சோழர்களை உயர்த்தி பிடிக்கும் பாஜக! செல்லும் இடமெல்லாம் பெருமை பேசும் மோடி! காரணம் இதுதான்
சென்னை: கங்கைகொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழன் முப்பெரும் விழா இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வந்திருக்கிறார். ஆனால் கடந்த காலங்களில் சோழர்களின் பெருமை குறித்து மோடி பல இடங்களில் பேசியிருக்கிறார். இதற்கான காரணம் என்ன? என்பதை இந்த செய்தி விவரிக்கிறது.
இந்திய அரசியல் கட்சிகள் மக்கள் மத்தியில் தங்களை நுழைத்துக்கொள்வதற்கு பல்வேறு யுக்திகளை கையாள்கின்றன. குறிப்பாக தேசிய கட்சிகள் இந்த சவாலை சாதூர்யமாக எதிர்கொள்கின்றன.

காங்கிரஸை எடுத்துக்கொள்ளுங்களேன். அது சுதந்திர போராட்டத்திலிருந்து தொடங்குகிறது. காங்கிரஸிடம் இல்லாத தலைவர்களே கிடையாது. எனவே, அது எளிதாக மக்களிடத்தில் சென்று சேர்ந்துவிடுகிறது. இடதுசாரி கட்சிகளும் அப்படித்தான். ஆனால், பாஜகவுக்கு அப்படியான வாய்ப்புகள் இல்லை. பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-லிருந்து சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர்கள் யார்? என்று கேட்டால் அந்த அமைப்பு சில பட்டியலை தரும். ஆனால் அதற்கான ஆதாரங்களை பெரும்பாலானோர் ஏற்கிறார்களா?
ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு என உறுப்பினர் அட்டை கிடையாது. இந்த அமைப்பில் யார் உறுப்பினர் என்று கண்டுபிடிப்பது கஷ்டம். எனவே ஆர்எஸ்எஸ் சார்பில் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர்கள் இவர்கள்தான் என்பதை உறுதி செய்வதில் இன்றும் பஞ்சாயத்து நீடித்து வருகிறது.
எனவே இந்த அமைப்பு வேறு வழிமுறைகளில் மக்கள் மத்தியில் தங்களை இணைத்துக் கொள்வது. அதாவது பிரபலமான தலைவர்களை பாஜகவும், ஆர்எஸ்எஸ்-ம் தங்களுக்கானதாக வரித்துக்கொள்கிறது. உதாரணத்திற்கு மகாராஷ்டிராவை சொல்லலாம். சிவசேனாவிடம் இருந்த சிவாஜி இப்போது பாஜக வசம் இருக்கிறார்.
அதேதான் இங்கும். தமிழ்நாட்டில், சோழ சாம்ராஜ்ஜியத்தை கையில் எடுப்பதன் மூலமும், சோழர்களின் வரலாற்றையும், அவர்களின் மன்னர்களையும் கையில் எடுப்பதன் மூலம் தமிழக மக்களின் மனிதில் இடம் பிடிக்க பாஜக திட்டமிட்டிருக்கிறது.
கடந்த 2020ம் ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியிருந்தார். இந்த நிகழ்வில் உத்திரமேரூர் கல்வெட்டுகளை பற்றி அவர் பேசியிருந்தார். சோழர் காலத்து ஜனநாயக அமைப்பை இந்த கல்வெட்டு குறிப்பிடுகிறது. எனவே பிரதமர் இது பற்றி பேசியிருந்தார். இதனை தொடர்ந்து, புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டி முடித்து திறக்கப்பட்டது. இந்த விழாவில் செங்கோலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
அந்நிகழ்ச்சியில் பேசிய மோடி, சோழர்களை நீதி, நல்லாட்சி, ஜனநாயக மரபுகள் மற்றும் இந்தியாவின் வளமான கலாச்சாரப் பெருமையின் அடையாளம் என்று கூறியிருந்தார். இது தவிர காசி தமிழ் சங்கமம், சில வெளிநாட்டு பயண உரைகளிலும் சோழர்கள் குறித்து பிரதமர் பேசியிருந்தார். அதன் தொடர்ச்சியாக இன்று முதலாம் ராஜேந்திர சோழன் முப்பெரும் விழாவில் மோடி பங்கேற்றிருக்கிறார்.
ஆக சோழர்களை மையமாக வைத்து தமிழக மக்களை பாஜக கவர நினைக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் சோழர்கள் காலத்தில் வேத மத்தின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது தனிக்கதை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை!












Click it and Unblock the Notifications