ராஜ்நாத் சிங் ஏன் கருணாநிதியை 30 நிமிடம் புகழ்ந்தார்? ஸ்டாலின் முன் ரஜினிகாந்த் உடைத்த ரகசியம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருணாநிதி நினைவாக ரூ.100 நாணயம் வெளியிடப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கருணாநிதியை புகழ்ந்து பேசினார். இந்நிலையில் தான் ராஜ்நாத் சிங் ஏன் கருணாநிதியை அரை மணிநேரம் வரை புகழ்ந்து பேசினார்? என்பது பற்றி நடிகர் ரஜினிகாந்த், முதல்வர் ஸ்டாலின் முன்பு சொன்ன கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியுடனான தனது நினைவுகளை 'கலைஞர் எனும் தாய்' எனும் பெயரில் நூலாக எழுதியுள்ளார் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எவவேலு. இந்த நூல் வெளியீட்டு விழா இன்று மாலையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.

rajnikanth stalin

இந்த விழாவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். அதேபோல் நடிகர் ரஜினிகாந்தும் பங்கேற்றார். அதன்பிறகு அமைச்சர் எவ வேலு எழுதிய ‛கலைஞர் எனும் தாய்' நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்று கொண்டார். அதன்பிறகு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அப்போது அவர் முதல்வர் ஸ்டாலின் பற்றி பெருமையாக பேசினார். இதுதொடர்பாக ரஜினிகாந்த் பேசியதாவது:

இந்த விழாவின் நாயகராக கருணாநிதி இருக்கிறார். அவருடன் அதிக பழக்கம் உள்ளது. எவ வேலுவுடன் எனக்கு அதிக பழக்கம் கிடையாது. திமுகவில் ஆற்காடு வீராசாமி, துரைசாமி, டிஆர்பாலு, முரசொலி மாறன் உள்ளிட்டவர்களுடன் அதிகம் பழகி இருக்கிறேன். மற்றவர்களுடன் அவ்வளவு பழக்கம் இல்லை. ஆனால் திருவண்ணாமலையில் லால் சலாம் சூட்டிங்கிற்காக 3 முறை சென்றிருந்தேன்.

கல்லூரி கெஸ்ட்ஹவுஸில் கருணாநிதி தங்கும் இடத்தை எனக்கு தந்தார் எவ வேலு சொந்த பிள்ளை போல் அன்பாய் பார்த்து கொண்டார். கல்லூரி எப்படி இருக்கிறது என்றால் சுத்தமாக இருந்தது. அத்தனை மாணவர்கள் இருந்தாலும் சத்தம் வராது. சமையல்காரர் ஒருவர் இருக்கிறார். அவர் சமைத்த மீன் குழம்பை வாழ்நாளில் மறக்கவே மாட்டேன். இதனை எவ வேலு சாப்பிட மாட்டார். அவர் ஏழையை விட மோசமாக சாப்பிடுகிறார். அதனால் தான் அவர் உடல் நன்றாக இருக்கிறது. அவருக்கு கைமாறு செய்யும் வகையில் இந்த விழா உள்ளது.

விழாவுக்காக என்னை பார்க்க வேண்டும் என்று கூறினார். நான் கல்யாணம் உள்ளிட்ட ஏதோ விசேஷத்துக்கு அழைக்க வருகிறார் என நினைத்தேன். ஆனால் அவர் புத்தகம் எழுதியதை கூறி வெளியீட்டு விழாவுக்கு அழைத்தார். காவிய நாயகன் எனது அருமை நண்பர், அமரர் கருணாநிதி பற்றி பேச வேண்டும்.

ராஜ்நாத் சிங்கே அரைமணிநேரம் பேசியுள்ளார் என்றால் அது அவராகவே பேசியிருக்க மாட்டார். மேலிடத்தில் இருந்து ஒரு உத்தரவு வந்திருக்கும். அதனால் கருணாநிதி எல்லோராரின் பாராட்டிலும் வாழ்ந்த மனிதர். அவர் ரொம்ப அபூர்வம். நாம் அனைவரும் சாதி, மதம், பெயர், மனைவி பிள்ளை, 10 முதல் 25 உறவினர்கள் என மொத்தமே ஒரு 50 பேருடன் வாழ்க்கை முடித்து விடுவோம். 50 பேர் முன்பு சந்தோஷமாக வாழ்ந்து செத்து போய் விடுகிறோம்.

