"அவர்" விரும்பினார்.. என் தந்தை சந்தித்தார்.. "மங்களகரமான சந்திப்பு" குறித்து ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தனது தந்தை ஓ பன்னீர் செல்லம் எதற்காக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்தித்தார் என்பது குறித்து தகவல்களை மகன் ஜெயபிரதீப் வெளியிட்டுள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பான பிரச்சினை எழுந்த போது எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் மீது கூறிய முக்கிய குற்றச்சாட்டு அவர் திமுகவின் அபிமானி என்பதுதான். கடந்த 2017ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திய போது ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அது போல் சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வசனங்களை தன் தலைமாட்டில் வைத்து தனது தந்தை மனப்பாடம் செய்ய வைத்தார் என ஓபிஎஸ் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டியிருந்தார்.
சில விஷயங்களில் தமிழக அரசை ஓபிஎஸ் பாராட்டியிருந்தார். ஆனால் அவ்வப்போது விமர்சனமும் செய்து வந்தார். இந்த நிலையில் ஓபிஎஸ் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார். அவர் திமுகவின் பி டீம் என்றும் அதிமுகவை ஒழிக்க திமுகவிடம் விலை போய்விட்டார் என்றும் குற்றச்சாட்டுகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் கடந்த 6ஆம் தேதி நடந்த சென்னை- மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியை காண ஓபிஎஸ் சென்றிருந்தார். ஆனால் இந்த போட்டியைவிட அங்கு பரபரப்பாக பேசப்பட்ட விஷயம், ஓபிஎஸ்ஸும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸும் சந்தித்து பேசியதுதான். இந்த புகைப்படத்தை எடுத்து ட்விட்டரில் போட்ட ஜெயக்குமார், பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என ஓபிஎஸ்ஸை விமர்சித்திருந்தார்.
இந்த சந்திப்பு ஏன் நடந்தது என்பது குறித்து ஓபிஎஸ் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. இந்த நிலையில் ஓபிஎஸ்ஸின் இளைய மகன் ஜெயபிரதீப் தனது ட்விட்டரில் இந்த சந்திப்புக்கான காரணத்தை விளக்கியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில் கலியுகத்தில் எதார்த்தமாக உண்மையாக நடந்து கொள்பவர்கள் மற்றும் நியாயமான கருத்துக்களைத் தெரிவிப்பவர்களை ஒரு சிலர் ஏற்றுக் கொள்ள கூடிய மனப்பக்குவம் இல்லாததால் விமர்சனங்களை முன்வைத்து விரோதியாக பார்ப்பார்கள்.

கால சக்கர சுழற்சியில் மாய வலைகள் அறுக்கப்பட்ட பிறகு உண்மைத் தன்மை புரிய வரும்; அப்போது விமர்சனம் செய்தவர்கள் கடந்தகால செயல்களை அறிந்து வருத்தப்படுவார்கள். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த கிரிக்கெட் விளையாட்டைப் பார்க்க கழக ஒருங்கிணைப்பாளர் அவர்கள் சென்றிருக்கிறார்; அதே பாக்ஸில் இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சரின் மருமகன் சபரீசன் அவர்கள், "நான் அஇஅதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் அவர்களை நேரில் பார்த்ததில்லை; அவரை பார்த்து பேச வேண்டும்" என்று தனது விருப்பத்தை உதவியாளர் மூலம் தெரிவித்திருக்கிறார்.
அதன் பிறகு கழக ஒருங்கிணைப்பாளர் அவர்களும் சபரீசன் அவர்களும் அனைவரது முன்னிலையில் கை கொடுத்து மரியாதை நிமித்தமாக ஐந்து நிமிடம் பேசிவிட்டு சென்றிருக்கிறார்கள். இந்நிகழ்வு குறித்து கட்சியில் ஒரு சில சுயநல கூட்டத்தின் தூண்டுதலால் கழக ஒருங்கிணைப்பாளர் அவர்கள் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று விஷமத்தனமான விமர்சனங்களை உருவாக்கி வருகிறார்கள், அதைப்போல, திமுக கட்சியில் சபரீசன் அவர்களை எதிர்த்து, "அவர் அஇஅதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் அவர்களை ஏன் சந்தித்தார் " என்று ஏதேனும் விமர்சனம் வருகிறதா? அது ஏன் என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நமது கழகத்தில் ஒரு சுயநல கூட்டம் நமது கட்சியை அபகரிப்பதற்காகவும் தனது செல்வாக்கை உயர்த்துவதற்காகவும் யாரெல்லாம் கட்சியில் செல்வாக்கு மிக்கவர்களாக இருக்கிறார்களோ அவர்களின் செல்வாக்கை குறைக்க வேண்டும் என்ற சூழ்ச்சியில் இது போன்ற விஷத்தன்மையான கருத்துக்களை கட்சிக்குள் செலுத்தி, ஒரு சில தொண்டர்களை விஷமாக்கி வைத்திருக்கிறார்கள்.
திமுக கட்சி தலைவர்களை கழக ஒருங்கிணைப்பாளர் அவர்கள் பார்த்தார், சிரித்தார், பேசினார் என்று உப்பு சப்பு இல்லாத காரணங்களை பேசி பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி ஒரு சில தொண்டர்களை ஏமாற்றியும் தமிழக மக்களை குழப்பியும் வருகிறார்கள். கழக ஒருங்கிணைப்பாளர் அவர்கள் 46 ஆண்டு காலம் நமது கட்சியின் விசுவாசம் மிக்க உண்மை தொண்டனாக இருந்தார் என்று புரட்சித் தலைவியால் புகழப் பெற்று தமிழக மக்களால் உண்மையானவர் என்று பெயர் வாங்கியவர். தான் சார்ந்த கட்சியின் வளர்ச்சிக்காக கடந்து வந்த பாதைகளில் எவ்வளவு முள்களையும் கற்களையும் கடந்து, வலிகளை சுமந்து கட்சியை வளர்த்திருக்கிறார் என்று மனசாட்சியின் படி சுய அறிவோடு சிந்தித்துப் பார்த்து, விமர்சனங்களை முன் வையுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications