சபரிமலைக்குள் பெண்கள் போகலாமா? போகக் கூடாதா?.. பளீச்சினு சொல்லுங்க தலைவா!
Recommended Video

சென்னை: சபரிமலைக்குள் பெண்கள் போகலாமா போகக் கூடாது என்பது குறித்து ரஜினியின் நிலைப்பாட்டை அவர் தெளிவுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தற்போது சபரிமலை விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ஐப்பசி மாத நடை திறப்புக்கு பின்னர் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் பிரபலங்களின் நிலைப்பாடு குறித்து அறிய மக்கள் காத்து கிடக்கின்றனர்.
எல்லா விவகாரத்திலும் ரஜினியின் கருத்து என்பது பெரிதாவே பார்க்கப்படுகிறது.

வரவேற்பு
அதுபோல் சபரிமலை விவகாரத்திலும் அவரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் அவர் கூறுகையில் சபரிமலை குறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்பை நான் வரவேற்கிறேன்.

பூசாத மாதிரி
பெண்களுக்கான சமவுரிமை தரப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் சில கோயில்களின் ஐதீகத்தை பின்பற்ற வேண்டும் என்று குழப்பமான கருத்தையே தெரிவித்து சென்றார். ஈயம் பூசின மாதிரியும் பூசாத மாதிரியும் அவரது கருத்து உள்ளது.

கூறியதை யாரும் எதிர்பார்க்கவில்லை
சபரிமலை தீர்ப்பை அவர் வரவேற்பது என்றால் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் கோயில் மரபுகளை காக்க பெண்களை அனுமதிக்க கூடாது என்று கூறி விட வேண்டும். அதை விடுத்து இரட்டை நிலைப்பாடு போல் ஒரு பதிலை கூறியதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

திருப்திப்படுத்தாத பதில்
இதுமட்டுமல்ல எந்த விவகாரத்திலும் கழுவுற மீனில் நழுவுற மீனாகவே உள்ளார். பொட்டில் அடித்தாற் போல் எந்த பதிலையும் அவர் கூறவில்லை, அரசியலுக்கு வரவிருக்கும் ரஜினி இதுபோல் எதையும் எதிர்க்காமல் பட்டும் படாமல் பேசினால் எப்படி. அவரது வாய்ஸ் எடுபடும் என்கிற நிலையில் ஒரு நல்ல பதிலை சொல்லியிருக்க வேண்டாமா. யாரை திருப்திப்படுத்த இந்த பதிலை கூறியுள்ளார்.

தலையீடு
காவிரி விவகாரத்தில் இதே நிலைதான். தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினைகள், பெண்ணுரிமை குறித்த பிரச்சினைகளில் எந்த தலையீடும் செய்யாமல் இருப்பது ரஜினி போன்ற தலைவர்களுக்கு அழகா என்பதை அவர் சுய பரிசோதனை செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக பாஜக தொடர்புடைய விவகாரங்களில் குழப்பமான கருத்துகளை ரஜினி கூறுவதை பார்த்தால் அவரது பின்புலத்தில் பாஜக உள்ளது என்ற கருத்து உண்மையாகிவிடுமே!.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications