தூத்துக்குடி மாணவி மாயமான முதல் நாளே போலீஸ் வழக்கு பதிவு செய்யாதது ஏன்? - ஐகோர்ட் எழுப்பிய கேள்வி
மதுரை: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மாணவி மாயமான முதல் நாளே போலீஸ் வழக்கு பதிவு செய்யாதது ஏன்? என உயர்நிதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மாணவி கொலை வழக்கில் சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடர்ந்தது அதிமுக.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி, கடந்த 10 ஆம் தேதி மாலை சுமார் 6 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக, வீட்டின் அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றார். நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் மதியம் சுமார் 2 மணியளவில் அந்த மாணவி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மதன் தலைமையில், குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் சம்பவம் நடந்த இடம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் மாணவியுடன் படித்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட சந்தேகப்படும் வகையிலான 20-க்கும் மேற்பட்ட நபர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவர்களிடமிருந்து பல்வேறு கோணங்களில் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவி, மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்ட வழக்கில் 6 நாட்கள் ஆகியும் கொலையாளிகள் குறித்த துப்பு துலங்கவில்லை.
இந்த நிலையில், இந்த வழக்கினை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "மாணவிக்கு நன்கு தெரிந்த நபரே இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். மாணவியின் வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவிலேயே அவரின் உடல் மீட்கப்பட்டது. தற்போது சந்தேகப்படும் 5 நபர்களின் டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வக பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. செல்போன் டவர்கள் செல்போன் அழைப்புகளை பரிசோதனை செய்து கண்காணித்து வருகிறோம். அருகிலுள்ள சி.சி.டி.வி காட்சிகளைக் கொண்டு சந்தேகத்துக்கிடமான நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றனர்.
அதற்கு நீதிபதிகள், "மாணவி காணவில்லை என்பது முக்கியமான புகார். அதில் காவல்துறையினர் அலட்சியத்துடன் செயல்பட்டிருக்கக் கூடாது. காவல்துறையினர் அப்போதே புகாரை பெற்று ஜீரோ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருந்தால் இந்த விவகாரம் இவ்வளவு தூரம் போயிருக்காது. மாணவி மாயமான முதல் நாளே போலீஸ் வழக்கு பதிவு செய்யாதது ஏன்?
நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாணவியின் பெற்றோர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். வாக்குமூலத்தை வீடியோ, ஆடியோவாக பதிவுசெய்ய வேண்டும். இந்த வழக்கினை காவல்துறையினர் அறிவியல் பூர்வமாக விசாரிக்க வேண்டும்" எனக் கூறி, இந்தக் கொலை வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
போலீஸே உடலை அடக்கம் பண்ணிடும்! ஆகாஷ் வழக்கில் நீதிமன்றம் எச்சரிக்கை! விடாப்பிடியாய் பெற்றோர்! பரபர -
100 நாள் ஆச்சு.. இன்று மாலைக்குள் ஆகாஷ் உடலை வாங்குங்க.. பெற்றோருக்கு கெடு விதித்த ஐகோர்ட்! -
விவாகரத்து வழக்குகளில் பெயர்களை வெளியிடக் கூடாது - உயர்நீதிமன்ற கிளை போட்ட உத்தரவு! - -
3 மாதங்களாக மார்ச்சுவரியில் ஆகாஷ் உடல்..நீதிமன்ற உத்தரவால் 102வது நாளில் தகனம்! உறவினர்கள் அஞ்சலி -
மூக்கில் ரத்தம், டிரஸ் இல்ல.. ஹனிமூன் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! என்ன நடந்தது -
ஒரே நாளில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. 17 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடியாக மாற்றம் - அரசு உத்தரவு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications