போயஸ் தோட்டத்தில் எல்லாரும் ரஜினி பேட்டியை கவனிச்சோம்.. ஆனால் ரசிகர்கள் கவனித்தது என்ன தெரியுமா?
சென்னை: ரஜினிகாந்த் நேற்றைய தினம் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு விஷயத்தை ரசிகர்கள் கவனித்துள்ளனர். தற்போது அது குறித்த பேச்சாகவே இருக்கிறது.
Recommended Video
ரஜினிகாந்த்தை அரசியலுக்கு வருமாறு அவரது ரசிகர்கள் அழைத்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் அரசியலுக்கு வருவதாக அறிவித்த அவர் திடீரென பின்வாங்கினார். அதாவது கொரோனா காலகட்டத்தை கருத்தில் கொண்டு தான் அரசியலுக்கு வரும் எண்ணத்தை கைவிடுவதாக அறிவித்தார்.
இதனால் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றமடைந்தனர். இந்த நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பேசப்படாமல் இருந்து வந்தது. ஆனால் நேற்று அவர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார்.

அரைமணி நேரம்
சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதன் பின்னர் போயஸ் தோட்டம் சென்ற ரஜினிகாந்த் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அவர் செய்தியாளர்களை பின்னோக்கி செல்லுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

செய்தியாளர்கள்
அவ்வாறு செய்யாவிட்டால் தான் உள்ளே செல்வதாக தெரிவித்தார். உடனே் செய்தியாளர்கள் ரஜினி கூறியது போல் நடந்து கொண்டனர். இதையடுத்து அவர் ஆளுநர் ரவியை சந்தித்தது ஏன் என்பது குறித்து தெரிவித்தார். ரஜினியின் டெல்லி பயணம், ஆளுநருடனான சந்திப்பு, இவற்றை வைத்து அரசியல் வட்டாரத்தில் பல கருத்துகள் வலம் வந்தன.

இரட்டை இலை சின்னம்
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி ரஜினியை முன்னிறுத்தி 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அரசியல், விமர்சனங்கள், சந்திப்புகள் இவற்றையெல்லாம் தாண்டி ரசிகர்கள் கவனித்த விஷயம் ரஜினியின் கூலிங்கிளாஸ்.

ரஜினிகாந்த்
வழக்கமாக பிளெய்ன் கண்ணாடியை அணிந்திருந்த ரஜினிகாந்த் தற்போது புதிதாக கூலிங் கிளாஸ் அணிந்துள்ளார். ஆளுநருடனான சந்திப்பு நிகழ்ச்சியின் போதும் அதே கூலிங் கிளாஸ் அணிந்திருந்தார். வெயிலுக்காக கூலிங் கிளாஸ் அணிவது வழக்கமான ஒன்று என்றாலும் தொடர்ந்து ரஜினி கூலர் அணிந்து வலம் வருவது ரசிகர்களுக்கு புதிதாக இருந்தது. மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் அவர் அணிந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இது உண்மையா என தெரியவில்லை. மேலும் மருத்துவர்கள் ஏன் அறிவுறுத்தினார்கள் என்பதும் தெரியவில்லை.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications