந்துவிடும்.

புடவை
எளிமையான புடவையைதான் அதாவது, சில்க் மற்றும் காட்டனைதான் விரும்பி அணிவார்.. அதுவும் ஆஃப் பிளீட்ஸ் வைத்து அணிவதுதான் அவருடைய தனித்துவம்... இப்போதும் அதுபோலவே நிதியமைச்சர் நிர்மலா கட்டிவந்த ஒரு சேலை பிரபலமாகி உள்ளது.. சமீபத்தில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளில் இருந்து தொழில்துறை மீள்வதற்காக, பல ஊக்க சலுகைகளை நிர்மலா அறிவித்தார்..

பேட்டி
அப்போது செய்தியாளர்களையும் சந்தித்து இது பற்றி பேசினார்.. அந்த சமயத்தில் அவர் அணிந்திருந்த சேலை குறிப்பாக, அதன் பார்டர் பரபரப்பான பேச்சாகிவிட்டது.. அப்படியே அதிமுகவின் கொடி கலரில் அந்த பார்டர் இருந்தது. முன்பெல்லாம், அதாவது ஜெயலலிதா கொள்கை பரப்பு செயலாளராக இருந்தபோது, இந்த பார்டரில்தான் புடவை அணிவார்..

அதிமுக
அதைபோல, நிர்மலாவின் சேலை பார்டரில் அதிமுக கொடி இருப்பதை பார்த்து பலரும் ஆச்சர்யப்பட்டனர்... அதிமுகவுடன் உள்ளாட்சி தேர்தலில் பாஜக கூட்டணியில் இருக்கிறதா? இல்லையா என்றே தெரியவில்லை.. அதிமுக மாஜிக்களின் மீதான ஊழல் புகார்களை ஸ்டாலின் தூசி தட்டி எடுப்பதால், கூட்டணியில் உள்ள பாஜகவிக்கு இது நெருடலை தர நேரிடும் என்றும், அதனால், கூட்டணியை விட்டு விலகினாலும் ஆச்சரியமில்லை என்றும் ஒரு பேச்சு உள்ளது.

விளக்கம்
இப்படி இருக்கும் நிலையில், அதிமுகவுடன் கூட்டணியை மறைமுகமாக நிர்மலா உறுதி செய்கிறாரோ அல்லது இது இயல்பாக நடந்த ஒன்றா என்பது குறித்து ஒரு விவாதமே சோஷியல் மீடியாவில் நடந்துள்ளதாக தெரிகிறது.. ஆனால், இந்த விஷயம், நிர்மலாவின் காதுக்கு எட்டி உள்ளது.. டெல்லியில் வெயில் அதிகம்.. அதனால், வெயிலுக்கு காட்டன் புடவை தான் சரியாக இருக்கும்... யதார்த்தமாக இந்த கலர் பார்டர், புடவையில் வந்துவிட்டது என்று விளக்கமும் தந்தாராம்.. ஒருவழியாக "பார்டர்" பிரச்சனையும் தீர்ந்தது.
-
நிதிஷ் குமாரின் நிலை எடப்பாடிக்கும் வருமா.. ஸ்டாலின் கவலைப்பட தேவையில்லை.. நயினார் நாகேந்திரன் பதில் -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
காங்கிரஸை விட கூடுதல் தொகுதிகள் வேண்டும்.. அதிமுகவிடம் மல்லுக்கட்டும் பாஜக.. எவ்வளவு சீட் தெரியுமா? -
மாஸ் வைத்து ஜெயிக்க முடியாதுங்க.. அண்ணாமலையை சீண்டிய குஷ்பு.. பாஜகவில் வெடித்த மோதல் -
ஜெயலலிதா இருந்தா இப்படி நடக்குமா? மொத்தமாக கண்ட்ரோலை எடுத்த பாஜக..லிஸ்டோடு டெல்லிக்கு ஓடிய எடப்பாடி! -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின்












Click it and Unblock the Notifications