இதுவரை "ஜீரோ" வெற்றி! பேரு மட்டும் "மாஸ்" ஹீரோ! பாஜகவோடு சேர்ந்து ஆப்பு வைத்துக்கொண்ட பவன் கல்யாண்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் ஆந்திர பிரதேசத்தில் போட்டியிடும் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி கவனம் பெற்றுள்ளது.

ஆந்திர சினிமா ரசிகர்களுக்கு ஒரு குணம் உண்டு. ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால் extreme masculine celebration. அதீத கொண்டாட்டங்கள், ஆர்ப்பாட்டமான கொண்டாட்டங்கள், முரட்டு தனமான ஆண் குணங்களை ரசிப்பது போன்ற தீவிர குணம் கொண்டவர்கள். அஞ்சலியை கைவைத்து தள்ளிவிடும் பாலையாவிற்கு விசில் அடிக்க எல்லாம் ஆந்திர சினிமா ரசிகர்களால் மட்டுமே முடியும். தமிழிலோ, மலையாளத்திலோ இது இப்போது சாத்தியம் இல்லை.

pawan kalyan lok sabha election 2024 2024

அப்படிப்பட்ட ஆந்திர சினிமா ரசிகர்களுக்கு.. திரையில் மட்டுமின்றி அரசியலிலும் சினிமா "ஓட்டிக்கொண்டு" இருப்பவர்தான் பவன் கல்யாண். இவரை யாரோ ஆழ் மனதிற்குள் போய்.. நீங்க திரையில் மட்டுமல்ல தரையிலும் ஹீரோதான் என்று நம்ப வைத்து இருப்பார்கள் போல. பிரச்சார மேடையில் கூட சினிமா வசனம் போலவேதான் பேசுவது இவர் வழக்கம்.

பெரிய எக்ஸ் யூவி காரில் 7 பேர் இருக்க இடம் இருந்தும் கூட.. நான் டாப்பில்தான் உட்காருவேன் என்று கார் மேலே அமர்ந்து சினிமா பாணியில் செல்வதெல்லாம் "ஹீரோயிசம்" என்று நினைக்கும் அளவிற்குத்தான் பவன் கல்யாணின் இதுவரையிலான அரசியல் புரிதல்கள் இருந்துள்ளன. அப்படிப்பட்ட பவனுக்கு "சுபம்" போட்டு.. அதாங்க எண்டு கார்டு போட்டு முடிக்க போகிறதாம் ஆந்திர பிரதேச லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்.

நான் அரசியலுக்கு வந்தது தவறு.. சினிமாவில் இருந்திருக்கலாம் என்று ஒரு காலத்தில் புலம்பியவர் இவரின் அண்ணன்.. கலைக்கப்பட்ட பிரஜா ராஜ்ஜிய கட்சி தலைவர் சிரஞ்சீவி. நான் அரசியலுக்கு வந்திருக்கலாம் .. ஆனா வரலை என்று வருவதற்கு முன்பே சுதாரித்து விலகியவர் ரஜினி. இவர்களை எல்லாம் பார்த்து பாடம் படிக்காமல்.. அரசியலில் தலைகீழாக குதித்து.. ஆட்டம் போடும் பவன் கல்யாணுக்கு இந்த தேர்தல் பெரிய பாடம் எடுக்க போவதாக ஆந்திர பிரதேச உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கணிப்பு: ஆந்திர பிரதேச அரசியல் வட்டாரத்தில் பேசியதில்.. ஆந்திராவில் சட்டசபை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பாக ஜெகன் 175 இடங்களிலும் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளார் . சந்திர பாபுவின் தெலுங்கு தேசம் - பாஜக - பவனின் ஜன சேனா கூட்டணியில் ஜன சேனா 21 இடங்களில் நிற்கிறது. காங்கிரஸ் தனியாக சிபிஐ - சிபிஎம் உடன் கூட்டணி வைத்துள்ளது.

லோக்சபா தேர்தலில் பாஜகவின் இதே கூட்டணியில் 2 இடங்களில் ஜன சேனா போட்டியிடுகிறது. மற்ற கணிப்புகளை தள்ளி வைத்துவிட்டு ஜன சேனாவை மட்டும் பார்த்தால் அந்த கட்சிக்கு 6 சதவிகித வாக்கு வங்கி உள்ளது. இதெல்லாம் அவரின் படங்களை பார்க்க வரும் ரசிக சிகாமணிகள் வாக்குகள்.

ஆனால் 2014 மார்ச்சில் கட்சி தொடங்கிய பவன் இதுவரை ஒரு தேர்தலில் கூட வென்றது இல்லை. ஒரு தேர்தல் கூட இவருக்கு வெற்றிகரமான தேர்தல் இல்லை. பாஜக கூட்டணி, பின்னர், கம்யூனிஸ்ட் கூட்டணி , பின்னர் தனித்து போட்டி, அதன்பின் மீண்டும் பாஜக கூட்டணி என்று இவர் போட்ட எந்த கூட்டணியும் வென்றதே இல்லை.

இப்படி தொடர் தோல்விகளை சந்தித்த பவன்.. இந்த லோக்சபா தேர்தலில் ஜீரோ இடங்களை பெறுவார், சட்டசபை தேர்த அதிகபட்சம் போட்டியிட்ட 21 இடங்களில் 1ல் வெல்ல வாய்ப்பு உள்ளது என்றுதான் உள்ளூர் களநிலவர கணிப்புகள் சொல்கின்றன. லோக்சபா தேர்தலில் பெரிய கூட்டணி இருந்தாலும் வெற்றிக்கு ஜன சேனாவிற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள். அந்த கட்சி தலைவர் கார் சீட்டிலும் இருக்க மாட்டார்.. கட்சி நிர்வாகிகள் எம்பி சீட்டிலும் இருக்க மாட்டார்கள் என்கிறார்கள் ஆந்திர அரசியல் நிபுணர்கள்.

என்னதான் மாஸ் ஹீரோவாக இருந்தால் மக்கள் சப்போர்ட் வேண்டுமே. பெரிய வலுவான கூட்டணியாக இருந்தாலும் ஜெகனின் "ரியல் மாஸ்" தோற்றத்திற்கு முன் பவனின் "ரீல் மாஸ்" எடுபடவில்லை என்றுதான் அக்கட தேசத்து அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அண்ணன் போல நான் அரசியலுக்கு வந்தது தவறு.. சினிமாவில் இருந்திருக்கலாம் என்று இவரும் சொல்லாமல் இருந்தால் சரி.

பவனிடமாவது அட்லீஸ்ட் டைனமோ இல்லாத சைக்கிள் இருக்கிறது.. ஆனால் இங்கே தமிழ்நாட்டில் உள்ள ஒரு "ஹீரோவிடம்" சைக்கிளே இல்லை.. அவர் அரசியலுக்கு வந்து என்ன செய்ய போகிறாரோ பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்... அண்ணன் வரார் வழிவிடு!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+