‘நூல்’ விட்ட மாஜி.. ஆபிஸுக்கே போன செந்தில் முருகன்.. அதிர்ந்து போன ஓபிஎஸ்.. “பரபர” பின்னணி இதானாம்!
பொறுப்பிலேயே இல்லாத தனக்கு தலைமைக் கழக பதவி கொடுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு ‘கல்தா’ கொடுத்துள்ளார் செந்தில் முருகன்.
சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனது அணி வேட்பாளராக களமிறங்கி பின்னர் போட்டியில் இருந்து விலகிய செந்தில் முருகனை ஓ.பன்னீர்செல்வம் கட்சியை விட்டு நீக்கியதற்கான பின்னணி காரணம் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்திய நிலையில், சென்னைக்கு வந்த செந்தில் முருகன், அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். இதையறிந்தே உடனடியாக அவரை கட்சியை விட்டு நீக்கியுள்ளார் ஓபிஎஸ்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு பின்னடைவாக அமைந்த நிலையில், செங்கோட்டையன் மூலம் செந்தில் முருகனுக்கு நூல் விட்டுப் பார்த்தது ஈபிஎஸ் தரப்பு.
செந்தில் முருகனும் ஈபிஎஸ் அணிக்கு 'பச்சைக்கொடி' காட்டிய நிலையில், தலைமைக் கழக பதவி கொடுத்த சில வாரங்களிலேயே அவரை கட்சியை விட்டே நீக்கியுள்ளார் ஓபிஎஸ்.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அதிமுகவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவருமே தங்கள் அணி சார்பில் வேட்பாளரை களமிறக்குவதாக அறிவித்திருந்தனர். எடப்பாடி பழனிசாமி அணி வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு நிறுத்தப்பட்டார். ஓபிஎஸ் அணி சார்பாக செந்தில் முருகன் என்பவர் நிறுத்தப்பட்டார். அதிமுகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத செந்தில் முருகன் ஓபிஎஸ் அணி வேட்பாளராக நிறுத்தப்பட்டது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

செந்தில் முருகன்
42 வயதான செந்தில் முருகன், எம்பிஏ படித்து, லண்டனில் நிதி ஆலோசகராக பணியாற்றி வந்தார். கொரோனோ தொற்று பரவல் உச்சத்தில் இருந்தபோது, இந்தியாவிற்குத் திரும்பிய செந்தில் முருகன் தனது வீட்டிலிருந்தே பணியாற்றி வருகிறார். அதிமுகவில் கட்சிப் பணியாற்றிய செந்தில் முருகன், ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், ஈரோடு கிழக்கில் ஈபிஎஸ் அணிக்கு குடைச்சல் கொடுக்க பல வகைகளிலும் வலுவான வேட்பாளரைத் தேடி வந்த ஓ.பன்னீர்செல்வம் செந்தில் முருகனை களத்தில் இறக்கினார்.

ஓபிஎஸ் குறி
செந்தில் முருகன் கட்சியில் முக்கிய பொறுப்பு எதிலும் இல்லாதபோதும், அவரை வேட்பாளராக நிறுத்துவது சாதி ரீதியாக வாக்குகளைப் பெற்றுத் தரும் எனக் கணக்குப் போட்டார் ஓபிஎஸ். ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருப்பவர்கள் முதலியார்கள். முதலியார் சமூகத்தைச் சேர்ந்த செந்தில்முருகனை களத்தில் இறக்கினால், அதிமுக வாக்குகளைப் பிரிக்கலாம் எனக் கணக்குப் போட்டு, அவரைக் களமிறக்கினார் ஓபிஎஸ். இதற்கு அவரது அணியிலேயே எதிர்ப்புகள் எழுந்தன.

அணிக்குள் அப்செட்
ஈரோடு கிழக்கு மாவட்ட ஓபிஎஸ் அணியின் செயலாளராக இருந்த முருகானந்தம், மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் சிவமுருகன், வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம், கருங்கல்பாளையம் பகுதி செயலாளர் அர்த்தநாரீஸ்வரன் உள்ளிட்ட 106 நிர்வாகிகள் கூண்டோடு ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அவரது அணி அதிமுகவில் இணைந்தனர். கட்சிக்கு தொடர்பு இல்லாதவரை வேட்பாளராக அறிவித்ததால் ஓபிஎஸ் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

தலைமை செயலாளர்
இதற்கிடையே, உச்ச நீதிமன்றம் பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை அறிவிக்க உத்தரவிட்டதால், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கே எங்கள் ஆதரவு என ஓபிஎஸ் அறிவித்தார். ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பு மனுவை தாக்கல் செய்த செந்தில் முருகன் போட்டியில் இருந்து விலகினார். செந்தில் முருகன் வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கு முன்பே, பரிசீலனையின்போதே அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பின்னர் விலகிய செந்தில் முருகனை பின்னர் அதிமுக தலைமைக் கழகச் செயலாளராக நியமித்தார் ஓ.பன்னீர்செல்வம்.

கட்சியில் இருந்து நீக்கம்
இந்நிலையில், பதவி கொடுத்த சில நாட்களிலேயே இன்று செந்தில் முருகனை கட்சியை விட்டே நீக்கி உத்தரவிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக அமைப்புச் செயலாளர், செந்தில் முருகன் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார் என ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டார்.

பின்னணி என்ன?
செந்தில் முருகனை ஓபிஎஸ் நீக்கியதற்கு காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் மத்தியில் ஓபிஎஸ் மீது கடுமையான நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது. இனி ஓபிஎஸ் கையில் கட்சியின் பிடி இல்லை என்பதால் பலரும் ஈபிஎஸ் அணிக்குச் செல்ல திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் தான், எடப்பாடி பழனிசாமி தரப்பு, செந்தில் முருகனுக்கு நூல் விட்டு, அவரை தங்கள் பக்கம் கொண்டு வர முயன்றுள்ளது. செந்தில் முருகனுக்கு நல்ல பதவியைத் தருவதாகவும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

தட்டித் தூக்கிய ஈபிஎஸ் - அதிர்ந்த ஓபிஎஸ்
பல வகைகளில் கணக்குப் போட்ட செந்தில் முருகன், எடப்பாடி பழனிசாமி அணியில் இணைய தயாராகியுள்ளார். ஆனாலும் ஓபிஎஸ் அணியினர் அவருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். இந்நிலையில், இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெற்ற நிலையில், அங்கு செந்தில் முருகன் செல்லும் தகவல் ஓபிஎஸ் கவனத்துக்கு வந்துள்ளது. இதையடுத்தே செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி ஓபிஎஸ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். ஓபிஎஸ், கட்சியை விட்டு நீக்கிய நிலையில், அடுத்த சில நிமிடங்களிலேயே எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கட்சியில் இணைந்துள்ளார் செந்தில் முருகன்.
-
தவெக பக்கம் ஓடும் அதிமுக நிர்வாகிகள்.. 6 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க எடப்பாடி பழனிசாமி முடிவு? -
அதிமுகவின் 4ஆம் தலைமுறையாகும் மிதுன்? ஓபிஎஸ் மேல தண்ணி பாட்டிலை வீசி.. அப்பவே ப்ளான் போட்ட எடப்பாடி? -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
திரிசங்கு சொர்க்கத்தில் சி.விஜயபாஸ்கர்! கடைசி நேரத்தில் காலைவாரிய திமுக! போக்கு காட்டும் பனையூர்? -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்?












Click it and Unblock the Notifications