இதென்ன.. பாஜக பிரமுகர்களுடன் நாதக காளியம்மாள்.. தீயாகப் பரவும் படங்கள்.. எங்கே நடந்த மீட்டிங்?
நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் பாஜகவின் அலிஷா அப்துல்லாவை சந்தித்தது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், பாஜக நிர்வாகி அலீஷா அப்துல்லாவுடன் இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
நாம் தமிழர் கட்சியை பாஜகவின் பி டீம் என்று திமுக உள்ளிட்ட கட்சிகளும், அதிமுகவின் வாக்குகளைப் பிரிப்பதால், திமுகவின் பி டீம் என்று பாஜகவினரும் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜகவின் பெண் பிரமுகர்களுடன் நாதக நிர்வாகி காளியம்மாள் இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவின.

காளியம்மாள்
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த காளியம்மாள், நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளராகவும் விளங்குகிறார். 2019 மக்களவைத் தேர்தலில் காளியம்மாள் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வட சென்னை தொகுதியில், கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும், 60 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றார்.

நாதகவின் முக்கிய முகம்
பின்னர் 2021 சட்டமன்றத் தேர்தலில் பூம்புகார் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். நாம் தமிழர் கட்சியில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருக்கும் காளியம்மாள், நாதகவின் மகளிர் நிர்வாகிகளில் முக்கியமான முகம் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்திலும் நாதக வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் காளியம்மாள்.

பரவிய புகைப்படம்
தேர்தல் பிரச்சாரக் களத்தில் திமுக, அதிமுக, பாஜக என ஒரு கட்சியையும் விடாமல் ரவுண்டு கட்டி விளாசும் காளியம்மாள், பாஜகவின் பெண் நிர்வாகிகளுடன் இணைந்தும், அவர்களுடன் சிரித்தபடி பேசிக்கொண்டிருப்பது போலவும் இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதனைப் பகிர்ந்து திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், அந்தப் படங்கள் ஒரு விருது விழாவில் எடுக்கப்பட்ட படங்கள் எனத் தெரியவந்துள்ளது.

விருது விழா
சென்னையில் உள்ள அமிட்டி குளோபல் பிசினஸ் ஸ்கூல் சார்பாக பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் பெண் ஆளுமைகளுக்கு 'வொண்டர் வுமன்' என்ற பெயரில் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் பாஜகவைச் சேர்ந்த அலிஷா அப்துல்லா, நாதகவைச் சேர்ந்த காளியம்மாள் உள்ளிட்ட பெண்கள் விருது பெற்றுள்ளனர். இதற்கான விருது வழங்கும் விழாவில் இருவரும் பங்கேற்ற புகைப்படங்களே தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications