போர்டிங் பாஸை Blur செய்து போட்டாலும் ஆபத்து தான்.. லைக்ஸுக்காக லைஃப்-ஐ தொலைக்க வேண்டாம்! புது அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டூர் போகும்போது நீங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரும் அந்தப் போர்டிங் பாஸில் இருக்கும் 'பார்கோடு' என்பது வெறும் கோடுகள் அல்ல; அது உங்கள் தனிப்பட்ட தகவல்களின் சுரங்கம் என்கிறார்கள் விமான போக்குவரத்து நிபுணர்கள். அதை ப்ளர் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டாலும் கூட மிகப் பெரிய ஆபத்தாக முடியலாம் என்று எச்சரிக்கிறார்கள். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!

சுற்றுலா செல்வது எப்போதுமே ஒரு குஷிதான். அதிலும் விமான பயணம் என்பது இப்போதும் அரிதாகவே உள்ள நிலையில், பிளைட் ஏறி செல்லும் போது அது நமக்கு உற்சாகத்தையே ஏற்படுத்தும். இதனால் நம்மில் பலரும் ஏர்போர்ட் சென்றவுடன் ஏறியதும் கையில் இருக்கும் போர்டிங் பாஸை ஒரு போட்டோ எடுத்து, இன்ஸ்டாவிலோ அல்லது வாட்ஸ்அப்பிலோ பதிவிடுவது இப்போது டிரெண்டாகிவிட்டது.

Boarding Pass online Flight India

சிக்கல் வரலாம்

ஆனால், இந்த ஒரு போட்டோ உங்கள் ஒட்டுமொத்தப் பயணத்தையே ரத்து செய்யக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அட நான் அதில் உள்ள பார் கோர்ட்டை ப்ளர் (Blur) செய்து தான் போடுகிறேன் என நீங்கள் சொல்லலாம். ஆனால், அதுவும் கூட பத்தாதாம்.! இதுபோல போர்ட்டிங் பாஸ்ஸை போட்டோவாக எடுத்துப் போடும் போது பல சிக்கல்கள் வரலாம் என எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள்!

ஏர்லைன் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் இது குறித்துக் கூறுகையில், "இந்த பார்கோடுகள் சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் தரநிலைப்படி உருவாக்கப்பட்டவை. ஒரு சாதாரண ஸ்மார்ட்போன் ஆப் மூலமே இதை யாராலும் எளிதாக ஸ்கேன் செய்துவிட முடியும்" என்கிறார்.

என்ன தகவல் இருக்கிறது

இந்த பார்கோர்ட்டில் பாஸ்போர்ட்டில் உள்ளது போன்ற உங்கள் முழுப் பெயர், ஆறு எழுத்துக்கள் கொண்ட பிஎன்ஆர் எனப்படும் முன்பதிவு நம்பர், நீங்கள் அமரும் இருக்கை எண் மற்றும் விமான விவரங்கள், உங்கள் இமெயில் ஐடி மற்றும் போன் நம்பர், நீங்கள் அடிக்கடி பயணம் செய்பவர் என்றால், உங்கள் மைலேஜ் புள்ளிகள் என எல்லாமே இருக்கும்.

உங்களின் கடைசிப் பெயர் மற்றும் அந்தப் பார்கோடில் இருக்கும் பிஎன்ஆர் எண் மட்டும் கிடைத்தால் போதும், யார் வேண்டுமானாலும் ஏர்லைன்ஸ் இணையதளத்திற்குள் புகுந்து உங்கள் பயண விவரங்களை மாற்ற முடியும்.

எச்சரிக்கை

இதை எடுத்தால் உங்களின் ரிட்டன் டிக்கெட்டை உங்களை அறியாமலேயே அவர்கள் ரத்து செய்ய வாய்ப்புள்ளது. நீங்கள் ஆசைப்பட்டுத் தேர்ந்தெடுத்த விண்டோ சீட்டை மாற்றிவிட்ட முடியும். எல்லாவற்றையும் விட உங்கள் கிரெடிட் கார்டின் கடைசி நான்கு எண்கள் மற்றும் பாஸ்போர்ட் விவரங்களைக் கூடச் சில சிஸ்டம்கள் மூலம் அவர்கள் பார்க்க முடியும். நீங்கள் ஊரில் இல்லை என்பதை உங்கள் போர்டிங் பாஸ் ஊருக்கே தண்டோரா போட்டுச் சொல்லிவிடும். நீங்கள் எப்போது திரும்புவீர்கள் என்பதும் திருடர்களுக்குத் துல்லியமாகத் தெரிந்துவிடும்.

ப்ளர் செய்வது பத்தாது

ஆனாலும், நான் ஊருக்குப் போவதை போட்டோவாக போட்டே தீருவேன் என்பவர்கள் இந்த விஷயங்களைப் பாலோ செய்தால் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கலாம்.

  • முதலில் பார்கோடை மறைக்கவும்.. போட்டோவில் பார்கோடை டிஜிட்டல் முறையில் ப்ளர் செய்தால் அதை ஈஸியாக ரிவர்ஸ் செய்துவிட முடியும். எனவே, ஒரு காகிதத்தையோ அல்லது உங்கள் பாஸ்போர்ட்டையோ அதன் மேல் வைத்து மறைத்த பின் போட்டோ எடுங்கள்.
  • 6 இலக்க பிஎன்ஆர் நம்பர் எக்காரணம் கொண்டும் போட்டோவில் தெரியக்கூடாது.
  • உங்கள் பயணத்தை முடித்துவிட்டுப் பாதுகாப்பாக வீடு திரும்பிய பிறகு அந்த போட்டோக்களாகப் பதிவிடுவது புத்திசாலித்தனம்.
  • விமானப் பயணம் முடிந்ததும் போர்டிங் பாஸை அப்படியே குப்பையில் போடாதீர்கள்; அதைச் சிறு துண்டுகளாகக் கிழித்துப் போடுங்கள்.

தொழில்நுட்பம் வளர வளர நம்முடைய விழிப்புணர்வும் வளர வேண்டும். பாதுகாப்பு என்பது வெறும் அரசு பொறுப்பு மட்டுமல்ல; அது நம் ஒவ்வொருவரின் விழிப்புணர்விலும் இருக்கிறது. எனவே, உங்கள் பயணம் குறித்த போட்டோவை பதிவிடும் முன்பு ஒருமுறைக்கு இரு முறை யோசியுங்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+