என்னங்க இது? பதறி வந்த மோடி, நிர்மலா, யோகி, அமித் ஷா.. பாஜகவை அலறடித்த "இந்தியா".. என்ன நடந்தது?
சென்னை: எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைக்கப்பட்டு இருப்பதற்கு எதிராக பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவின் டாப் தலைவர்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இந்த கூட்டணி அறிவிக்கப்பட்டு ஒன்றரை வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது. கூட்டணியின் பெயர் அறிவிக்கப்பட்டு இத்தனை நாட்கள் கழிந்து இப்படி திடீரென பாஜகவின் டாப் தலைவர்கள் இதை விமர்சனம் செய்வது கடும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
கூட்டணி பெயர்: கடந்த 7-8 வருடமாக எப்போதும் பாஜகதான் நரேட்டிவ் உருவாக்கும். அதாவது ஒரு விவாதத்தை உருவாக்கும். அதற்கு எதிர்க்கட்சிகள் பதில் மட்டுமே கொடுக்கும். பாஜக அடித்து ஆடும். எதிர்க்கட்சி பீல்டிங் செய்யும். ஆனால் முதல்முறை பேட்டை வாங்கி எதிர்க்கட்சிகள் அடித்து ஆட தொடங்கி உள்ளன. மாறாக பாஜக பீல்டிங் செய்ய களமிறங்கி உள்ளது. அதிலும் நேற்று எதிர்க்கட்சிகள் அடித்த பந்தை பிடிக்க முடியாமல் பாஜக கடுமையாக திணறிக்கொண்டு இருக்கிறது. எதிர்க்கட்சிகள் அடித்த அந்த பந்துதான்.. இந்தியா!

அதன்படி பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றுது. கடந்த கூட்டத்தில் 14 கட்சிகள் பீகாரில் உள்ள பாட்னாவில் கலந்து கொண்ட நிலையில் இந்த முறை 26 கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்டன. ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் இதில் பங்கேற்க முடிவு செய்தன. நேற்று நடந்த இரண்டாம் கட்ட கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மு க ஸ்டாலின், நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, திருமாவளவன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இதில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது.
I - Indian N - National D - Developmental I - Inclusive A - Alliance. மோடிக்கு எதிராக யாரை நிறுத்துவது என்ற குழப்பம் இருந்ததால் இந்தியாவை நிறுத்தலாம் என்று இந்த பெயரை அவர் முன்மொழிந்ததாக கூறப்படுகிறது.
எதிர்ப்பு: எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைக்கப்பட்டு இருப்பதற்கு எதிராக பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவின் டாப் தலைவர்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
என்ன காரணம்?: நேற்று இது தொடர்பாக பேசிய பிரதமர் மோடி, ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி, இந்தியன் முஜாகீதின், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்டவை கூட தங்களின் பெயர்களில் இந்தியா என்பதை கொண்டுள்ளன என கூறியுள்ளார். இதில் இந்தியன் முஜாகீதின் என்பது பயங்கரவாத அமைப்பாகும்.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக மத்திய அரசு தடை செய்துள்ள நநிலையில் இந்திய கிழக்கிந்திய கம்பெனி சுதந்திரத்துக்கு முன்பாக இந்தியாவை சுரண்டியது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி என்பது நாட்டுக்கு நல்லதாக இருக்காது, என்று கூறி உள்ளார்.
இதையடுத்து உபி பிரதமர் யோகி ஆதித்யநாத் செய்த போஸ்டில்.. பெயர் மாற்றுவதால் குணம் மாறிவிடாது என்று இந்தியா என்ற பெயர் மாற்றத்தை விமர்சனம் செய்துள்ளார். இதையடுத்து அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் , அமித் ஷா ஆகியோரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து உள்ளனர். அவர்களின் இந்த திடீர் எதிர்ப்பு கடும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
மணிப்பூர்: எதிர்க்கட்சிகள் கூட்டணிகள் நெருங்கி வரும் நிலையிலும், மணிப்பூர் விவகாரம் உச்சத்தில் இருக்கும் நிலையிலும் பாஜக இந்த விவகாரத்தை கையில் எடுத்து உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா என்ற கூட்டணி உருவாக்கப்பட்ட பின் எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து செயல்பட தொடங்கி உள்ளன.
ஆம் ஆத்மி -காங்கிரஸ் போன்ற வேறுபட்ட கருத்துக்கள் கொண்ட கட்சிகள் கூட இணைந்து செயல்பட தொடங்கி உள்ளன. மணிப்பூர் விவகாரத்தில் இந்தியா கூட்டணி பாஜகவை நாடாளுமன்றத்தில் திணறடித்து உள்ளது. இந்த கூட்டணி வலிமையாக உருவெடுத்து இருக்கும் நிலையில்தான் தற்போது பாஜகவின் டாப் தலைவர்கள் இந்த கூட்டணியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications