யாருக்கும் குரல் கொடுக்காத விஜய்.. இப்போ அவருக்கு சப்போர்ட் பண்ண யாரும் வரல! கப்சிப் ஆன கோலிவுட்!
சென்னை: ஜனநாயகன் படத்துக்கு பெரும் சிக்கல் முளைத்திருக்கிறது. சென்சார் சான்றிதழ் இன்னும் கிடைக்காததால், படத்தின் வெளியீடு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிபிராஜ், அஜய் ஞானமுத்து, ரத்னகுமார் உள்ளிட்ட சிலரைத் தவிர யாரும் திரையுலகில் குரல் கொடுக்கவில்லை. இதற்கிடையே விஸ்வரூபம், பாபா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பிரச்சினை வந்த போது விஜய் பேசாததால், தற்போது அவருக்கு யாரும் குரல் கொடுக்கவில்லை என்கின்றனர் சினிமா உலகினர்.
இந்தப் பொங்கலுக்கு வசூலை அள்ளிவிடலாம் என நினைத்திருந்த ஜனநாயகன் பட குழுவுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அரசியலில் குதித்திருக்கும் விஜய் தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்த நிலையில் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டது.
கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க எச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்துக்கு அனிருத் திசை அமைத்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ். மமிதா பைஜூ, பாபி தியோல், நரேன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்துள்ளது.

ஜனநாயகன்
படத்தின் பாடல்களும் டிரைலரும் இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், படம் ஒன்பதாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் படத்தின் சென்சார் சான்றிதழ் காரணமாக பட வெளியீடு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒன்பதாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பல தியேட்டர்களில் புக்கிங் செய்யப்பட்ட நிலையில் தற்போது படத்தின் வெளியீடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்சார் பிரச்சனை
இந்த நிலையில் விஜய்க்கு பிரச்சனை வந்துள்ளதால் அவருக்கு யாருமே குரல் கொடுக்கவில்லை என சமூக வலைதளங்களில் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர் அவரது ரசிகர்கள். விஜயின் இந்த படத்துக்கு மட்டுமல்ல பல படங்கள் பிரச்சனைகளோடு தான் வெளிவந்தது. தலைவா, கத்தி, சர்க்கார், காவலன் என அனைத்து படங்களும் கடைசி நேரம் வரை ஏதாவது ஒரு சிக்கலோடு தான் வெளிவந்தது. அந்த பட்டியலில் விஜயின் கடைசி படமான ஜனநாயகனும் இணைந்திருக்கும் நிலையில் அவரை வழியனுப்ப கூட திரையுலகினர் முன்வரவில்லை என கொந்தளிக்கின்றனர்.
கோலிவுட் மவுனம்
அதே நேரத்தில் விஜய்க்கு எதிராகவும் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டு வருகிறது. அது இதுவரை விஜய் யாருக்காகவும் குரல் கொடுத்ததில்லை என்பதுதான். தமிழ் திரை உலகில் மூத்த கலைஞர்களான ரஜினிகாந்த் கமலஹாசன் உள்ளிட்ட பலருக்கு பிரச்சனை வந்த போது விஜய் ஒரு அறிக்கை கூட விட்டதில்லை. குறிப்பாக விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்ததோடு, பட வெளியீட்டுக்கும் தடை விதித்தது. இதனால் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளானார் கமலஹாசன்.
விஜய்க்கு ஆதரவு இல்லை
இந்த நாட்டை விட்டு செல்வதை தவிர வேறு வழியில்லை எனவும் பேசி இருந்தார். ஆனால் அப்போது ஒரு சக கலைஞர் என்ற அடிப்படையில் விஜய் குரல் கொடுக்கவில்லை. மேலும் பாபா, ஜக்குபாய் என ரஜினிகாந்தின் பல படங்களுக்கு பாமகவினர் நெருக்கடி கொடுத்ததோடு போராட்டத்திலும் குதித்தனர். அப்போதும் விஜய் பேசவில்லை. ஏன் நண்பர் என கூறிக்கொள்ளும் அஜித்துக்கு திமுக மூலம் நெருக்கடி கொடுக்கப்பட்ட நிலையில் அந்த விவகாரத்திலும் விஜய் பேசவில்லை.
பாபா படம் சர்ச்சை
இப்படி பல படங்கள், நாயகர்கள் சிக்கலில் இருந்த போது விஜய் பேசவில்லை. அதனால் தற்போது அவர் நெருக்கடியில் இருக்கும் நிலையில் திரையுலகின் முன்னணி நடிகர்கள் யாரும் வாய் திறப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. அதே நேரத்தில் நடிகர் சத்யராஜ் மகனான சிபிராஜ், பிரபல இயக்குனர் ரத்தினகுமார், அஜய் ஞானமுத்து உள்ளிட்ட ஒரு சிலர் மட்டும் விஜய்க்கு ஆதரவாக பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications