சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நெருப்பு இல்லாம புகையாதே! ஸ்டாலினையே பார்த்த ரவீந்திரநாத்.. ஓ இதான் காரணமா? விசாரித்த இபிஎஸ் கேம்ப்!

Google Oneindia Tamil News

சென்னை: சமீபத்தில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த திடீர் சந்திப்பு அதிமுக வட்டாரத்தில் புயலை கிளப்பி இருக்கிறதாம்.

முதல்வர் ஸ்டாலினை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வமின் மகனும், அதிமுக எம்பி.யுமான ஓ.பி.ரவீந்திரநாத், தலைமைச் செயலகத்தில் இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்தார். இந்த சந்திப்பில் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யுமாறு அவர் கோரிக்கை வைத்தார்.

பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர் முதல்வரிடம் அளித்தார். ஆனால் இந்த சந்திப்பிற்கு பின் இந்த கோரிக்கை மட்டும் காரணம் அல்ல.. வேறு காரணங்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

3 பிளான் + 2 குறி.. ஸ்டாலின் கணக்கு நொறுங்குகிறதா.. திமுகவை டேமேஜ் செய்ய போகும் எடப்பாடி.. பாஜக குஷி3 பிளான் + 2 குறி.. ஸ்டாலின் கணக்கு நொறுங்குகிறதா.. திமுகவை டேமேஜ் செய்ய போகும் எடப்பாடி.. பாஜக குஷி

என்ன காரணம்?

என்ன காரணம்?

இப்படி திடீரென முதல்வர் ஸ்டாலினை பார்த்ததற்கும் அதன்பின் அவரை பாராட்டியதற்கும் பின் முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் அவர் பல விஷயங்களை பேசி இருக்கிறாராம். முக்கியமாக நில அபகரிப்பு வழக்கு உள்ளிட்ட ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிரான பல்வேறு வழக்குகள் குறித்தும், அதில் "கரிசனைகள்" காட்டுவது குறித்தும் இவர்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இது போக தொகுதி தொடர்பாக சில முக்கியமான கோரிக்கைகளை அவர் வைத்து இருக்கிறாராம்.

Recommended Video

    CM Stalin-ஐ சந்தித்த AIADMK MP Ravindhranath Kumar
    பிரதமர் மோடி சந்திப்பு

    பிரதமர் மோடி சந்திப்பு

    அதன்படி மே 26ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். இந்த பயணத்தில் மதுரை - தேனி அகல ரயில்பாதையை தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிலையில்தான், பிரதமரை இந்த பயணத்தில் சந்திக்க ஓபி ரவீந்திரநாத் முடிவு செய்துள்ளாராம். பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலை தேனி அல்லது போடி வரை நீட்டிக்க வேண்டும் என்று ஓபிஆர் கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த நிலையில்தான் மதுரை தேனி அகலரயில்பாதை தொடக்க விழாவில் பிரதமரை ஓபிஆர் சந்திக்க முயன்று வருகிறாராம்.

    மோடி தேனி

    மோடி தேனி

    அமைச்சர்கள், முதல்வர்கள் இருக்கும் அரசு மேடையில் பிரதமருடன் ஒன்றாக தோன்ற அவர் விரும்புவதாகவும், இது பற்றி முதல்வர் ஸ்டாலினிடம் இவர் பேசியதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக ஓபிஎஸ் மனைவி இறந்த போது முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று தேற்றினார், அப்போது ஓபிஆர் உடன் இருந்தார். அதன்பின் முதல்வர் ஸ்டாலினை ஓ பி ரவீந்திரநாத் சந்திக்க முடியவில்லை. இந்த நிலையில் இப்போதுதான் சந்திக்க வாய்ப்பு கிடைத்ததால் அவர்கள் இருவரும் நெகிழ்ச்சியாக சில நிமிடங்கள் பேசியதாக கூறப்படுகிறது.

    சாப்ட் கார்னர்

    சாப்ட் கார்னர்

    முதல்வர் ஸ்டாலின் மட்டுமின்றி திமுகவினர் பலர் ஓபிஎஸ்ஸுடன் சாப்ட் கார்னர் கொண்டு இருக்கிறார்கள். சட்டசபையில் கூட இவர்கள் நட்பாக பேசிக்கொள்கிறார்கள். இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினை ரவீந்திரநாத் சந்தித்துள்ளார். முதல்வர் சந்திக்கும்படி ரவீந்திர நாத்திற்கு சொன்னதே ஓபிஎஸ்தான் என்று கூறுகிறார்கள். சில வழக்குகள் மற்றும் கோரிக்கைகள் காரணமாக இந்த சந்திப்பு நடந்தது என்று கூறுகிறார்கள்.

    முரசொலி போட்டோ

    முரசொலி போட்டோ

    இந்த சந்திப்பை ஆளும் திமுக தரப்பும் விரும்பியதாக கூறப்படுகிறது. அதனால்தான் இந்த புகைப்படத்தை முரசொலி பத்திரிகையும் மறுநாளே பெரிதாக பகிர்ந்து சந்திப்பு குறித்து விளக்கி இருந்ததாம். ரவீந்திரநாத்தும் முதல்வர் ஸ்டாலின் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக ஆட்சி குறித்து பாராட்டி இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க ஓபிஆர் இப்படி திடீரென முதல்வரை சந்தித்ததை பற்றி எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரமாக விசாரித்து வருகிறதாம்.

    எடப்பாடி கேம்ப்

    எடப்பாடி கேம்ப்

    ஒரு அதிமுக எம்பி இப்படி திடீரென முதல்வரை சந்திப்பது எல்லாம் சாதாரண விஷயம் அல்ல. இதற்கு பின் கண்டிப்பாக வேறு காரணங்கள் இருக்கும். நெருப்பு இல்லாமல் புகையாது. எதோ ஒன்று எரிய போகிறது.. அதற்குத்தான் இப்போது புகை வருகிறது. இந்த சந்திப்பில் என்ன பேசிக்கொண்டார்கள் என்று தெரிய வேண்டும் என்று எடப்பாடி கேம்ப் விசாரணையில் குதித்து இருக்கிறதாம்.

    English summary
    Why AIADMK MP O P Raveendranath meets CM Stalin? EPS is in the hunt for answers சமீபத்தில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த திடீர் சந்திப்பு அதிமுக வட்டாரத்தை புயலை கிளப்பி இருக்கிறதாம்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X