ஆனால் சிலர் தான் ஒரு இனத்துக்கு, சமூகத்துக்கு, சமூக நன்மைக்காக போராடி பாடுபட்டுள்ளனர். அதில் கருணாநிதி மிகவும் முக்கியமானார். அவர் சந்தித்த சோதனைகள, விமர்சனங்கள் வேறு யாராவது எதிர்கொண்டு இருந்தால் காணாமல் போய் இருப்பார்கள். விமர்சனங்கள் தேவை. அது மழை போல் இருக்க வேண்டும். புயல் மாதிரி இருக்க கூடாது. புயல் மாதிரி இருந்தால் மரம் போல் சாய்ந்து விடும். ஆனால் கருணாநிதி ஆலமரம். வேர் ரொம்ப ஸ்ட்ராங்க். அவருடைய உடன்பிறப்புகள் வேர் ரொம்ப ஆழம். ரொம்ப ஸ்ட்ராங்க. யாராலும் அசைக்க முடியாது.

ஆனால் 5 வருடம் கட்சி தலைமை இல்லாமலே கட்சியை காப்பாற்ற சிலர் திண்டாடுகிறார்கள். இதனால் ஸ்டாலின் செய்தது சாதாரண விஷயம் அல்ல. கருணாநிதியை பெரிய பெரிய மகான் என்று கூறலாம். அவர் இறந்த பிறகு புகழ் அதிகரித்து கொண்டே உள்ளது. பாரதியார் இறந்த போது 15 பேர் கூட இல்லை. ஆனால் இன்று அவரது புகழ் அதிகரித்துள்ளது. அதேபோல் தான் கருணாநிதியும். கருணாநிதி தொடர்பாக புத்தகம் மட்டுமல்ல படமும் எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். ஒருவரை விமர்சனம் செய்யலாம். ஆனால் மனதை நோகடிக்காதீங்க. மாறாக நடந்து கொண்டால் பிரஸை சந்திக்க மாட்டார்கள். பிரஸை சந்திக்க கருணாநிதி அஞ்சியது இல்லை. ‛கலைஞர் எனும் தாய்' நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது'' என்றார்.

முன்னதாக ராஜ்நாத் சிங் கடந்த 18ம் தேதி சென்னையில் கருணாநிதி நினைவாக 100 ரூபாய்நினைவு நாணயம் வெளியிடப்பட்டது.அதனை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். அப்போது ராஜ்நாத் சிங்,‛‛இந்தியாவின் டைட்டன் போன்றவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.. வேற்றுமையில் ஒற்றுமையைப் பேணிக்காத்தவர்.. கூட்டாட்சி தத்துவத்திற்கு அரும்பாடுபட்டவர்.. இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு ஏற்படாமல் பாதுகாத்தவர் கருணாநிதி. கருணாநிதியின் அரசியல் பயணம் போராட்டம், துணிச்சல் மிக்கதாக இருந்தது. கருணாநிதி மிகச் சிறந்த ஒரு நிர்வாகி.. மத்தியில் வெற்றிகரமான கூட்டணி ஆட்சிக்கு வித்திட்டவர் கருணாநிதி. கூட்டாட்சி தத்துவத்தைக் காப்பதில் பெரும் பங்கு வகித்தவர் கருணாநிதி.

பஞ்சாப் முதல் தமிழகம் வரை அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்த காலத்தில் தலைவராக உருவெடுத்தவர் கருணாநிதி. ஆளுநர் மட்டுமே தேசியக் கொடியை ஏற்றுவார். ஆனால், மாநில முதல்வர் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றும் உரிமையைப் பெற்று தந்தவர் கருணாநிதி. அதன்படி தமிழ்நாட்டில் முதல்முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றியவர் கருணாநிதி தான். கருணாநிதி ஒரு மாநிலத்தின் அரசியல்வாதி இல்லை. தேசத்தின் தலைவராகப் பார்க்கப்பட்டார். பல பிராந்திய கட்சிகள் மறைந்திருந்தாலும் திமுக இன்று வரை பலமாக இருக்க வித்திட்டவர் கருணாநிதி. வரலாற்றில் அழிக்கவே முடியாத பல சாதனைகளைப் புரிந்தவர்'' என பாராட்டி பேசியிருந்தார். இந்நிலையில் தான் பாஜக மேலிடம் கூறியதை தொடர்ந்து தான் ராஜ்நாத்சிங் அப்படி பேசியதாக தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+