சிறையில் இருந்து வந்த கணவன்.. மனைவியுடன் தகாத உறவில் இருந்த இளைஞர்.. நண்பர்களுடன் சேர்ந்து பகீர்
சிறையில் இருந்து வெளியே வந்த கணவன், மனைவியுடன் தகாத உறவில் இருந்த இளைஞரை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுசென்னை : சிறையில் இருந்து வெளியே வந்த கணவன், மனைவியுடன் தகாத உறவில் இருந்த
சென்னை : சிறையில் இருந்து வெளியே வந்த கணவன், மனைவியுடன் தகாத உறவில் இருந்த இளைஞரை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை நீலாங்கரை, சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் வயது (22). இவரை கண்மூடி முருகன் என்று அப்பகுதி மக்கள் அழைப்பார்கள்.
இந்நிலையில் துரைப்பாக்கம் மேட்டுகுப்பம் வெங்கடேஸ்வரா அவின்யூவில் ஒரு இடத்தில் கட்டுமான பணி நடந்து வருகிறது. அந்த இடத்தில் முருகன் உயிரிழந்து கிடந்தார்.

போலீசார் வழக்கு
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், முருகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் கொலை செய்தது யார் என விசாரணை மேற்கொண்டனர்.

மது அருந்தியுள்ளனர்
அதில், முருகன் என்கின்ற கண்மூடி முருகன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், நீலாங்கரை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்துள்ளது. . மேலும் இறந்து கிடந்த இடத்தில் கண்மூடி முருகன் சிலருடன் வந்து மது அருந்தியதாகவும், அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கண்மூடி முருகனை குத்தி கொலை செய்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

தீவிர விசாரணை
இதனிடையே சம்பவத்தன்று அபினேஷ் என்பவர் முருகனை மது அருந்த அழைத்து வந்திருக்கிறார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த அபினேஷிடம் போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினார்கள்.

8 பேர் கைது
விசாரணையில், ஒரு வழக்கில் அபினேஷ் சிறை சென்றபோது, அபினேஷின் மனைவியுடன் முருகன் தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த அபினேஷ், நண்பர்களின் உதவியுடன் முருகனை மது அருந்த அழைத்து கத்தியால் குத்தி கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அபினேஷ் உட்பட அவரது நண்பர்கள் 8 பேரை கைது செய்த போலீசார், முக்கிய குற்றவாளிகளான இருவரை தேடி வருகிறார்கள்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications