அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவி ஏற்பு விழாவிற்கு.. மோடி அழைக்கப்படவில்லையா? என்ன காரணம்?
சென்னை: அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்ட் டிரம்ப்பின் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி ஏன் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்க நாட்டின் அதிபராக வெற்றிபெற்றுள்ள டிரம்ப்.. ஜனவரி 20ம் தேதி அதிபராக பதவி ஏற்க உள்ளார். அன்று விடுமுறை தினம் இல்லை என்பதால் ஜனவரி 20ம் தேதி பதவி ஏற்பு உறுதி செய்யப்படும்.

இப்போது அதிபராக டொனால்ட் டிரம்ப் வென்று இருந்தாலும்...ஜனவரி 20 தேதி அவரை அவருக்கு அதிபருக்கான பவர் இருக்காது. ஆனால் பாதுகாப்பு அதிபருக்கு இணையாக வழங்கப்படும். அதே நாள் அமெரிக்க துணை அதிபரும் பதவி ஏற்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜேடி வான்ஸ் அமெரிக்காவின் துணை அதிபராக பதவி ஏற்க உள்ளார். ஜனவரி 20ம் தேதி விடுமுறை தினம் இல்லை என்பதால் ஜனவரி 20ம் தேதி பதவி ஏற்பு உறுதி செய்யப்படும். அன்று அவரிடம் அணு ஆயுத புட்பால்" மற்றும் "பிஸ்கட்" வழங்கப்படும்.
டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்பு விழா:
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கும் விழா வாஷிங்டன் டிசியில் உள்ள கேபிடல் கட்டிடத்தில் ஜனவரி 20ம் தேதி நடைபெறும், இந்த நிகழ்வில் உலகத் தலைவர்கள் முதல் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் முதல் வணிக அதிபர்கள் வரை உலகெங்கிலும் உள்ளவர்கள் பலர் பங்கேற்கிறார்கள். உலகின் டாப் 1 சதவிகிதத்தினர் மட்டுமே இதில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
இதே விழாவில் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் பதவியேற்பார். முக்கிய உலக வல்லரசுகளுக்கும் இந்தியா உட்பட அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளுக்கும் அழைப்புகள் சென்றுள்ளன. ஆனால் இந்திய அரசுக்கு முறையாக அழைப்பு சென்றுள்ளது. மாறாக இந்திய பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட அழைப்பு போகவில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த டிரம்ப் ஆட்சியில் மோடி - டிரம்ப் நெருக்கமாக நட்பாக இருந்தனர். ஹவுடி மோடி என்று டிரம்ப் - மோடி நிகழ்ச்சியை கூட ஒன்றாக நடத்தினர். அதிலும் சொல்லப்போனால் ஹவுடி மோடி நிகழ்ச்சிதான் 4 வருடங்களுக்கு முன் டிரம்ப் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின்., அதாவது அவர் தோல்வி அடைந்த 2021 அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக இருந்தது. அந்த அளவிற்கு இருவரும் நெருக்கம்.
இந்த முறை டிரம்ப் பெரிதாக மோடி பற்றியும் பேசவில்லை. ஆனால் இந்த முறை அழைப்பே செல்லவில்லை என்று கூறப்படுகிறது. அது உண்மை என்றால் ஏன் அழைப்பு போகவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள நெருக்கம் போய்விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பதவி ஏற்பு:
அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்ட் டிரம்ப்பின் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி ஏன் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், ஜனவரி 20ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பயணத்தின் போது, அமெரிக்க நிர்வாகத்தின் புதிய பிரதிநிதிகளுடனும், புதிய அமைச்சர்களுடனும் ஜெய்சங்கர் சந்திப்பு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications